India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் ஜாமீன் பெற்ற நிலையில் தெலுங்கு நடிகை ஹேமா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகை ஹேமாவுக்கு, 3 நாட்களுக்கு முன்பு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், அன்றைய தினம் அவர் விடுவிக்கப்படவில்லை. ஜாமீன் தொடர்பான அலுவல் பணிகள் முடிந்த நிலையில், ஹேமா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: அறிவுடைமை
◾குறள்: 421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
◾விளக்கம்:
பகையால் அழிவு வராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.
வாகனங்களில் வழக்கறிஞர், மருத்துவர் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து மருத்துவர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு மட்டும் இடைக்கால விலக்களித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கார்களில் கட்சிக்கொடி கட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பினார். அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.
டி20 WC இதுவரை 6 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, பி பிரிவில் ஆஸி., சி பிரிவில் ஆப்கான், வெஸ்ட் இண்டீஸ், டி பிரிவில் தென்னாப்பிரிக்கா அணிகள் தேர்வாகியுள்ளன. மேலும் 2 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வேண்டியுள்ளது. இதற்காக இங்கி., உள்ளிட்ட 5 அணிகள் வெற்றி பெற போராடி வருகின்றன. அடுத்த சில நாள்களில் சூப்பர் 8 செல்லும் அணிகளின் முழு விவரம் தெரியவரும்.
இன்று (ஜூன் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், 3 போட்டியில் பங்கேற்று 2 தோல்வி, 1 வெற்றியுடன் 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற அயர்லாந்து-அமெரிக்கா இடையேயான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால், அமெரிக்கா அணி 5 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஏ பிரிவில் இந்திய அணி ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திமுக வேட்பாளரை அறிவித்த நிலையில், அதிமுக, பாமக வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. திமுக சார்பாக அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முக்கிய கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பிறகு, தேர்தல் பரப்புரை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (ஜூன் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ தமிழிசையிடம் அமித் ஷா கோபமாக பேசவில்லை: அண்ணாமலை
➤ எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்றம்
➤ விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி: அண்ணாமலை அறிவிப்பு
➤ பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்த மோடி
➤ ‘குரங்கு பெடல்’ படம் ஓடிடியில் வெளியானது
➤ ஹார்திக் பாண்டியா ஆட்டம் மிகச் சிறப்பாக உள்ளது: ஸ்ரீசாந்த்
விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் ‘மோதலும் காதலும்’ தொடர் ஓராண்டுக்குள் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. சமீர் அகமது, அஸ்வதி ஆஷ், தன்விகா ஆகியோர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துவரும் இத்தொடரை சுரேஷ் சண்முகம் இயக்கி வருகிறார். இந்நிலையில், இத்தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இத்தொடர் நிறைவடைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.