News June 13, 2024

இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத நடிகர் விஜய்யின் தவெக கட்சி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் தவெக போட்டியிடப் போவதில்லை என அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். 2026 வரை மக்கள் பணி மட்டுமே செய்வோம் என்றும், மக்களும், கட்சி நிர்வாகிகளும் குழப்பிக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

News June 13, 2024

அமெரிக்க அணி கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருந்தால்…

image

டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவிடம் அமெரிக்கா நேற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி குறித்து அமெரிக்க அணி கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் கூறியபோது, தங்களது அணி 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டதாகவும், கூடுதலாக 20 ரன்கள் சேர்த்து 130 ரன்கள் குவித்து இருந்தால் போட்டி முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

News June 13, 2024

அண்ணாமலையின் மேலிட செல்வாக்கு

image

தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்கு அண்ணாமலை அவசியம் என்று டெல்லி தலைமை தீவிரமாக நம்புவதாகத் தெரிகிறது. நேற்று தமிழிசையை அமித் ஷா கடிந்துக் கொண்ட விதம் அதனை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிமுக கூட்டணியை முறிக்காவிட்டால் பாஜக சில எம்பிக்களை பெற்றிருக்கும் என்று விமர்சனங்கள் எழுந்தாலும் கூட்டணி முறிவுக்கு வித்திட்ட அண்ணாமலையின் முடிவை மேலிடம் முழு மனதாக ஏற்றிருப்பது தெரிய வருகிறது.

News June 13, 2024

உடல் எடை அதிகரித்ததால் மன அழுத்தத்தால் பாதிப்பு

image

உடல் எடை அதிகரித்ததால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக நடிகை நமிதா தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து கொண்ட நமிதா, தனக்கு நேரிட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், திடீரென உடல் எடை அதிகரித்ததால், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும், எனினும் உடற்பயிற்சி உள்ளிட்டவை மூலம் 21 கிலோ உடல் எடையை குறைத்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

News June 13, 2024

என்ன செய்யப் போகிறார் தமிழிசை?

image

தமிழிசை சௌந்தரராஜனை அமித் ஷா பொது வெளியில் கண்டிப்பது போன்ற வீடியோ வெளியான நிலையில், இது தமிழிசையின் சுய மரியாதைக்கு இழுக்கு என காண்போர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவரை மாநிலத் தலைவராக்கி, ஆளுநராக்கி அழகு பார்த்தது பாஜகதான். இந்த நிலையில், தமிழிசை என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. சகித்துக் கொள்வாரா? பாஜகவுக்கு எதிராக சாட்டையை சுழற்றுவாரா?

News June 13, 2024

விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை

image

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இரவு 10 மணியளவில் பெய்ய தொடங்கிய கனமழை 2 மணி நேரத்திற்கும் மேலாக விடாது நீடித்தது. அத்துடன், பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை விடிய விடிய கொட்டியது. இதனால், பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா?

News June 13, 2024

அருணாச்சல் முதல்வராக பெமா காண்டு இன்று பதவியேற்பு

image

அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 60 தொகுதிகளில் 46இல் பாஜக வென்றது. இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக மீண்டும் பெமா காண்டு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அவர் உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பெமா காண்டு தொடர்ந்து 3ஆவது முறையாக இன்று காலை பதவியேற்கிறார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்கிறது.

News June 13, 2024

கடன் தொல்லைகள் அகல…

image

சனி மற்றும் புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஸ்ரீசக்கரத்தாழ்வாரைத் தரிசித்து, அவரை 12 முறை வலம் வந்து வழிபட வேண்டும். துளசி சாற்றி அவரை வழிபடுவது மிக்க நல்லது. இதனால், கடனால் உண்டான சங்கடங்கள் நீங்கும். இதை போல, தோரண கணபதியை அன்றாடம் விளக்கேற்றி வழிபடுங்கள். சதுர்த்தி நாள்களில் நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபட்டால் நிச்சயம் கடன் தொல்லை அகன்று, இல்லறத்தில் இனிமை உண்டாகும்.

News June 13, 2024

கட்டாய வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி

image

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று இங்கிலாந்து, ஓமன் அணியுடன் மோத உள்ளது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து, தற்போது வரை 2 ஆட்டங்களில் ஆடி (1 ஆட்டம் மழையால் ரத்து, 1 ஆட்டம் தோல்வி) 1 புள்ளியுடன் பி பிரிவில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதையடுத்து எஞ்சிய இரு லீக் போட்டியில் வென்றால் மட்டும் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியும். ஓமன் அணி ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

News June 13, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ குவைத் தீவிபத்தில் 40க்கும் மேற்பட்டோர் பலி
➤ ஆந்திர அமைச்சராக பவன் கல்யாண் பதவியேற்பு
➤ இபிஎஸ் உடன் இணைய முடியாது: டிடிவி தினகரன்
➤ சென்னையில் பல இடங்களில் மிதமான மழை
➤ அண்ணாமலை ஒரு பூஜ்ஜியம்: எஸ்.வி.சேகர்
➤ அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி

error: Content is protected !!