News June 13, 2024

ஜி7 உச்சிமாநாட்டில் மோடிக்கு சிறப்பு அழைப்பு ஏன்?

image

இத்தாலியில் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அபுலியா நகரில் இன்று தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில், ஜி7 நாடுகளில் இடம்பெறாத இந்தியாவுக்கு இத்தாலி பிரதமர் மெலோனி சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார். ஜி7 நாடுகளில் உள்ள கனடா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய 4 நாடுகளைவிட ஜிடிபியில் இந்தியா முன்னிலை வகிப்பதே காரணமாக கருதப்படுகிறது.

News June 13, 2024

ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு

image

அரசு மாதிரிப் பள்ளிகளில் பணிபுரியும் நூலகர் உள்ளிட்ட தொகுதிப்பூதிய பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 44 மாதிரிப் பள்ளிகளில் நூலகர் உள்பட மொத்தம் 308 பணியிடங்கள் உள்ளன. இதில், இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர்களுக்கு ₹6,000இல் இருந்து ₹12,000ஆகவும், பிற பணியாளர்களுக்கு ₹4,500இல் இருந்து ₹10000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

News June 13, 2024

இது மத்திய அரசின் திறமையின்மை: முதல்வர்

image

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட விவகாரம் மத்திய அரசின் திறமையின்மையை காட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார். MBBS படிப்புக்கு தேர்வை தீர்மானிப்பதில் மாநில அரசு பங்கு வகிக்க வேண்டும் என்ற அவர், மாநில அரசின் பங்கை மீட்பதுதான் ஒரே தீர்வாக இருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் மூலம் முக்கிய பிரச்னைகளிலிருந்து திசை திருப்ப அனுமதிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

News June 13, 2024

குவைத்தில் பணியாளர்களின் நிலை என்ன?

image

குவைத் அடுக்குமாடி தீ விபத்தை தொடர்ந்து, அந்நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் வசிப்பிடம் குறித்த கவலைகள் எழுந்துள்ளன. ஆனால், பெரும்பாலான இடங்கள் தங்குவதற்கு வசதியாகவே இருக்கும் என குவைத் வாழ் தமிழக தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஒரு அறையில் இருவர்தான் தங்குவார்கள் என்பதால் பெரிய நெருக்கடி இருக்காது என தெரிவிக்கின்றனர். அதே நேரம், சில இடங்கள் மோசமாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

News June 13, 2024

பெட்ரோடாலர் என்றால் என்ன?

image

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு செலுத்தப்படும் அமெரிக்க நாணயம் ‘பெட்ரோடாலர்’ என்று அழைக்கப்படுகிறது. 1972இல், தங்கத்திற்கு பதிலாக அமெரிக்கா பெட்ரோடாலரை அறிமுகப்படுத்தியது. ஜூன் 8, 1974 இல் பொருளாதார ஒத்துழைப்புக்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்ட சவுதி இதனை ஏற்றது. உலக வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கம் இன்றுவரை தொடர்வதற்கு இந்த ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிக்கிறது.

News June 13, 2024

குளியலறையில் இறந்து கிடந்த பிரதீப் கே.விஜயன்

image

துணை நடிகர் பிரதீப் கே.விஜயன், குளியலறையில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தனியாக வசித்து வந்த அவருக்கு, மூச்சுத் திணறல் பிரச்னை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முதல் அவரை தொடர்பு கொண்ட நண்பர்கள், அவரிடம் இருந்து பதில் வராததால் காவல்துறையை நாடியுள்ளனர். இதையடுத்து, போலீசார் அவரது வீட்டிற்கு சென்றபோது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.

News June 13, 2024

சிறைக்குள் சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்: வழக்கறிஞர்

image

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தன்னை துன்புறுத்துவதை கண்டித்து, சவுக்கு சங்கர் 2 நாள்கள் சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்ததாக, அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சவுக்கு சங்கர் மீதான வழக்கை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் நடத்தி வருவதாகவும், ஆனால், சிறையில் சவுக்கு சங்கர் கொடுமைக்கு உள்ளாவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

News June 13, 2024

தீ விபத்தில் பலியானவர்களுக்கு கமல் இரங்கல்

image

குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நடைபெற்ற பயங்கர தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மநீம தலைவர் கமல்ஹாசன், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் உடல்நலம் பெற வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவும் வெளியுறவுத் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News June 13, 2024

T20 WC: நான்கு அணிகள் தகுதி பெற்றது

image

T20 உலகக்கோப்பையில் மொத்தம் 20 அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து ஆடி வருகின்றன. இதில், ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் அடுத்த சுற்றுக்கு (சூப்பர் 8) தகுதிபெறும். தற்போது, 4 பிரிவில் இருந்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளது. மீதம் உள்ள 4 இடங்களுக்கு 14 அணிகள் போட்டியிடுகின்றன. இதில் எந்த 4 அணிகள் தகுதிபெறும் என நினைக்கிறீர்கள்?

News June 13, 2024

மோடி 3.0 அமைச்சரவையில் 99% பேர் கோடீஸ்வரர்கள்

image

மோடி தலைமையிலான தற்போதைய அமைச்சரவையில், 99% அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் எனவும், 39% அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ₹107.94 கோடியாகும். மொத்தமுள்ள 71 மத்திய அமைச்சர்களில், 28 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில், 19 பேர் மீது கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட கடுமையான வழக்குகள் இருக்கின்றன.

error: Content is protected !!