India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூரில் 17 வயது சிறுவனும் 15 வயது சிறுமியும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. அப்போது சிறுவன் ஐஃபோன் வேண்டும் என்று கேட்டதால் தாயின் 7 சவரன் நகையை திருடிக் கொண்டு சிறுமி வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். பின்னர், இருவரும் சேர்ந்து ஐஃபோன் வாங்கி பயன்படுத்தி இருக்கின்றனர். பெற்றோரின் புகாரின்பேரில் சிறுவனை கைது செய்த போலீசார், ஐஃபோனையும் பறிமுதல் செய்துள்ளனர்.
நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் என்பது ஒரு மோசடி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எந்த அடிப்படையில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பிய அமைச்சர், கடந்த 2021ல் ஒருவர் மட்டுமே முழு மதிப்பெண்கள் பெற்ற நிலையில், நடப்பாண்டில் 67 பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளதாக கூறினார். மேலும், இத்தனை பேர் முழு மதிப்பெண்கள் பெறுவது சாத்தியமில்லாத ஒன்று எனவும் கூறினார்.
கூட்டுறவுத்துறையில் 13,12,717 பேரின் ₹4,818 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஒரு குடும்பத்தில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்று 31.3.2021 வரை நிலுவையில் இருந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, இந்தி படங்களிலும் அவ்வபோது நடிக்கிறார். இந்த நிலையில், மம்முட்டி நடிப்பில் கௌதம் மேனன் இயக்கும் படத்தில், கதாநாயகியாக நடிகை சமந்தா மலையாளத்தில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நயன்தாரா நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதேபோல், படத்தின் முதல்கட்ட படப்படிப்பு நாளை மறுநாள் சென்னையில் தொடங்க உள்ளது.
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு திட்டமிட்டபடி நாளை முதல் தமிழகத்தில் தடை அமலாகிறது. இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், போக்குவரத்துத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், 500க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை நாளை முதல் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மீறி இயக்கினால் பேருந்து சிறைபிடிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நடிக்கும் மகாராஜ் திரைப்படம் நெட்ஃபிளிக்சில் வெளியாகவுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் தளத்தை முடக்க வேண்டும் (BoycottNetflix), மகாராஜ் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் (BanMaharaj) என அவர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இப்படத்தில் இந்துக்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னையில் வளர்ப்பு நாய்கள் கடித்து சிறுவர்கள் படுகாயமடைந்த சம்பவங்களைத் தொடர்ந்து, செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்தாண்டு 1,560 பேர் உரிமம் பெற்றிருந்த நிலையில், 2024 ஜூன் 12ஆம் தேதி வரை 5,025 நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதால் பிரபலமானார். பின்னர் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக அவர் சில காலம் பதவி வகித்தார். இந்நிலையில் அவர் வாழ்க்கை கதையை மையமாக வைத்து “பேடி” என்ற பெயரில் படம் எடுக்கப்படுகிறது. ட்ரீம் ஸ்லேட் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை குஷால் சாவ்லா இயக்குகிறார்.
சராசரி விலையானது அந்தப் பகுதிகளில் உள்ள வரிகளுக்கு ஏற்ப மாறக்கூடியதாகும். இதையடுத்து சர்வதேச விலை நிலவரம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இறக்குமதி வரி உள்ளிட்டவற்றை சேர்த்து, அதை சந்தையில் எந்த விலைக்கு விற்க வேண்டும், வாங்க வேண்டும் என்று டீலர்கள் முடிவு செய்வார்கள். அதன்படி நகைக்கடைகளில் தங்கம் விற்கப்படும். அப்போது அந்த விலையுடன் மத்திய, மாநில வாட் வரிகளும் தனித்தனியே சேர்க்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கத்தை இறக்குமதி செய்யும் வங்கிகள், அதை உள்நாட்டில் புழக்கத்தில் விட தங்க நகை வியாபாரிகள் கூட்டமைப்பிடம் விற்கின்றன. அப்போது இறக்குமதி விலையை விட கூடுதல் விலைக்கு தங்கம் விற்கப்படுகிறது. இந்த விலை அடிப்படையிலும், நாடு முழுவதும் உள்ள டீலர்கள் அளிக்கும் ஆலோசனை அடிப்படையிலும், நாள்தோறும் சராசரி விலையை இந்திய தங்க நகை வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்ணயிக்கிறது.
Sorry, no posts matched your criteria.