News June 14, 2024

காங்கிரஸில் கோஷ்டி மோதல் முற்றுகிறதா?

image

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் மீண்டும் கோஷ்டி மோதல் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை அணியினர் இடையே நடந்த மோதல், தற்போது தலைவர்களுக்கு மத்தியிலான சண்டையாக உருவெடுத்துள்ளது. “காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும்” எனக் செல்வப்பெருந்தகையும் “நடப்பதே காமராஜர் ஆட்சிதான்” என இளங்கோவனும்
பொதுக்குழுக் கூட்டத்திலேயே மாறி மாறி கருத்துகளைத் தெரிவித்தது இதனை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளது.

News June 14, 2024

பட்ஜெட்டில் FAME-3 பற்றிய அறிவிப்பு?

image

விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் FAME-3 திட்டத்தை செயல்படுத்துவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 2015இல் மின்சார வாகன உற்பத்தி & தொழில்நுட்பத்தை மேம்படுத்த FAME திட்டம் பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. FAME-1க்கு ₹5,172 கோடியும், FAME-2க்கு ₹10,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. FAME-2 திட்டம் மார்ச் 31 ஆம் தேதி நிறைவடைந்தது கவனிக்கத்தக்கது.

News June 14, 2024

₹1000 வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

image

அரசுப் பள்ளிகளில் 6 -12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கும் “தமிழ் புதல்வன் திட்டம்” ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக ₹360 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். மாணவர்கள் தங்களின் கல்விச் சான்று, ஆதார் எண், புகைப்படம் போன்ற ஆவணங்களை கல்லூரியில் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

News June 14, 2024

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: எல்.முருகன்

image

தவறான தகவல் அல்லது வதந்தியை பரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சராக பொறுப்பேற்ற பின் தமிழகத்திற்கு வருகை தந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியின் ஆட்சியில் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

News June 14, 2024

மூன்றாவது குழந்தைக்கு தந்தையான பட்லர்

image

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோஸ் பட்லர் மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். அவரது மனைவி லூயிஸ் பட்லர் தற்போது ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு சார்லி என்று பெயரிட்டுள்ளதாக தம்பதியினர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்ததையடுத்து, அவர்களுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. இவர்களுக்கு ஏற்கனவே ஜார்ஜியா ரோஸ் மற்றும் மார்கோட் என்ற இரு மகள்கள் இருக்கின்றனர்.

News June 14, 2024

முட்டை விலை 20 காசுகள் குறைந்தது

image

தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்துள்ளது. கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த முட்டை விலை இன்று சற்று குறைந்துள்ளது. இது தொடர்பாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள விலைப் பட்டியலில், முட்டை கொள்முதல் 20 காசுகள் குறைந்து ₹5.30ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சில்லறை விலையில் ஒரு முட்டை 6 ரூபாய் முதல் 6 ரூபாய் 50 காசுகள் வரை விற்கப்படுகிறது.

News June 14, 2024

விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

வார விடுமுறையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு முன்பதிவு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து இன்று மற்றும் ஜூன் 16ஆம் தேதி இரவு 10:20க்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் பகல் 11 மணிக்கு நாகர்கோவிலை அடையும். மறுமார்க்கத்தில் ஜூன் 15, 17 தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 1:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 3 மணிக்கு தாம்பரத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 14, 2024

3 நாள்கள் தொடர் விடுமுறை

image

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, நாளை முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாள்கள் வழக்கம்போல விடுமுறை. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் திங்கள் கிழமை, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சனி, ஞாயிறு, திங்கள் என பள்ளி மாணவர்களுக்கு தொடர்ச்சியாக 3 நாள்கள் விடுமுறை வருகிறது.

News June 14, 2024

பச்சை ரத்தம் கொண்ட மனிதர்கள்?

image

பச்சை ரத்தம் கொண்ட மனிதர்கள் இப்பூமியில் வாழ்ந்துவருகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மனித உடலில் ஓடும் ரத்தமானது சிவப்பு நிறத்தில் இருந்தாலும், கடலுக்கடியில் சென்றால், அது பச்சை வண்ணம் கொண்டதாக காட்சியளிக்கும். காரணம் ஆழ்க்கடலில், 30 அடிக்கு கீழ் சிகப்பு நிற ஒளிகள் ஊடுருவி செல்வதில்லை. இதனால்தான், நம் கண்களுக்கு ரத்தமானது பச்சை நிறத்தில் தோற்றப் பிழையாக காட்சியளிக்கும்.

News June 14, 2024

தயாரிப்பாளர் வெளியிட்ட ‘GOAT’ அப்டேட்

image

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘GOAT’. பிரசாந்த், சினேகா, மீனாட்சி சவுத்திரி உள்பட பலர் நடித்துவரும் இப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. வரும் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வரவிருப்பதால் விரைவில் ‘GOAT’ படத்தின் அப்டேட்களை எதிர்பார்க்கலாம் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். ஜூன் 22ல் ‘GOAT’ இரண்டாவது சிங்கிள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!