News June 13, 2024

‘ஆடுஜீவிதம்’ படம் ஓடிடியில் வெளியாகாதது ஏன்?

image

‘தி கோட் லைஃப்’ நாவலை தழுவி மலையாளத்தில் வெளியான ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பிருத்விராஜின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வெளியான 25 நாள்களில் ₹150 கோடி வசூல் ஈட்டியது. இந்நிலையில், இப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப இருப்பதால், பெரிய ஓடிடி நிறுவனங்களுடன் படக்குழு பேசி வருவதாக கூறப்படுகிறது.

News June 13, 2024

13 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்

image

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

News June 13, 2024

புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை

image

மோடி 3ஆவது முறையாக பதவியேற்றதை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தை புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை குறியீட்டெண் சென்செக்ஸ் 204 புள்ளிகள் உயர்ந்து, 76,810 புள்ளிகளுடன் புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதே போல, தேசிய குறியீட்டெண் நிஃப்டி 75 புள்ளிகள் உயர்ந்து, 23,398 புள்ளிகளுடன் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ உள்ளிட்ட குறியீடுகளும் ஏற்றத்தில் முடிந்தன.

News June 13, 2024

அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் திரைப்படங்கள்!

image

தமிழ் சினிமாவில் அடுத்த சில மாதங்களுக்கு மாஸ் ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ -ஜூன், கமல் நடிப்பில் ‘இந்தியன்-2’ -ஜூலை, தனுஷ் நடித்துள்ள ‘ராயன்’ -ஜூலை, விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’-ஆகஸ்ட், விஜய்யின் ‘GOAT’-செப்டம்பர்), ரஜினியின் ‘வேட்டையன்’ -அக்டோபர், ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. நீங்கள் எதிர்பார்க்கும் படம் எது?

News June 13, 2024

அமைச்சரிடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை

image

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கான தடை நாளை முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், கால அவகாசம் வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த 3 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால், கோரிக்கையை பரிசீலிக்க வேண்டுமென வலியுறுத்தியதை அடுத்து, அதிகாரிகளுடன் ஆலோசித்த பின், முடிவை அறிவிப்பதாக அமைச்சர் கூறினார்.

News June 13, 2024

மதுவின் தீமைகளை குறைக்கும் புரோட்டீன் ஜெல்!

image

மது அருந்துவதால், உடலின் ராஜ உறுப்பான கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இத்தகைய பாதிப்பில் இருந்து மதுப்பிரியர்களைக் காக்க சுவிஸ் விஞ்ஞானிகள் ‘புரோட்டீன் ஜெல்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஜெல்லை உட்கொண்டால், ஆல்கஹாலில் உள்ள ஒவ்வாத ரசாயனத்தை முறித்து, பாதிப்பில்லாத அசிட்டிக் அமிலமாக மாற்றி, செரிமான அமைப்புக்கு அனுப்பிவிடும். இதன் மூலம் கல்லீரல் பாதிப்பைக் குறைக்குமாம்.

News June 13, 2024

ஆதார் இலவச புதுப்பிப்பு காலக்கெடு நீட்டிப்பு!

image

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்வதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 14ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. முன்னதாக, ஆதார் அட்டையில் உள்ள முகவரி, தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்களை ஜூன் 14ஆம் தேதி வரை மட்டுமே இலவசமாக திருத்தம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட செல்ஃபோன் எண்ணுக்கு கிடைக்கும் OTP மூலம் விவரங்களை திருத்தம் செய்ய முடியும்.

News June 13, 2024

T20 WCயில் இருந்து வெளியேறிய இரண்டாவது அணி

image

T20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற ‘B’ பிரிவு போட்டியில் ஆஸ்திரேலியா, நமீபியா அணிகள் மோதின. இப்போட்டியில் தோல்வியடைந்த நமீபியா, அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து, நடப்பு தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள நமீபியா 1 வெற்றி மட்டுமே பெற்று ‘B’ பிரிவு பட்டியலில் 3வது இடத்தில் இருந்தது. முன்னதாக ‘B’ பிரிவில் இடம்பெற்ற ஓமன் அணியும் வெளியேறியது.

News June 13, 2024

இளையராஜாவிடம் வாழ்த்து பெற்ற பிரேம்ஜி

image

பிரேம்ஜி, இந்து ஜோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருத்தணியில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், தம்பி கங்கை அமரனின் இளையமகன் பிரேம்ஜியின் திருமணத்துக்கு இளையராஜா வராதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இளையராஜா குடும்பத்திலிருந்து ஏன் ஒருவர் கூட வரவில்லை என்கிற கேள்விகளும் எழுந்தன. இந்நிலையில், இளையராஜாவிடம் பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி இந்து வாழ்த்து பெற்ற புகைப்படம் ஒன்று வெளியாகி, வைரலாகி வருகிறது.

News June 13, 2024

குவைத் தீ விபத்து: பலியான தமிழர்கள் எண்ணிக்கை 7ஆனது

image

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. கேரளாவை சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட விபத்தில், தமிழகத்தை சேர்ந்த வீராசாமி, முகமது ஷரீப், ரிச்சர்ட் ராய், சிவசங்கர், சின்னதுரை, ராஜு எபினேசர், ராமு ஆகியோர் உயிரிழந்தனர். குவைத்தில் உதவி தேவைப்படுவோர் +91 1800 309 3793, 80690 09900, 80690 09901 என்ற எண்களில் அழைக்கலாம்.

error: Content is protected !!