India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து விற்பனையாகிறது. நேற்று ₹53,440க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், இன்று ₹53,280க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,680க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத் தங்கம், இன்று ₹6,660க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து ₹95.20க்கு விற்பனையாகிறது.
குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என தமிழ்ச் சங்கங்கள் மூலம் தகவல் வந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். மொத்தம் அங்கு வீராச்சாமி மாரியப்பன், சின்னதுரை, விஜயகுமார், சிவசங்கர், கருப்பண்ணன் ராமு, பிராங்களின் ஜேம்ஸ், ரிச்சர்ட் ராய், முகமது ஷரீப் ஆகிய 8 தமிழர்கள் இருந்ததாகவும், அவர்கள் குறித்த தகவல் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான அந்த குடியிருப்பில் 195 பேர் வசித்து வந்த நிலையில், நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவை சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில், இறந்தவர்களின் விவரம் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது 5 தமிழர்கள் பலியானதாக கூறப்படுகிறது.
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ்குமார் கலந்து கொள்ளாதது பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் நிர்வாகி கியான் ரஞ்சன், மத்திய அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்குவதில் நிதிஷ்குமாரின் கட்சிக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது தெளிவாக தெரிவதாகவும், இவ்வளவு சீக்கிரம் கூட்டணியில் விரிசல் வரும் என எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் 2000ம் ஆண்டில் பாகிஸ்தானை சேர்ந்த 2 LeT தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 வீரர்கள் வீரமரணமடைந்தனர். தாக்குதல் நடத்திய ஒரு தீவிரவாதி பாட்லா ஹவுசில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட நிலையில், ஆரிப் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கில் அவனுக்கு 2007இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் கருணைகோரி அவன் அளித்த மனுவை குடியரசுத் தலைவர் முர்மு நிராகரித்து விட்டார்.
ஆர்எஸ்எஸ் பத்திரிகையான ஆர்கனைசரில் நேற்று முன்தினம் வெளியான கட்டுரையில், தேர்தலில் பாஜக தொண்டர்களின் அதீத நம்பிக்கைக்கு மக்கள் தடை போட்டு விட்டதாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதே பத்திரிகை, அஜித் பவாரின் என்சிபியை கூட்டணியில் பாஜக சேர்த்தது தவறான முடிவு, கட்சி மாறி பாஜகவில் சேர்ந்தோருக்கு தேர்தலில் அதிக வாய்ப்பு அளித்ததே தோல்விக்கு காரணமென குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு கவிழ்ந்த விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாய் – டோம்பே மாகாணத்தில் உள்ள குவா நதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்களை தேடும் பணி வேகமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டு குடியரசுத் தலைவர் பெலிக்ஸ் ஷிசெகெடி தெரிவித்துள்ளார். காங்கோவில் அடிக்கடி படகு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
நேற்று நடைபெற்ற இந்தியா – அமெரிக்கா இடையிலான கிரிக்கெட் போட்டியில் ரசிகர் ஒருவர் இந்தப் பலகையை ஏந்தி வந்திருந்தார். இந்திய வீரர்களை ஆதார் கார்டு என்றும் அமெரிக்கா அணிக்காக விளையாடும் இந்தியர்களை கிரீன் கார்டு என்றும் கேலி பேசுகிறது இச்சித்திரம். நேற்று மைதானத்துக்கு வந்திருந்த பெரும்பாலான ரசிகர்களும் இந்தியர்கள்தான். அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலம் இல்லை என்பதால் அந்நாட்டவர்கள் அதிகம் வரவில்லை.
2024 ஐபிஎல்லில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்லாதபோதிலும், பிரான்ட் மதிப்பு அடிப்படையில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட 9% அதிகரித்து, இந்தாண்டில் பிரான்ட் மதிப்பு ₹1,929 கோடியாக உள்ளது. 2வது இடத்தில் பெங்களூரு அணியும் (₹1,895 கோடி) , 3ஆவது இடத்தில் கொல்கத்தா அணியும் (₹1,804 கோடி)உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி 4ஆவது இடத்தில் (₹1,703 கோடி)உள்ளது.
குவைத்தில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானதாக தெரிவித்தார். அத்துடன், உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
Sorry, no posts matched your criteria.