News June 11, 2024

ஒரு மணி நேரமாக சென்னையை மிரட்டும் மழை

image

சென்னையில் கடந்த ஒரு மணி நேரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கிண்டி, நந்தனம், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, தேனாம்பேட்டை, தி.நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர், நுங்கம்பாக்கம், ஐசிஎஃப் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News June 11, 2024

பதவியேற்பு விழாவில் குவியும் தெலுங்கு திரை பிரபலங்கள்

image

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி தொடங்கி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில், முன்னணி தெலுங்கு திரை பிரபலங்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜூன், மோகன்பாபு, சிரஞ்சீவி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

News June 11, 2024

இந்து மக்கள் கட்சியில் இருந்து உடையார் நீக்கம்

image

தமிழகத்தில் கலவரத்தை தூண்டினால் தான் பாஜக வளரும் என்று சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகி உடையார் மீது, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, அவரது பேச்சுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து எனக் கூறி, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

News June 11, 2024

‘மோடியின் குடும்பம்’ முழக்கத்தை நீக்குக

image

NDA கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சமூக வலைதளங்களில் ‘Modi Ka Parivar’ (மோடியின் குடும்பம்) என்ற முழக்கத்தைச் சேர்த்துள்ளவர்கள், அதை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், காட்சிப் பெயர் மாறலாம், ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு குடும்பம் என்ற நமது பிணைப்பு வலுவாகவே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ( இரவு 11 மணி வரை) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, மழை பெய்யும்போது மரத்தடியில் பொதுமக்கள் நிற்க வேண்டாம். சாலையில் மழைநீர் தேங்கி இருந்தால் பார்த்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 11, 2024

மோடியை பிரியங்கா காந்தி வென்றிருப்பார்

image

பிரியங்கா காந்தி மட்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டிருந்தால், 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடியை வென்றிருப்பார் என ராகுல் காந்தி கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய அவர், இதை தான் ஆணவத்தில் கூறவில்லை எனவும், இந்திய மக்கள் பிரதமரின் அரசியலில் மகிழ்ச்சியடையவில்லை என அவருக்கு செய்தி அனுப்பியுள்ளனர் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

News June 11, 2024

வடக்கு திசையில் “தலை” வைத்து படுக்காதீங்க

image

ஆன்மிகத்தை பொறுத்தவரை வடக்கு திசையானது, இறை வழிபாட்டுக்குரிய திசையாகவே கருதப்படுகிறது. இந்த வடக்கு திசையில்தான், குரு உபதேசம் பெற முடியும் என்பார்கள். ஈசனின் திருக்கயிலாயமும் வடக்கு புறத்தில்தான் அமைந்துள்ளது. அதனால்தான், வடக்கு திசையில் தலை வைத்து படுக்க கூடாது என்கிறார்கள். அதேபோல் வடக்கு திசை குபேரனுக்கு உரியது. இந்த திசையில் படுத்தால், செல்வமிழந்து வறுமை வரும் என்பது மக்களின் நம்பிக்கை.

News June 11, 2024

சமூக வலைதளங்களில் Profile Pictureஐ மாற்றிய பிரதமர்

image

இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து 3ஆவது முறையாக பெரும்பான்மை வழங்கி இருப்பது சாதனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தேர்தல் பிரசாரத்தின் போது சமூக ஊடகம் மிகப்பெரிய பலமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பேஸ்புக், X உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர் Profile Pictureஐ மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 11, 2024

MSME நிறுவனங்களுக்கு அரிய வாய்ப்பு

image

அடுத்த 5 ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான (MSME) கடன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவுள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில், வங்கியின் மொத்த SME கடன்கள் 20% அதிகரித்து ₹4.33 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், MSME தொழில் நிறுவனங்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கடன்களை வழங்க ஸ்டேட் பேங்க் முன் வந்துள்ளது.

News June 11, 2024

மாணவர்களின் வருகையை கண்காணிக்க உத்தரவு

image

பள்ளி மாணவர்களின் வருகை கண்காணிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன தொழில்நுட்ப ஆய்வகங்களின் செயல்பாட்டையும் கண்காணிக்க வேண்டும். மேலும், மாவட்டக் கல்வி மதிப்பாய்வை அவ்வப்போது நடத்த வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டை மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!