India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களால் பரவலாக பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப், தொடர்ந்து வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அதன்படி, தற்போது வீடியோ காலில் பேசுவோர் எண்ணிக்கையை 32ஆக அதிகரித்துள்ளது. இதனால் இனிமேல் 32 பேர் வரை குழுவாக வீடியோ காலில் பேச முடியும். அத்துடன் வீடியோ காலில் யார் பேசுகிறாரோ அவரின் காணொலி முதலில் வரும்வகையில் புதிய வசதியையும் வாட்ஸ் அப் அப்டேட் செய்துள்ளது.
கொரோனா காலத்தில் பொருளாதாரத் தேவைகளுக்காக, EPFO-யில் இருந்து கோவிட்-19 அட்வான்ஸ் வழங்கப்பட்டு வந்தது. இச்சேவையை பயன்படுத்தி இருமுறை முன்பணம் பெறலாம். இந்த நிலையில், தற்போது அதற்கான தேவை இல்லை என்பதால், இச்சேவையை திறும்ப பெறுவதாக EPFO நிறுவனம் அறிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், விலக்கு அளிக்கப்பட்ட அறக்கட்டளைகளுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அம்மாநில துணை முதலமைச்சராக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித்துறை, வனம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் அவரது கட்சி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தின் வதோதரா மாநாகராட்சியில் 462 வீடுகள் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், அரசுத் துறையில் பணியாற்றும் இஸ்லாமிய பெண்ணுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு வீடு ஒதுக்கப்பட்டது. அவருக்கு வீடு வழங்கியது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறி, சக குடியிருப்பினர் 2020இல் போராட்டம் நடத்தினர். 3 ஆண்டுகள் கழிந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 10ஆம் தேதி மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைத்தால் தான் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, திமுக கூட்டணியில் போட்டியிட்டதால் தான் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதாக அவர் கூறியிருந்தார். கூட்டணியை நம்பி இருக்க வேண்டாம் என மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி வரும் நிலையில், திமுக கூட்டணி நிச்சயம் தேவை என ஈவிகேஎஸ் உறுதியாக கூறி வருகிறார்.
2024 நீட் யுஜி தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் புதிதாக தொடுக்கப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு வரும் மனுக்களுடன் இந்த மனுக்களையும் சேர்க்கும்படி ஆணையிட்டது.
தாய்லாந்து நாட்டில் அரிதான நிகழ்வாக யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. யானைகளில் 1% மட்டுமே இரட்டை குட்டிகளை ஈன்றெடுக்கும் என்று விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிலும் அரிதாக ஒரு குட்டி ஆணாகவும் (60 கிலோ), மற்றொரு குட்டி பெண்ணாகவும் (55 கிலோ) பிறந்துள்ளது. 89 ஆண்டுகளுக்கு முன் நைஜீரியாவில் ஒரு யானை இரட்டை குட்டி ஈன்ற பின், தாய்லாந்து யானை அந்த சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை தொடந்து 3ஆவது மாதமாக வழங்கப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஏழை மக்களுக்கான அத்தியாவசிய தேவையான உணவுப்பொருட்களை வழங்காததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது எனவும், சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு தோல்வியடைந்து விட்டது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ், தனிநபர் கோடீஸ்வரர் பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ₹13,219 கோடி ஆகும். கேட்ஸ் அறக்கட்டளை தாக்கல் செய்த அறிக்கையில், பங்கு முதலீட்டு மூலம் ஈவுத் தொகையாக ₹3,978 கோடி கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, எந்த வேலையும் செய்யாமல் பங்கு முதலீட்டு மூலம் நாளொன்றுக்கு ₹10.90 கோடி கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.