India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆனி மாத பூஜைக்காக, இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள், நாளை (15ஆம்தேதி) முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து 5 நாட்கள், தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து 19ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவில் வீடியோ அழைப்பு சர்ச்சையால் ஓரங்கட்டப்பட்ட கே.டி. ராகவன், தேர்தலில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என புள்ளி விவரங்களுடன் டெல்லி மேலிடத்துக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. அதுபோலவே தேர்தல் முடிவு அமைய அவரை மேலிடத் தலைவர்கள் சிலர் அழைத்து பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் மாநிலத் தலைமை மாற்றப்பட்டால், அவர் பெயரும் பரிசீலிக்கப்படும் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பாமக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள அக்கட்சி, அண்ணாமலையை சந்தித்த பின்பு இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. அங்கு, பாமகவுக்கு 20%க்கும் அதிகமான ஓட்டு வங்கி உள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக அங்கு 23.19% வாக்குகளை பெற்றது. அதனால், இத்தேர்தலில் தனது பலத்தைக் காட்ட அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது. ஜூலை 10ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாகத் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது. B.E., B.Tech படிப்புகளில் சேர 2,53,954 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
வருகிற 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டி வருகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் வாரச்சந்தையில் நேற்று மாலை 5 மணி முதல் அதிகாலை வரை அதிகபட்சமாக ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன். அதேபோல், மதுரை திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2024 ஜன.1 முதல் 9% உயர்த்தி வழங்க உள்ளது. அடிப்படை ஊதியம் அகவிலை ஊதியத்தில் 239% ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், ஜனவரி முதல் 6 மாத நிலுவைத் தொகை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தத் தோல்வியை அக்கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.வி.சேகர், பட்டாசு வெடித்து கொண்டாடியதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மோடியின் வெற்றிக்காகவே பட்டாசு வெடித்ததாகவும், அண்ணாமலை தோல்வியை கொண்டாடவில்லை, அந்த அளவுக்கு அவர் வொர்த் ஆனவர் இல்லை என்று பதிலளித்துள்ளார்.
1973இல் ஜப்பானும் சேர்க்கப்பட்டதால், அதன் எண்ணிக்கை 5ஆக அதிகரித்தது. பின்னர் 1975 மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி இத்தாலி இணைக்கப்பட்டதால் எண்ணிக்கை 6 ஆனது. இந்த அமைப்பில் 1976ல் கனடாவும், 1997இல் ரஷ்யாவும் சேர்ந்தன. இதனால் ஜி8 என அழைக்கப்பட்டது. ஆனால் 2014இல் ரஷ்யா விலகியதால், பிறகு ஜி7 என்று அழைக்கப்படுகிறது. இதில் ஐரோப்பிய யூனியன் அதிகாரபூர்வமற்ற உறுப்பினராக உள்ளது.
ஜி7 அமைப்பானது அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 7 நாடுகளைக் கொண்டது. இந்த 7 நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரம், அரசியல் விவகாரம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க ஜி7 அமைப்பு செயல்படுகிறது. ஆரம்ப காலத்தில் 1973இல் இந்த அமைப்புக்கான முன்னெடுப்பு எடுக்கப்பட்டபோது, அமெரிக்கா, பிரிட்டன், மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளே இடம்பெற்றிருந்தன.
மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி, உ.பி.யின் அரசியல் முக்கியத்துவம் கருதி வயநாடு தொகுதியை ராஜினாமா செய்யவுள்ளார். இதனையே கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரனும் வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிட வாய்ப்புள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி போட்டியிட்டால், அது அவரின் முதல் தேர்தலாக அமையும்.
Sorry, no posts matched your criteria.