News June 16, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*அரசியலமைப்பு சட்டத்தை மாற்றத் துடிக்கும் பாஜகவை தடுக்கும் அரணாக 40 எம்.பி.க்கள் இருப்பார்கள் – ஸ்டாலின்
*கட்சியை விட்டு சென்றவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள மாட்டோம் – உத்தவ் தாக்கரே
*T20 WC: நமீபியா அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில், இங்கிலாந்து அணி வென்றது.
*TCS நிறுவனத்துக்கு டெக்சாஸ் நீதிமன்றம் ₹,1600 கோடி அபராதம் விதித்துள்ளது.
*வடகிழக்கு இந்திய பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

News June 16, 2024

புத்தரின் பொன்மொழிகள்

image

✍பகைமையை பகைமையால் தணிக்க முடியாது; அன்பினால் மட்டுமே பகைமையை தணிக்க முடியும். ✍நிம்மதியை அடைய ஒன்று விட்டு கொடுங்கள் இல்லையென்றால் விட்டு விடுங்கள். ✍ உண்மையை அழிக்கும் ஆற்றல் இவ்வுலகில் யாருக்கும் இல்லை. ✍மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை; அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்வான். ✍ போரில் ஆயிரம் பேரை வெல்வதை காட்டிலும் சிறந்தது உன் மனதை நீ வெற்றி கொள்வது. ✍அறிவே வலிமை.

News June 16, 2024

TCS நிறுவனத்துக்கு ₹1,600 கோடி அபராதம் விதிப்பு

image

உலகின் முன்னணி ஐடி நிறுவனமான TCS நிறுவனத்துக்கு டெக்சாஸ் நீதிமன்றம் ₹,1600 கோடி அபராதம் விதித்துள்ளது. TCS தனது வர்த்தக ரகசியங்களை வெளியிட்டதாகக் குற்றம்சாட்டி, DXC நிறுவனம் வழக்கு பதிவு செய்திருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், வர்த்தகத்தை தவறாகப் பயன்படுத்திய TCS இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய TCS முடிவு செய்துள்ளது.

News June 16, 2024

தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகம் திறக்க வேண்டும்

image

உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று CPM மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகம் வழங்க வேண்டிய 99 டி.எம்.சி.யை நிலுவையில் வைத்துள்ளதால், குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தமிழக அரசு காவிரியில் இருந்து நீரை பெறுவதற்கான சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

News June 16, 2024

‘மகாராஜா’ படக்குழுவை வாழ்த்திய வெங்கட் பிரபு

image

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்திற்கு இயக்குநர் வெங்கட் பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், “மகாராஜா படத்தை ரசித்தேன். அருமையான திரைக்கதை. விஜய் சேதுபதி, நடராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு படக்குழுவுக்கு வாழ்த்து” எனப் பாராட்டியுள்ளார்.

News June 16, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶ஜூன்- 16 | ஆனி – 02
▶கிழமை: ஞாயிறு | ▶திதி: சூன்யம்
▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 03:45 – 04:30 வரை ▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, இரவு 01:30 – 02:30 வரை
▶ராகு காலம்: இரவு 04:30 – 06:00 வரை
▶எமகண்டம்: நண்பகல் 12:00 – 01:30 வரை
▶குளிகை: மாலை 03:00 – 04:30 வரை
▶சூலம்: மேற்கு | ▶பரிகாரம்: வெல்லம்
▶சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்

News June 16, 2024

T20 WC: நமீபியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி

image

டி20 உலகக் கோப்பை தொடரின் 34ஆவது லீக் போட்டியில், நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ENG அணி வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ENG அணி 10 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, டி.எல். விதிப்படி 127 ரன்கள் என்ற இலக்கை எட்ட களமிறங்கிய நமீபியா அணியை, ENG அணி அபார பந்துவீச்சால் ஆட்டம் காண வைத்து, 84 ரன்களில் சுருக்கி அபார வெற்றி பெற்றது.

News June 16, 2024

புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்

image

புவி வெப்பநிலை& நீர் மேலாண்மையை செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கும் ‘திரிஷ்ணா’ என்ற திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்காக பிரான்ஸின் CNES விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. எரிமலை செயல்பாடு, பனி உருகும் ஓட்டம் & பனிப்பாறை இயக்கவியல் ஆகியவற்றின் விரிவான மதிப்பீட்டிற்கும் இந்த செயற்கைக்கோள் உதவும் எனக் கூறப்படுகிறது.

News June 16, 2024

10,020 பழைய பேருந்துகள் அகற்றப்படும்: சிவசங்கர்

image

தமிழகம் முழுவதும் தற்போது இயக்கத்தில் இருக்கும் 20,116 பழைய பேருந்துகளில் 10,020 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு, அகற்றப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், இ-பேருந்துகள், தாழ்தள பேருந்துகள் இயக்கத்துக்குக் கொண்டு வரப்படும் எனக் கூறிய அவர், இந்தாண்டு இறுதிக்குள் இப்பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

News June 16, 2024

2026 டி20 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற அணிகள்

image

அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. அத்தொடரை நடத்தும் இந்தியாவும், இலங்கையும் தானாகவே முதன்மை போட்டிக்கு தகுதி பெற்றன. அதே போல, நடப்பு ஆண்டில், சூப்பர் 8-க்கு முன்னேறிய USA உள்ளிட்ட அனைத்து அணிகளும் நேரடியாக தகுதி பெறும். லீக் சுற்றில் வெளியேறிய PAK, NZ அணிகளின் தகுதி, தரவரிசையைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். தகுதி பெறாத அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்களில் விளையாட வேண்டும்.

error: Content is protected !!