India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூரில் சிறுத்தைக்குப் பயந்து காருக்குள் பதுங்கியிருந்த 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். முதலில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பின்னர் கார் ஷெட்டுக்குள் புகுந்ததையடுத்து, அங்கிருந்த 5 பேரும் 2 காருக்குள் தஞ்சம் அடைந்தனர். சுமார் 6 மணி நேரமாக காருக்குள் சிக்கித் தவித்த அவர்களை மீட்ட வனத்துறையினர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்திற்கு நல்லது செய்துவிட்டு தோல்வி அடைந்துள்ளதாக, நடிகையும், முன்னாள் அமைச்சருமான ரோஜா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் YSR காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. நகரி தொகுதியில் ரோஜாவும் தோல்வி அடைந்தார். இந்த நிலையில், X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “தீமை செய்து தோற்றால்தான் அவமானம். மரியாதையுடன் எழுவோம். மக்கள் குரலை எதிரொலிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
நிலவின் ரகசியங்களை ஆராய்வதற்காக இந்தியாவின் ISRO சார்பில், முதன்முதலாக சந்திரயான்-1 திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான பணிகள், 22 அக்டோபர் 2008 முதல் 28 ஆகஸ்ட் 2009 வரை நடந்த நிலையில், அதன் திட்ட இயக்குநராக ஸ்ரீநிவாஸ் ஹெக்டே இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, UR ராவ் செயற்கைக்கோள் மையத்தின் உறுப்பினராக அவர், ஆயிரக்கணக்கான விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளிலும் பங்கேற்றுள்ளார்.
பெற்றோர்கள் குழந்தைகள் மீது பாசமாக இருந்தாலும், சில நேரங்களில் பயன்படுத்தும் வார்த்தைகள் குழந்தைகளுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கோபத்தை வெளிப்படுத்தும்போது நீ ஒரு முட்டாள், அறிவில்லையா?, நீ செய்வதை இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். இது அவர்களை பாதுகாப்பற்றவர்களாக உணரச் செய்யும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
* மேஷம் – ஊக்கம் தரும் நாள்
*ரிஷபம் – அமைதி தேவை
*மிதுனம் – உதவி செய்வதால் பலன்
*கடகம் – ஓய்வு அவசியம்
*சிம்மம் – மறதி ஏற்படும்
*கன்னி – நம்பிக்கை வேண்டும்
*துலாம் – பகை உண்டாகும்
*விருச்சிகம் – சஞ்சலம் ஏற்படும்
*தனுசு – தடை உருவாகும்
*மகரம் – வரவு அதிகரிக்கும் *கும்பம் – வெற்றி உண்டாகும் *மீனம் – ஆசை அதிகரிக்கும்
‘தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம்’ என காங்கிரஸ் கட்சியின்
இந்நாள் & முன்னாள் தலைவர்கள் மேடைகளில் அடிக்கடி கூறுவதுண்டு. உண்மையில், காங்கிரஸுக்கு தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு செல்வாக்கு உள்ளதாக என கேள்வி எழுந்துள்ளது. விவாதப் பொருளாக மாறியுள்ள இந்த விவகாரம் குறித்து காங்கிரஸின் வாக்கு வங்கி குறித்து புள்ளிவிவரங்களின் அடிப்படையில், விரிவாகப் பார்ப்போம்.
சந்திரயான்-1 மிஷன் இயக்குநர் ஸ்ரீநிவாஸ் ஹெக்டே (71) உடல்நலக் குறைவால் காலமானார். 1978 – 2014 வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) பணிபுரிந்த ஸ்ரீநிவாஸ், நிலவின் ரகசியங்களை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான்-1 மிஷனின் இயக்குநராக பதவி வகித்துள்ளார். இந்த நிலையில், சிறுநீரக செயலிழப்பு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஸ்லோவேனியா 3 ஸ்டார் கிராண்ட் ப்ரீ குதிரையேற்றப் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ருதி வோரா முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். லிபிகா நகரில் நடந்த பைனலில் சிடிஐ -3 பிரிவில் பங்கேற்ற ஸ்ருதி, 67.761 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்ததன் மூலம், இப்போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அதே போல, கிராண்ட் ப்ரீ ஸ்பெஷல் போட்டியில் 2ஆம் இடம் பிடித்துள்ளார்.
டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் பயன், முறையாகச் சென்று சேருவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பருவமழை தாமதமாகி வருவதால், மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்கப்படவில்லை. இதனால், டெல்டா விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை உள்ளிட்டவைகளை வழங்க, ₹78.67 கோடியில் சிறப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மழைக்காலத் தவளை போல கூவிக் கொண்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எங்கே சென்றார் என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விக்கிரவாண்டியில் நடந்த திமுக வேட்பாளர் சிவாவை அறிமுகம் செய்து பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலினின் நலத்திட்டங்களை பாராட்டும் வகையில் மக்கள் திமுக கூட்டணியை வெற்றிபெற வைத்தனர். தமிழகத்தில் தாமரை மலரும் என்றவர்களை இப்போது காண முடியவில்லை” என்றார்.
Sorry, no posts matched your criteria.