News June 14, 2024

47 ரன்களில் சுருண்ட ஓமன் அணி

image

இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் ஓமன் அணி 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் 9 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் சோயப் கான் மட்டுமே 11 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் அடீல் ரஷீத் 4, மார்க் வுட் 3, ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுக்களை எடுத்தனர். ஓமன் அணி முதல் 3 போட்டிகளில் தோல்வி அடைந்ததால், ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறியது.

News June 14, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: அறிவுடைமை
◾குறள்: 421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
◾விளக்கம்:
பகையால் அழிவு வராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

News June 14, 2024

பாஜகவில் முஸ்லிம் எம்பிக்களே இல்லை: செல்வப்பெருந்தகை

image

நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளதாக தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் 2014, 2019 மற்றும் 2024 தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்ற அவர், பாஜகவின் இந்த மதவாத அரசியலை ஏற்க முடியாது என்றார். காங்கிரஸ் வென்ற எம்பிக்களில் 7 பேர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 14, 2024

விக்கிரவாண்டியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

image

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. திமுக சார்பாக அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாமகவும் இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டும் நிலையில், மும்முனை போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு ஜூலை 10இல் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 14, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூன் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News June 14, 2024

இடைத்தேர்தல் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை

image

விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. திமுக எம்எல்ஏ புகழேந்தி மரணமடைந்த நிலையில், அங்கு ஜூலை 10இல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பாக அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தேர்தல் வெற்றி வியூகம் அமைப்பது தொடர்பாக அமைச்சர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டியில் நாளை முதல் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது.

News June 14, 2024

2026இல் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்: இபிஎஸ்

image

2026 தேர்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதாக தவறான தகவல் பரப்பப்படுவதாக தெரிவித்த அவர், 2019 தேர்தலில் வாங்கிய வாக்குகளை விட தற்போது அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களால் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என்றும், அவர்களால் அதிமுகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

News June 14, 2024

T20 WC: வங்கதேசம் அபார வெற்றி

image

நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஷகிப் அல் ஹசன் 64 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய நெதர்லாந்து அணி, 8 விக்கெட் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.

News June 14, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூன் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News June 14, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ ஜூன் 26இல் மக்களவைத் தலைவருக்கான தேர்தல்
➤ ராணுவம் விரைவில் மேம்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்
➤ நிதி அமைச்சராக புதிய சாதனை படைக்க உள்ள நிர்மலா சீதாராமன்
➤ நீட் தேர்வில் ஊழல் நடந்துள்ளது: கார்கே
➤ அருணாச்சல் முதல்வராக பெமா காண்டு பதவியேற்பு
➤ கோலி பேட்டிங் குறித்து கவலைப்பட தேவையில்லை: கவாஸ்கர்

error: Content is protected !!