News June 14, 2024

ஃபெடரர் ஆவணப்படம் எப்போது வெளியாகிறது?

image

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரரைப் பற்றிய ஆவணப்படம் OTT தளத்தில் வெளியாகவுள்ளது. “ஃபெடரர் – 12 இறுதி நாள்கள்” என பெயரிடப்பட்ட அந்தப் படம், இம்மாதம் 20ஆம் தேதி முதல் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஃபெடரர் 2003 முதல் 2007 வரை 8 விம்பிள்டன், 6 ஆஸ்திரேலிய ஓபன், 5 அமெரிக்க ஓபன், ஒரு பிரெஞ்சு ஓபன் என 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

News June 14, 2024

இந்தியா திரும்புகிறார் ஷூப்மன் கில்?

image

T20 WC போட்டிகளில் விளையாடுவதற்காக அமெரிக்கா சென்ற ஷூப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் இந்தியா, கனடா போட்டிக்குப் பின் அவர்கள் நாடு திரும்பலாம் எனக் கூறப்படுகிறது. சூப்பர் 8 போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள நிலையில், அந்த மைதானங்களில் விளையாட கூடுதலாக பவுலர்கள் தேவைப்படலாம் என்பதால் இவர்கள் நாடு திரும்ப வாய்ப்புள்ளது.

News June 14, 2024

பணத்தை சேமிப்பதற்கான சில டிப்ஸ்…

image

பணத்தை சேமிக்க பொருளாதார நிபுணர்கள் பல வழிகளை தெரிவிக்கின்றனர். *பட்ஜெட் போட்டு செலவு செய்ய வேண்டும். *தேவையில்லாத பொருட்களை எக்காரணம் கொண்டும் வாங்க கூடாது. *உணவுகளை ஆர்டர் செய்வதை தவிர்த்து, வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும். *கிரெடிட் கார்டு கடன், கார் கடன் போன்ற அதிக வட்டி கொண்ட கடனில் சிக்காமல் இருக்க வேண்டும். *தானியங்கி (Auto debit) முறையிலான சேமிப்பு திட்டங்களை பயன்படுத்த வேண்டும்.

News June 13, 2024

அர்ஷ்தீப் சிங்கை பாராட்டிய அனில் கும்ப்ளே

image

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை வீசிய விதம் சிறப்பாக இருந்தது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளில், சிறப்பான ஃபார்மில் இருக்கும் அர்ஷ்தீப் சிங்குக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனக் கூறிய கும்ப்ளே, அவருக்கு அணியில் இடம் கிடைக்க வழிவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News June 13, 2024

ரஷ்யாவின் சொத்துக்களை உக்ரைனுக்கு அளிக்க முடிவு!

image

மேற்குலக நாடுகளில் உள்ள ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து ₹3.75 லட்சம் கோடியை
உக்ரைனுக்கு அளிக்க ஜி7 நாடுகள் முடிவெடுத்துள்ளன. போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் உள்கட்டமைப்பை சீராக்கவும், ராணுவத்தை பலப்படுத்திக்கொள்ளவும் இத்தொகை கடனுதவியாக அளிக்கப்படவுள்ளது. முதல்கட்டமாக, ஐரோப்பிய யூனியன் கட்டுப்பாட்டில் உள்ள பணத்திற்கு வருகிற வட்டி தொகை, உக்ரைனுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

News June 13, 2024

தாயை பிரிந்த குட்டி யானையின் மனநிலை என்ன?

image

தாய்மை உணர்வு அனைத்து உயிரினங்களுக்கும் ஒன்றுதான் என்பதால், தாயை பிரிந்த குட்டி யானை மன ரீதியில் பாதிக்கப்படும் என வனக்கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், அந்த பாதிப்பு நீண்ட நாள்கள் நீடிக்காது எனவும், கூட்டத்தில் உள்ள மற்ற பெண் யானைகள் அதை பராமரித்துக் கொள்ளும் என்றும் கூறுகின்றனர். ஒரு வேளை குட்டி யானை தனித்து விடப்பட்டால், மருத்துவக் குழு உதவியுடன் வனத்துறை பராமரிக்கும் என்கிறார்கள்.

News June 13, 2024

அமித் ஷா அறிவுரை தான் கூறினார்: தமிழிசை

image

சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற விழாவில், அமித் ஷா தனக்கு அறிவுரைதான் கூறினார் என தமிழிசை செளந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். தேர்தலின்போது சந்தித்த சவால்கள், வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்சிப் பணிகள் குறித்தும் அவர் தன்னிடம் ஆலோசித்ததாக தமிழிசை தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, தமிழக பாஜகவில் பஞ்சாயத்து வெடித்ததால் தமிழிசையை அமித் ஷா கண்டித்ததாக தகவல் வெளியானது.

News June 13, 2024

பதான் வீரர்களுக்கு கல்வியறிவு இல்லை: இஜாஸ் அகமது

image

பாகிஸ்தான் அணி முன்னாள் வீரரான இஜாஸ் அகமது, பதான் சமூக வீரர்கள் குறித்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. PAK அணியில் பதான் இனத்தைச் சேர்ந்த 6 – 8 வீரர்கள் இருப்பதாகக் கூறிய அவர், “கல்வியறிவு இல்லாத அந்த வீரர்களால் ஆடுகளத்தில் அழுத்தமான சூழல்களை சரியாகக் கையாள முடியாது” என்று பேசியிருக்கிறார். இவரின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தானியர்கள் பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

News June 13, 2024

பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமனம்

image

பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 11 செப்டம்பர் 2019 அன்று முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தற்போது, அவரது பதவிக்காலத்தை 2ஆவது முறையாக நீட்டிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவரது நியமன உத்தரவு பிரதமரின் பதவிக்காலம் வரை அமலில் இருக்கும் என மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News June 13, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

* மேஷம் – நிறைவான நாள்
*ரிஷபம் – ஓய்வு தேவை
*மிதுனம் – அனுகூலம் உண்டாகும்
*கடகம் – அலைச்சல் அதிகரிக்கும்
*சிம்மம் – பண வரவு தேடி வரும்
*கன்னி – வெற்றிகரமான நாள்
*துலாம் – நன்மை கிடைக்கும்
*விருச்சிகம் – பகை ஏற்படும்
*தனுசு – ஜெயம் உண்டாகும்
*மகரம் – மறதி அதிகரிக்கும் *கும்பம் – தோல்வி ஏற்படும் *மீனம் – உடல் நலனில் அக்கறை தேவை

error: Content is protected !!