India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குவைத் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த விபத்தில் தமிழ்நாடு & கேரளாவைச் சேர்ந்த பலர் உயிரிழந்தது மன வேதனை அளிப்பதாக நடிகரும், தவெக தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் உடல்நலம் பெற வேண்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக குட்டையான திருமண ஜோடி என்ற கின்னஸ் உலக சாதனையை, பிரேசிலிய ஜோடி வென்றுள்ளனர். 31 வயதான பாலோவும் (90.28 செ.மீ.), 28 வயதான கட்யூசியாவும் (91.13 செ.மீ.) 2006ஆம் ஆண்டு சமூக வலைதளங்கள் மூலம் நண்பர்களாகி, பிறகு காதல் ஜோடியாக மாறினர். இதனைத் தொடர்ந்து, இருவரும் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 7 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அந்த ஜோடி, தற்போது கின்னஸ் விருது பெற்றுள்ளது.
திருமணம் செய்வதற்காக ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை தான் தேடிக்கொண்டிருப்பதாக ‘மகாராஜா’ பட நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தபோது, தான் ஒருவரை காதலித்ததாகக் கூறிய அவர், அந்த உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை என்றார். உறவு என்பது நிபந்தனையற்றதாக இருக்க வேண்டுமே ஒழிய அன்பென்ற பெயரில் அழுத்தம் தருவதாக இருக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.
தொழில்நுட்ப உலகில் இளைஞர்கள் மட்டுமின்றி, குழந்தைகள் மத்தியிலும் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஸ்மார்ட்ஃபோன் திரையை மணிக்கணக்கில் பார்ப்பதால், கண்கள் பலவீனமடைவதுடன், உடலின் மற்ற பாகங்களும் பாதிக்கப்படலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. நாளொன்றுக்கு 4 மணி நேரத்திற்கு மேலாக ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்துவது மனநலனிலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர்.
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதன்படி, வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிறு என 2 நாள்கள் விடுமுறை. அதைத் தொடர்ந்து திங்கள் கிழமை, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சனி, ஞாயிறு, திங்கள் எனத் தொடர்ச்சியாக 3 நாள்கள் விடுமுறை வருவதால் சுற்றுலா, ஆன்மிகப் பயணம் செல்வோர் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளலாம்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு பாமகவுக்கு கூட்டணிக் கட்சியான பாஜக சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பாமக போட்டியிட வேண்டும் என்ற முடிவில் இருப்பதால், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அன்புமணி கூறியிருந்தார். விக்கிரவாண்டியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடும் நிலையில், வேட்பாளரை இறுதிசெய்யும் பணியில் அதிமுக இறங்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த தேவ்கி நந்த் ஷர்மா (66) உயிரிழந்தார். ஊரக மேம்பாட்டுத்துறை மற்றும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக கூறி, அவரது வீட்டின் அருகே இருந்த கோயிலில் கடந்த பிப்.12ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திரைப் பிரபலத்தை விட, அரசியல்வாதியின் வாழ்க்கை மிகவும் கடுமையானது என நடிகையும், எம்.பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், தனது கொள்ளு தாத்தா சர்ஜு சிங் ரனாவத் எம்.எல்.ஏவாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் தனது குடும்பத்திற்கு தூரமில்லை எனக் கூறிய அவர், தனது முதல் படமான ‘கேங்ஸ்டர்’ படத்திற்கு பிறகு அரசியலில் சேர நினைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை எம்ஜிஎம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஒருமாத காலம் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். நீட் கேள்வித்தாள் கசிந்ததாக எந்த தகவலும் இல்லை என்றும், நீட் தேர்வில் மாணவர்கள் சந்தித்த சவால், பிரச்னை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன், நீட் தேர்வர்களை அரசு ஒருபோதும் கைவிடாது என்றும் அவர் உறுதி அளித்தார்.
Sorry, no posts matched your criteria.