India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணிப்பூரில் பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதல்வர் பிரேன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் துரதிஷ்டவசமானது எனக் கூறிய அவர், சம்பவம் தொடர்பாக ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். முன்னதாக, மணிப்பூர் முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் ஜிரிபாம் சாலையில் சென்றபோது, திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில் பாதுகாப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம், தருமபுரி, வேலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, தேனி, குமரியில் இடியுடன் லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெயிலில் காய்ந்து கட்சிப் பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜனை பாஜக கைவிட்டுவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா பாதுகாப்புடன் இருப்பதாக மோடி தேர்தல் பரப்புரை செய்த நிலையில், அவர் பதவியேற்ற நாளில் தீவிரவாதிகள் 10 பேரை கொன்றுள்ளதாகவும், யார் மருத்துவராக வேண்டும் என்பதை பாஜக தான் முடிவு செய்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இணைய வங்கி சேவையான NEFT / RTGS வாயிலாக மின் கட்டணத்தை பாதுகாப்பாக செலுத்தும் வசதியை, தமிழக மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. நுகர்வோர் தங்களுடைய வங்கி இணையக் கணக்கில் TANGEDCO-வை (குறியீட்டு எண்: TNEB + நுகர்வோர் எண்) பயனராக பதிவு செய்யவும். TANGEDCO-வின் IFSC Code: CNRB0000911 Or IDIB000A089. சரியான மின் கட்டணத்தை பதிவு செய்தபின், பரிவர்த்தனைக்கான ரசீதை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை பணிக்காக கடந்த ஆண்டு ஜூலை முதல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்து நீண்ட நாள்களாக காத்திருந்த சுமார் 2 லட்சம் பேருக்கு புதிய அட்டை வழங்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் இனி அரசு திட்டங்களை பெறலாம்.
T20 WC போட்டியில் கோலி தொடக்க வீரராக களமிறங்குவது, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது. அயர்லாந்து, பாகிஸ்தானுக்கு எதிராக முறையே 1,4 ரன் மட்டுமே எடுத்தார். கோலி தொடக்கத்தில் அவுட் ஆகுவதால், மிடில் ஆர்டரில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால், ஓப்பனிங்கில் ரோஹித், ஜெய்ஸ்வால், மிடில் ஆர்டரில் கோலி இறங்கினால் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரியனை ஆய்வு செய்ய, இஸ்ரோ கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆதித்யா எல்1 விண்கலத்தை ஏவியது. விண்வெளியில் 127 நாட்கள் பயணித்து, கடந்த ஜனவரி மாதம் சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளியில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த மே மாதத்தில் சூரியனின் இயங்குநிலை புகைப்படங்களை பதிவு செய்து, ஆதித்யா எல்1 விண்கலம் பூமிக்கு அனுப்பியது. அந்த புகைப்படங்களை, இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளது.
பிரதமரை நேரில் சந்தித்து தமிழீழம் கேட்கப்போவதாக, மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், தான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் தன்னை கொன்று விடுவார்கள் என்றார். இலங்கை தமிழர்களை கொன்றவர்களுக்கு தமிழர்கள் வாக்களித்திருப்பது வருத்தம் எனவும், அதனால்தான், அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்காக இன்னும் அதிகமாக உழைக்க விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, முதல் உத்தரவாக விவசாயிகளுக்கான உதவித் தொகையை விடுவிக்கும் கோப்பில் கையெழுத்திட்டார். இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், புதிய அரசின் முதல் முடிவு விவசாயிகளின் நலனுக்கான அர்ப்பணிப்பைக் காட்டுவதாகவும், விவசாயிகளுக்காகவே தங்களது அரசு செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.
பிரேமலு படத்தின் மூலம் இளைஞர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை மமிதா பைஜு. பேட்டி ஒன்றில் பேசிய மமிதா, தான் சினிமாவில் நடிப்பதை நினைத்து, இன்னமும் தனது பெற்றோர் சிறிது பதற்றத்தை உணர்வதாக தெரிவித்துள்ளார். ஒரு சில படங்கள் பார்த்த பின், கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை அது மனதில் நிற்கும் என்பதால், ஹாரர் படங்களை பார்க்க மாட்டேன் என கூறியுள்ளார். ஊர்வசியும், சோபனாவும் தனது இன்ஸ்பிரேஷன் என நெகிழ்ந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.