News June 16, 2024

முடி உதிர்வதை தடுக்க இதை செய்யுங்கள் போதும்!

image

மனஅழுத்தம் ஏற்படுத்தும் சீரற்ற ரத்த ஓட்டம் முடி உதிர்வதற்கு வழிவகுக்கிறது. முடி உதிர்வதற்கு முக்கிய காரணமாக இருக்கும் அதனை சரிசெய்ய யோகா சிறந்த தீர்வு தருகிறது என சீன மரபு மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. குறிப்பாக வஜ்ராசனம், சர்வாங்காசனம், சிரசாசனம், விபரீதகரணி போன்றவற்றை செய்வது நல்லது. இவற்றை செய்ய தினமும் 15 நிமிடம் செலவழித்தாலே போதும், மன அழுத்தத்தால் ஏற்படும் முடி உதிர்வை தடுக்கலாம்.

News June 16, 2024

6.61 கோடியை எட்டிய பயணியர் எண்ணிக்கை

image

2023-24 நிதியாண்டின் ஜனவரி – மே வரையிலான காலகட்டத்தில், உள்நாட்டு விமானப் பயணங்களின் எண்ணிக்கை 6.61 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், “2023ஆம் ஆண்டு மே மாதம் 1.32 கோடியாக இருந்த விமானப் பயணங்களின் எண்ணிக்கை, கடந்த மே மாதம் 1.37 கோடியாக உயர்ந்து, 4.4% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News June 16, 2024

சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்

image

சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு சைபர் க்ரைம் போலீசாரால் முடக்கப்பட்டுள்ளது. Red Pix யூடியூப் சேனலில், பெண் காவலர்கள் குறித்து ஆபாசமாகப் பேசிய வழக்கில், தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது HDFC வங்கி கணக்கில், கடந்த சில மாதங்களில் 1.25 கோடி பரிவர்த்தனை நடந்திருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News June 16, 2024

ஜூன் 16 வரலாற்றில் இன்று!

image

*1487 – 34 ஆண்டுகால ரோஜாப்பூ போர் முடிவடைந்தது. *1773 – கிழக்கிந்தியக் கம்பனியின் முதன்மை மாகாணமாக வங்கம் அறிவிக்கப்பட்டது. *1846 – ஒன்பதாம் பயசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். *1893 – கலைத்தந்தை தியாகராஜனார் பிறந்த நாள். 1911 – நியூயார்க்கில் IBM தொடங்கப்பட்டது. *1940 – லித்துவேனியாவில் கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்தது. *1958 – அங்கேரியப் புரட்சியில் ஈடுபட்ட போராளிகள் தூக்கிலிடப்பட்டனர்.

News June 16, 2024

புதிய இலச்சினையை வெளியிட்ட உதயநிதி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் பேசிய அவர், இலச்சினையில் உள்ள மஞ்சள் நிறம் ஆற்றலையும், நீல நிறம் உத்வேகத்தை குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளதாகக் கூறினார். மேலும், அதில் உள்ள வட்ட வடிவம், விளையாட்டுத்துறை முன்னேற்றத்தின் சான்றாக பாதிக்கப்பட்டுள்ளது என வும் தெரிவித்துள்ளார்.

News June 16, 2024

SUPER 8: இந்தியாவை எதிர்கொள்ளும் அணிகள்

image

மேற்கிந்திய தீவுகள் மைதானத்தில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-8 போட்டியில், இந்தியா 3 அணிகளை எதிர்கொள்ளவிருக்கிறது. ஜூன் 20ஆம் தேதி ஆப்கனையும், 22ஆம் தேதி வங்கதேசம் அல்லது நெதர்லாந்து அணியையும் எதிர்கொள்ளும் இந்திய அணி, இறுதியாக ஜூன் 24இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும். இதில், குறைந்தது இரண்டில் வென்றாலும், அரையிறுதிக்கு இந்தியா முன்னேறிவிடும்.

News June 16, 2024

$15 பில்லியன் இழப்பை சந்தித்த மின்னணு உற்பத்தித் துறை

image

சீனாவுடனான மோதல் காரணமாக இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில், 15 பில்லியன் டாலர் உற்பத்தி இழப்பும், ஒரு லட்சம் பணிவாய்ப்பு இழப்பும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 5,000 சீன விசா விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள காரணத்தால், வணிக விரிவாக்கமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News June 16, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை ▶ குறள் எண்: 451
▶குறள்:
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
▶பொருள்: அறமற்ற ஒழுக்கக்கேடான மக்களின் கூட்டத்தோடு பெரியோர் சேர மாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேரும் என்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேருவர்.

News June 16, 2024

விரைவில் அறிமுகமாகும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்

image

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இன்னும் 2 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். ஸ்லீப்பர் ரயில்களைத் தயாரிக்கும் பணிகள் பெங்களூருவில் (BEML) நடந்து வருவதாகக் கூறிய அவர், சர்வதேச பாதுகாப்பு தரநிலைகளுடன் ரயில் கட்டமைக்கப்பட்டு வருகிறது என்றார். இந்த ரயிலானது, ஒரு மணி நேரத்திற்கு 200 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

News June 16, 2024

வெற்றிக்கு ஹர்திக்கின் ஃபார்ம் முக்கிய காரணம்: பதான்

image

இந்திய அணியின் வெற்றிக்கு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு ஃபார்ம்தான் முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீசின் ஈரம் இல்லாத உலர் ஆடுகளங்களுக்கு ஹர்திக்கின் பந்துவீச்சுதான் சரியாக இருக்கும் எனக் கூறிய பதான், அவர் பவுன்சர் & கட்டர் பந்துகளை வீசினால், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அது மிகவும் கடினமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!