News November 5, 2025

ஹர்மன்பிரீத் கவுரின் கணவர் யார்? தேடும் நெட்டிசன்கள்

image

உலகக்கோப்பையை வென்றதற்கு இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆனால், அதே நேரத்தில் சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள தான் ஆர்வமாக இருக்கிறார்கள். அதேபோல, அவரது கையில் இருக்கும் டாட்டூவின் அர்த்தம் என்ன என்றும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். டாட்டூ பிரம்ம யந்திரா எனக் கூறப்படும் நிலையில், அவரது கணவர் குறித்த தகவல் இல்லை.

News November 5, 2025

விலை மொத்தம் ₹5000 குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹163-க்கும், கிலோ வெள்ளி ₹2000 குறைந்து ₹1,63,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹3000, இன்று ₹2000 என 2 நாளில் மொத்தம் ₹5000 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை சரிந்துள்ளதால், வரும் நாள்களில் மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 5, 2025

கோவை மாணவியை மீட்க தாமதம் ஏன்?: EPS

image

கோவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியை 100 போலீஸ் தேடியும் மீட்க நான்கரை மணி நேரம் ஆனது ஏன் என EPS கேட்டுள்ளார். குற்றவாளிகளை பிடித்ததாக CM தம்பட்டம் அடித்துக்கொள்வதாக கூறிய அவர், மாணவியை மீட்க ஏற்பட்ட தாமதத்திற்கு தலைகுனிய வேண்டும் என்றார். மேலும், இருட்டான இடம் என்பதால் தாமதம் ஏற்பட்டது என்ற விளக்கத்தை அளிக்கவே திமுக அரசின் காவல்துறை கூச்சப்பட வேண்டும் என கடுமையாக சாடியுள்ளார்.

News November 5, 2025

ஹைட்ரோஜென் குண்டை வீசவுள்ள ராகுல் காந்தி

image

டெல்லியில் இன்று பகல் 12 மணிக்கு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.
வாக்குத் திருட்டு தொடர்பான ‘ஹைட்ரஜன் குண்டை’ விரைவில் வெளியிட உள்ளதாக கடந்த செப்டம்பரில் ராகுல் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள பிரெஸ்மீட் இதுதொடர்பானது தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக ராகுல் குற்றம்சாட்டியிருந்தார்.

News November 5, 2025

BREAKING: வந்ததுமே விஜய்க்கு அதிர்ச்சி

image

தவெக சிறப்பு பொதுக்குழு நடைபெறவுள்ள மாமல்லபுரத்திற்கு காரில் விஜய் வருகை தந்தார். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த தவெக பேனர்கள், கொடிகளை போலீசார் அகற்றியுள்ளனர். இதை பார்த்து விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தவெகவுக்கு போலீசார் கடும் நெருக்கடி கொடுப்பதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டிய நிலையில், அனுமதி பெறாமல், பேனர்கள், கொடிகள் வைக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

News November 5, 2025

அப்பாவை மிஞ்சிய மகன்!

image

துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த தீபாவளியன்று வெளியான இப்படம், தற்போது வரை தமிழ்நாட்டில் மட்டும் ₹50 கோடி குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது கடைசியாக வெளியான சீயான் விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படத்தின் தமிழக வசூலை விட அதிகம். ‘வீர தீர சூரன்’ படம் தமிழகத்தில் ₹38- ₹40 கோடி வரை வசூலித்ததாகவே கூறப்படுகிறது. நீங்க ‘பைசன்’ பாத்துட்டீங்களா.. எப்படி இருக்கு?

News November 5, 2025

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாளாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கம், இன்று சவரனுக்கு ₹560 குறைந்து, ₹89,440-ஆகவும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹11,180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹800, இன்று ₹560 என 2 நாளில் ₹1360 குறைந்துள்ளது.

News November 5, 2025

பாஜக இயக்குகிறதா? செங்கோட்டையன் பதில்

image

53 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் தன்னை பாஜக உள்பட யாராலும் இயக்கமுடியாது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். EPS-ன் மகன், மைத்துனர் போன்றவர்கள் அதிமுகவை இயக்குகிறார்கள் என்ற அவர், கட்சியை EPS-ன் உறவினர்கள் எங்கிருந்து, எப்படி இயக்குகிறார்கள் என அனைத்தும் தெரியும் என கூறியுள்ளார். மேலும், EPS-ன் குடும்ப அரசியலால் அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் பேசியுள்ளார்.

News November 5, 2025

உங்க பேங்க் பேலன்ஸ் அறிய, மிஸ்டு கால் கொடுங்க!

image

உங்களின் பேங்க் பேலன்ஸை அறிய வங்கி (அ) ATM-க்கு செல்ல வேண்டியதில்லை. ரெஜிஸ்டர் செய்த போன் நம்பரில் இருந்து, வங்கிக்கு மிஸ்டு கால் கொடுத்தாலே போதும். வங்கிகளின் கட்டணமில்லா நம்பர்கள்: SBI- 09223766666, ICICI- 09594612612, HDFC- 18002703333, AXIS -18004195959, UNION- 09223008586, Canara- 09015734734, BOB- 8468001111, PNB- 18001802223, Indian Bank- 9677633000, BOI- 09266135135. SHARE IT.

News November 5, 2025

மறைந்த தமிழ் நடிகர் .. கண்ணீரில் குடும்பம்

image

கமலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை ‘நாயகன்’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. திரையரங்கில் கமல் பட ரிலீஸ் கொண்டாட்டம் என்பது ரோபோ சங்கர் இல்லாமல் முழுமையாகாது. ரோபோ சங்கர் மறைந்துபோனாலும், அவருக்காக நாயகன் பட ரீ-ரிலீஸூக்கான முதல் டிக்கெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை கேட்டு கண்ணீர் விடும் அவரின் குடும்பத்தினர், ரோபோ சங்கர் தற்போது இருந்திருந்தால், திருவிழா போல் கொண்டாடி இருப்பார் என கூறுகின்றனர்.

error: Content is protected !!