News June 10, 2024

2.Oவில் கற்ற பாடம் 3.Oவில் கைகொடுக்குமா?

image

மோடி தலைமையிலான 2.O அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் இருந்தபோது தான், இந்தியாவை உலுக்கிய ஒடிஷா ரயில் விபத்தை தொடர்ந்து, ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் அடுத்தடுத்து விபத்துகள் அரங்கேறின. இதனால், அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என கோரிக்கையும் எழுந்தது. ஆனால், அதுகுறித்து பாஜக மவுனம் காத்த நிலையில், தற்போது 3.O அமைச்சரவையிலும் ரயில்வே துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

News June 10, 2024

நடிகர் சார்லி வீட்டு திருமணத்தில் முதல்வர்

image

தமிழ் சினிமாவில் காமெடியன், குணச்சித்திர நடிகர் என பல திரைப்படங்களில் நடித்தவர் சார்லி. இவரது இளைய மகன் அஜய் தங்கசாமிக்கும், பெர்மிசியா டெமி என்பவருக்கும் சென்னையில் நேற்று காலை திருமணம் நடந்தது. இதையடுத்து நேற்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமண விழாவில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

News June 10, 2024

இதென்ன வடிவேல் படமா? – மாணிக்கம் தாகூர்

image

விஜய பிரபாகரனின் தேர்தல் தோல்விக்கு பிறகு பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘ஒரு சின்ன பையன் முதல் முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அவர் ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?’ என கூறியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ‘இதென்ன வடிவேலு படமா? நாடாளுமன்ற தேர்தல். வேண்டுமானால் அவர் சட்டப் போராட்டம் நடத்தட்டும்’ எனக் கூறியுள்ளார்.

News June 10, 2024

நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு

image

*நிர்மலா சீதாராமன் – நிதித்துறை
*குமாரசாமி – எஃகு மற்றும் கனரகத் தொழில்துறை
*அன்னப்பூர்ணா தேவி – மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை
*ராம்மோகன் நாயுடு – விமானப் போக்குவரத்துத் துறை
*மன்சுக் மாண்டவியா – தொழிலாளர் நலத்துறை
*கிரிராஜ் சிங் – ஜவுளித்துறை
*ஜோதிர் ஆதித்ய சிந்தியா – வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாடு
*சி.ஆர்.பாட்டீல் – நீர்வளம்
*சிராக் பஸ்வான் – இளைஞர் நலன், விளையாட்டுத்துறை.

News June 10, 2024

மத்திய அமைச்சரவை இலாகா விவரம் வெளியீடு

image

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், மத்திய அமைச்சர்களுக்கான இலாகா விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாதுகாப்புத்துறை ராஜ்நாத்துக்கும், வெளியுறவுத்துறை ஜெய்சங்கருக்கும், ரயில்வே துறை அஸ்வினி வைஷ்ணவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

News June 10, 2024

பிரதமர் அலுவலகம் மக்களுக்கானது: மோடி

image

2047இல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய 24 மணி நேரமும் உழைப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் பேசிய அவர், அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று ஒருபோதும் நான் நினைத்தது இல்லை என்றார். மேலும், 2014ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம், பிரதமர் அலுவலகத்தை மக்களுக்கான அலுவலகமாக மாற்றியுள்ளதாகவும் அவர் உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்தார்.

News June 10, 2024

மத்திய அமைச்சரவை இலாகா விவரம் வெளியீடு

image

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், மத்திய அமைச்சர்களுக்கான இலாகா விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, நிதின் கட்கரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே துறையின் இணை அமைச்சர் பதவி, ஹர்ஸ் மல்ஹோத்ரா மற்றும் அஜய் தம்தாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

News June 10, 2024

‘ராயன்’ ரிலீஸ் தேதி வெளியானது

image

தனுஷின் 50வது படமான ‘ராயன்’ படத்தை அவரே இயக்கி, நடிக்கவும் செய்துள்ளார். இப்படத்தில் தனுஷுடன் பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படம் ஜூலை 27ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 10, 2024

புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ₹1000-க்கு விண்ணப்பிக்கலாம்

image

மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இனி புதிய ரேஷன் அட்டை பெறுபவர்களும் ₹1000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதன்பின், தகுதியான குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். அதில் தகுதிபெறும் குடும்பத் தலைவிகளை மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைத்து, ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் இருந்து ₹1000 வழங்கப்படும் எனத் தெரிகிறது.

News June 10, 2024

பாஜக வேட்பாளர் தோற்றதால் 2 பேர் தற்கொலை

image

தேர்தலில் தலைவர்கள் தோல்வியுற்றால் சில தொண்டர்கள் மொட்டை அடிப்பதாக சவால் விடுவார்கள். இதற்கு ஒருபடி மேலே சென்று, விரலை வெட்டிக் கொள்பவர்களும் உண்டு. ஆனால், மகாராஷ்டிராவின் பீட் மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளர் பங்கஜா முண்டே தோல்வி அடைந்ததற்காக 2 பேர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சரத்பவாரின் என்சிபி வேட்பாளர் பஜ்ரங் மனோகர் வெற்றி பெற்றுள்ளார்.

error: Content is protected !!