News June 13, 2024

3ஆம் பாலினத்தவர்களுக்கு உரிய வாய்ப்பு: உயர் நீதிமன்றம்

image

கல்வி, வேலைவாய்ப்பில் 3ஆம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராகக் கருத வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில், கல்வித் தகுதி பெற்ற 3ஆம் பாலினத்தவர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும், அவர்களுக்கான வாய்ப்புகளை மறுத்தால் தற்போதுள்ள அசாதாரணமான வாழ்க்கைக்கே தள்ளப்படுவார் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

News June 13, 2024

முதல் ஐபிஎஸ் அதிகாரி யார்? எந்த ஊர் தெரியுமா?

image

காவல்துறை உயரதிகாரியாக ஐபிஎஸ் தேர்வெழுதி வெற்றி பெறுவது அவசியம். அதுபோல முதன்முதலில் ஐபிஎஸ் அதிகாரியானது அப்போதைய மெட்ராசை சேர்ந்த சக்ரவர்த்தி விஜயராகவ நரசிம்மன் ஆவார். 1948 ஐபிஎஸ் தேர்வில் முதலாவதாக தேர்வாகி அதிகாரியான அவர், ஐநா உள்ளிட்டவற்றில் பதவிகளை வகித்துள்ளார். அவரின் சேவையை பாராட்டி பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் 2003இல் காலமானார்.

News June 13, 2024

THE GOAT: விஜயகாந்த் எவ்வளவு நேரம் வருவார்?

image

‘தி கோட்’ படத்தில் சமீபத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இந்த நிலையில், விஜய்காந்த் நடிக்கும் காட்சிகள் படத்தில் ஒரு நிமிடம் இடம் பெறுவதாக, அவரது மகன் விஜய பிரபாகரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கதைக்கு திருப்பமான கதாபாத்திரமாக விஜயகாந்தின் கதாபாத்திரம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

News June 13, 2024

நாளை முதல் தடை அமலுக்கு வருகிறது

image

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கான தடை நாளை முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது. ஏற்கெனவே, இதற்காக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. அதற்குள், வெளி மாநில பதிவெண்ணை தமிழக எண்ணாக மாற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் கால அவகாசம் கேட்டு போக்குவரத்து துறை ஆணையருடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

News June 13, 2024

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு காசோலை

image

நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு காசோலை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த 530 பேருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு முதல்கட்ட காசோலை வழங்கப்படுகிறது. முதலில் 25% பணப் பலன்களை கொடுத்து, பிறகு தொழிலாளர்கள் தற்போது வசிக்கும் குடியிருப்பை காலி செய்து வெளியேறிய பிறகு மீதியை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

News June 13, 2024

அக்னிபாத் திட்டத்தில் வருகிறது மாற்றம்?

image

அக்னிபாத் திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து ஜூன் 17, 18இல் பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசனை நடக்க உள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. வட மாநிலங்களில் இத்திட்டம் கடும் தோல்வி அடைந்ததால் அதனை மறு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இத்திட்டத்தில் சேரும் 70% வீரர்களை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

News June 13, 2024

ஜூலை 6 முதல் மருத்துவக் கலந்தாய்வு

image

2024-25 கல்வியாண்டிற்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே கடந்த 4ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து, கலந்தாய்வு எப்போது என்பது குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஜூலை 6 முதல் மருத்துவக் கலந்தாய்வை தொடங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

News June 13, 2024

1563 மாணவர்களுக்கு ஜூன் 23 நீட் மறுதேர்வு

image

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி உள்ளதாக எழுந்த புகார்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில், 1563 பேருக்கு மட்டும் மறுதேர்வு நடத்துவதாக தேசிய தேர்வு முகமை கூறியதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

News June 13, 2024

தள்ளிப்போகும் ‘புஷ்பா -2’ ரிலீஸ்?

image

அல்லு அர்ஜூன் நடித்துள்ள ‘புஷ்பா – 2’, ஆக.15ஆம் தேதி வெளியாவதாக இருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடையாததாலும். சுதந்திர தினத்தன்று தமிழ் மற்றும் இந்தி மொழியின் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாலும், புஷ்பா -2 தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக, விநியோகஸ்தர்கள் மத்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக, தகவல் வெளியாகியுள்ளன.

News June 13, 2024

பாலியல் வழக்கு: எடியூரப்பாவை கைது செய்ய தீவிரம்

image

கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை, போக்சோ வழக்கில் கைது செய்ய சிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். நேற்று நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியும் ஆஜராகததால், கைது வாரண்ட் கோரி சிறப்பு நீதிமன்றத்தை சிஐடி போலீசார் நாடியுள்ளனர். அதே நேரம், இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுதாக்கல் செய்துள்ளார் எடியூரப்பா.

error: Content is protected !!