India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்ய, கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜாமினில் வர முடியாத பிடியாணையை நேற்று பிறப்பித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், ஜூன் 17 வரை எடியூரப்பாவை கைது செய்ய தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.
கோல்ட் பிளட்டில் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்ய தூண்டும் ஏ, பி போன்ற (RH காரணி) ஆன்டிஜென்களே இருக்காதாம். இதனால்தான் இந்த RH-NULL ரத்தத்தின் ஒரு துளி கூட தங்கத்தை விட மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. இந்த வகை ரத்தத்தை கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து ரத்த தானம் செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் தேவைப்படுபவர்களுக்கு உடனே ரத்தம் செலுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் வேண்டுகோள்
விடுகின்றனர்.
RH-NULL ரத்த வகையை, ‘கோல்ட் பிளட்’ என்று மருத்துவ உலகம் அழைக்கிறது. முதன்முதலில் 1961 இல் ஆஸ்திரேலிய பழங்குடி பெண்ணிடம் மிக அரிதான இந்த ரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் வசிப்பவர்களில் 50-க்கும் குறைவான நபர்களிடம் மட்டும்தான் இவ்வகை ரத்தம் இருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா? ஜப்பான், பிரேசில், கொலம்பியா, அயர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க கோரி, EPS, OPS, சசிகலாவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பு குழுவின் ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, கே.சி.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளனர். மறப்போம்! மன்னிப்போம்! என்ற தத்துவத்தை மனதில் கொண்டு அதிமுக தலைவர்கள் ஒன்றுபட வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும், அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே, அதிமுக தொண்டர்களின் எண்ணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மருத்துவ துறையில் 2,553 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். கடந்த மே மாதமே விண்ணப்பிக்க அவகாசம் முடிந்த நிலையில், கூடுதலாக 2 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதிகபட்சமாக 58 வயதிற்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆர்வமுடையோர் <
கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில், தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 10 நாள்களில் 1,026 பேர் டெங்குவாலும், 137 பேர் சிக்கன் குனியாவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில், எல்லையோர மாவட்டங்களில் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020ல் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘சூரரைப் போற்று’. தமிழில் கிடைத்த வரவேற்பையடுத்து இப்படம் இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் ‘சர்ஃபிரா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இப்படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்றும், டிரெய்லர் ஜூன் 18ஆம் தேதி வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாய்களின் உளவியல், நடத்தைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மனித உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆக்ரோஷமான வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து இந்திய கென்னல் கிளப் தொடர்ந்த வழக்கில், விரிவான ஆய்வு செய்தபின்பு நாய்கள் ஆரோக்கியமானவையா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
T20 WCயில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வங்கதேச வீரர் ஷாகிப் மெதுவாக விளையாடியதே தோல்விக்கு காரணம் என முன்னாள் இந்திய அணி வீரர் சேவாக் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ‘சேவக் யார்? ஒரு வீரர் எப்போதும் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என ஷாகிப் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், தான் அணியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதால் விமர்சனத்தை தவிர்க்கிறேன் என்றார்.
பி.எஸ்.எஃப் துணை ராணுவப் படையின் பாராமெடிக்கல் பிரிவில் நிரப்பப்படவுள்ள 172 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Staff Nurse, Physio-therapist உள்ளிட்ட பணியில் சேர ஆர்வமும் கல்வித் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 – 30. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 17. ஊதியம்: ₹21,700 – ₹1,42,400/-. கூடுதல் தகவல்களுக்கு <
Sorry, no posts matched your criteria.