India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்கின் மனைவி கிருஷ்ண குமாரி ராய், தான் எம்எல்ஏவாக பதவியேற்ற மறுநாளே ராஜினாமா செய்துள்ளார். அவர் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம்ச்சி சிங்கிதாங் பகுதியில் போட்டியிட்டு 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இவரது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எதற்காக அவர் ராஜினாமா செய்தார் என்பது குறித்த தகவல் இல்லை.
‘குணா’ திரைப்படம் வெளியான போது கூட, அப்படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கும், பாடல்களுக்கும் கடந்த தலைமுறை பெரிய வரவேற்பு வழங்கவில்லை. ஆனால், ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘குணா’ பட பாடலையும், வசனத்தையும் இன்றைய தலைமுறை ஆரவாரத்துடன் கொண்டாடித் தீர்த்துள்ளனர். இதன் காரணமாக, ‘குணா’ படத்தை வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் ரீரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் கிங்ஸ்டவுன் மைதானத்தில் இன்று நடைபெறும் T20 உலககோப்பையில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து வங்கதேசம் இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என கமெண்ட் பண்ணுங்க.
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சூழலியல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் பன்னாட்டு விமான நிலைய உருவாக்கத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டுமெனக் கூறிய அவர், பாஜக கொண்டு வரக்கூடிய அழிவுத் திட்டத்தினை எதிர்க்காமல், செயல்படுத்த முனைவது மக்களுக்குச் செய்யும் துரோகம் என தெரிவித்துள்ளார்.
வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க, வரும் திங்கள்கிழமை வரை அவகாசம் வழங்கி போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 547 வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் விதிகளை மீறி இயங்கி வருகின்றன. இந்த பேருந்துகளுக்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஜூன் 17ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மோடி 3.0 அரசில் நிதி அமைச்சராக பதவியேற்ற நிர்மலா சீதாராமன் அரிய சாதனையை படைக்கவுள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் மொரார்ஜி தேசாயும், அவரும் தலா 5 முழு நிலை & 1 இடைக்கால பட்ஜெட்டை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், ஜூலையில் பட்ஜெட்டை நிர்மலா தாக்கல் செய்யவுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், தொடர்ந்து 7 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார்.
T20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் ‘டி’ பிரிவுக்கான போட்டியில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி கிங்ஸ்டவுனில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், அங்கு மழை பெய்வதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரு அணிகளுமே இதுவரை 2 போட்டிகளில் விளையாடி தலா 1 வெற்றிபெற்றுள்ளன. இன்று வெற்றிபெறும் அணிக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யக் கூடும். இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பதிப்புரிமை தொடர்பாக ஒப்பந்தம் செய்யாத இளையராஜா தனது பாடல்களுக்கு உரிமை கோர முடியாது என்று எக்கோ நிறுவனம் கூறியுள்ளது. பாடல் உரிமை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் மேல் முறையீடு வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஊதியம் கொடுத்து இசை சேவையைப்பெறும் தயாரிப்பாளரே முதல் காப்புரிமை உரிமையாளர்” என வாதிட்டார்.
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். நாட்டிற்காக பல வெற்றிகளைப் பெற்று தந்த கோலிக்கு, எப்படி விளையாட வேண்டுமென நன்றாக தெரியுமெனக் கூறிய அவர், ஒன்றிரண்டு ஆட்டங்களில் தடுமாறியதற்காக கோலிக்கு புற அழுத்தம் தர வேண்டாம் என்றார். பொறுமையுடன் விளையாடினால் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.