News June 16, 2024

தனித்து போட்டியிட திமுகவுக்கு தைரியம் இல்லை: வானதி

image

தனித்து போட்டியிட தைரியம் இல்லாத ஒரே கட்சி திமுக என, வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக வென்றதை குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டதால் தான் இது சாத்தியமானது என விளக்கமளித்துள்ளார். மேலும், தேர்தலில் தனித்து போட்டியிட்ட பிறகு, பாஜகவை பற்றி முதல்வர் ஸ்டாலின் விமர்சிக்கலாம் எனவும் அவர் காட்டமாகக் கூறியுள்ளார்.

News June 16, 2024

மாணவர்களுக்கு வாசிப்பு வழிகாட்டி கையேடு

image

அரசுப் பள்ளிகளில் 1 -12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்கட்ட பயிற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் (2024-25) புத்தகங்கள், வாசிப்பு இயக்கக் கையேடு ஆகியவை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த கையேடுகள் செவ்வாய்கிழமை முதல் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

News June 16, 2024

APPLY NOW: செபி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நிறுவனத்தில் காலியாக உள்ள 97 அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல், பொருளாதாரம், வணிகம், நிதி பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன், எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு <>https://www.sebi.gov.in/<<>> என்ற இணையதளம் மூலம் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்.

News June 16, 2024

கடவுளை சந்தித்த போப் பிரான்சிஸ்: காங்கிரஸ்

image

ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்ற பிரதமர் மோடி, வாடிகன் தலைவரான போப் பிரான்சிசை சந்தித்து பேசினார். இந்நிலையில், இந்த புகைப்படத்தை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள கேரள காங்கிரஸ், கடைசியாக கடவுளை சந்திக்கும் வாய்ப்பு போப் பிரான்சிசுக்கு கிடைத்துள்ளதாக கிண்டல் செய்துள்ளது. பிரதமர் மோடி மக்களவைத் தேர்தல் நேரத்தில் தன்னை கடவுளின் தூதுவன் என கூறிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

News June 16, 2024

₹1000 மகளிர் உரிமை தொகை குறித்து புது தகவல்

image

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். இதில், முன்னாள் அரசு மற்றும் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும், புதிதாக திருமணமானவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹1000 வழங்கப்படும் என தெரிகிறது. இதற்கு புதிய ரேஷன் அட்டை, திருமண பதிவுச்சான்று, குடும்ப தலைவி பெயர் உள்ள வங்கி கணக்கு, அந்த வங்கி கணக்கு ஆதார் + அந்த பெண்ணின் போன் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

News June 16, 2024

முன்பதிவு பெட்டிகளில் அலைமோதும் கூட்டம்

image

வடமாநிலங்களைப் போலவே சமீப காலமாக தமிழ்நாட்டிலும் ரயில் முன்பதிவு பெட்டிகளில், டிக்கெட் இன்றி பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வார இறுதி நாள்களில் முன்பதிவு பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், டிக்கெட் எடுத்து பயணிக்கும் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், வார இறுதி, பண்டிகை நாள்களில் கூடுதல் ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News June 16, 2024

தந்தையர் தினம் உருவாக காரணமான பெண்

image

USA-வின் சோனாரா என்ற பெண்மணிதான், தந்தையர் தினம் கொண்டாட காரணமானவர். தாய் இறந்தபின், ராணுவ வீரரான தந்தை தங்களை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்ததால், அவரின் தியாகத்தை கெளரவிக்க எண்ணி, ஜூன் 5ஆம் தேதி தந்தையர் தினத்தை கொண்டாட நினைத்தார் சோனாரா. ஆனால், சில காரணங்களால், ஜூன் மாதத்தின் 3ஆவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டது. அந்நாளை, அதிபர் நிக்சன், தேசிய விடுமுறை நாளாக அறிவித்தார்.

News June 16, 2024

நாளை இந்திய பங்குச்சந்தை விடுமுறை

image

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாளை இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் வர்த்தகம் மீண்டும் தொடங்கும் என தேசிய பங்குச்சந்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து 3 நாள்கள் (சனி, ஞாயிறு, திங்கள்) விடுமுறையை சந்திக்கிறது. அதே நேரம், MCX மார்க்கெட் நாளை மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 16, 2024

திமுகவுக்கு முதல் வெற்றி: MRK. பன்னீர்செல்வம்

image

இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்திருப்பதே திமுகவுக்கு முதல் வெற்றி என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தோல்வி பயத்தை மறைக்கவே, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என இபிஎஸ் விமர்சிப்பதாக குற்றம்சாட்டிய அவர், இதுபோன்ற காரணங்கள் நகைப்பை வரவழைக்கிறது என்றார். மேலும், எந்த பிரச்னையும் இல்லாமல் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்ததே தமிழகத்தின் சட்டம் – ஒழுங்குக்கு சாட்சி எனவும் விளக்கமளித்துள்ளார்.

News June 16, 2024

விராட் கோலி சிறப்பாக விளையாடுவார்: விக்ரம்

image

விராட் கோலியின் பேட்டிங் திறன் குறித்து கவலைப்பட தேவையில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார். இப்படியான ஒரு சூழலில் விராட் இருப்பது நல்லதுதான் எனக் குறிப்பிட்ட அவர், இந்த சூழல் அவரை சிறப்பாக விளையாட தூண்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் நிரம்பியுள்ளதால் போட்டிக்கு ஏற்ப வீரர்கள் தேர்வு செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!