News June 14, 2024

விக்கிரவாண்டியில் பாமக போட்டி

image

என்டிஏ சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக போட்டியிட உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் ஒரு மனதாக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். பாமக வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என்றும் அவர் கூறினார். முன்னதாக, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சிகளிடம் பேசப்படும் என அன்புமணி கூறியிருந்தார்.

News June 14, 2024

விஜய் சேதுபதியின் மாஸ்டர் பீஸ் ‘மகாராஜா’

image

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் – விஜய் சேதுபதி கூட்டணியில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. மகளுடன் தனியாக வசிக்கும் தந்தையாக விஜய் சேதுபதி அசத்தியிருக்கிறார். குடும்பக் கதையுடன் பின்னிப் பிணைந்த த்ரில்லர் திரைக்கதை, படத்தை சுவாரஸ்யமாக்குகிறது. குறைகள் சில இருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதையால் அனைத்தையும் மறக்கடித்து அசத்தியிருக்கிறார் ‘மகாராஜா’. *ரேட்டிங் (3/5)

News June 14, 2024

சென்னை வருகிறார் பிரதமர் மோடி

image

மூன்றாவது முறை பிரதமராகப் பதவியேற்றபின் ஜூன் 19ஆம் தேதி முதல் முறையாக நரேந்திர மோடி தமிழகம் வரவிருக்கிறார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். சென்னை வரும் மோடி, எழும்பூர் – நாகர்கோவில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். பின்னர், உடனடியாக டெல்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது.

News June 14, 2024

பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் கிலோ ₹600க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ஒரேநாளில் ₹2000 வரை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பிச்சிப்பூ ₹2,600க்கும், சில்லறை விலையில் ₹2,800 முதல் ₹3,000 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை கிலோ ₹600இல் இருந்து ₹800க்கும், சில்லறை விலையில் ₹1,000 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் 16, 17ஆம் தேதிகளில் அடுத்தடுத்து முகூர்த்தநாள் வர உள்ளது.

News June 14, 2024

கல்கி 2898 ஏ.டி. படத்தில் 10 நிமிடம் மட்டுமே வரும் கமல்?

image

பிரபாஸ், கமல், அமிதாப், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் கல்கி 2898 ஏ.டி. பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்தில் கமல் வில்லனாக நடித்துள்ளார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் இந்தத் தகவலை கமல் இல்லை என்று மறுத்தார். இந்நிலையில், படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே கமல் நடித்திருப்பதாக புதுத்தகவல் வெளியாகியுள்ளது.

News June 14, 2024

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

image

வேலூர் மாவட்டம் காட்பாடியில் 7ஆம் வகுப்பு மாணவன், தான் படிக்கும் பள்ளிக்கே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மபுரத்தில் உள்ள ஷ்ரிஷ்டி பள்ளிக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. அப்பள்ளியில் படிக்கும் சிறுவன் ஒருவன் காவலரிடம், தான் விளையாட்டாக மெயில் அனுப்பியதாகக் கூறிய நிலையில் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

News June 14, 2024

4ஆம் இடத்தை பிடித்த மும்பை பங்குச் சந்தை

image

ஹாங்காங் பங்குச் சந்தையை மீண்டும் பின்னுக்குத் தள்ளி, உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையானது மும்பை பங்குச் சந்தை. புளூம்பெர்க் நிறுவன தரவுகளின்படி, 5.18 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் மும்பை 4ஆவது இடத்திலும், ஹாங்காங் 5.17 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் 5ஆவது இடத்திலும் உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு மும்பை பங்குச் சந்தை 6% வரை ஏற்றம் கண்டுள்ளது.

News June 14, 2024

படிங்க, படிங்க, படிச்சிக்கிட்டே இருங்க!

image

சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, மாணவர்களிடம் படிங்க, படிங்க, படிச்சிக்கிட்டே இருங்க என்று அறிவுறுத்தினார். முன்னதாக, ‘யாரும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி; நன்றாக படிங்க’ என்றார். மாணவர்கள் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துமாறும், அதற்கு தேவையான அனைத்தையும் அரசு கவனித்துக்கொள்ளும் எனவும் அவர் தொடர்ச்சியாக நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.

News June 14, 2024

ஸ்மார்ட் வகுப்பறைகளை தொடங்கி வைத்தார் முதல்வர்

image

அரசுப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய அவர், தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினியையும் வழங்கினார். அத்துடன், தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

News June 14, 2024

செல்வப்பெருந்தகை முடிவு செய்ய முடியாது: ராகுல் காந்தி

image

தமிழகத்தில் யாருடன் கூட்டணியமைக்க வேண்டும் என்பதை செல்வப்பெருந்தகை முடிவு செய்ய முடியாது என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய செல்வப் பெருந்தகை, “எத்தனை காலத்திற்குதான் கூட்டணியை நம்பியிருப்பது?” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதுகுறித்த கேள்விக்கு, கூட்டணி குறித்து முடிவு செய்ய பல முக்கியத் தலைவர்கள் இருக்கின்றனர் என்று ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.

error: Content is protected !!