News June 16, 2024

இந்திய அணி அபார வெற்றி

image

தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 117 ரன்கள் அடிக்கவே, 265 ரன்கள் எடுத்து. பின்னர் ஆடிய தெ.ஆ.,37.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆஷா ஷோபனா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

News June 16, 2024

தூக்கு கயிறாக மாறுகிறதா நீட் பயிற்சி மையங்கள்?

image

நீட் பயிற்சிக்கு பிரபலமான கோட்டாவில், மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தாங்கள் முதன்மையாக விளங்க வேண்டும் என நினைக்கும் பயிற்சி மையங்கள், மாணவர்களுக்கு அதிக அழுத்தம் தருவதாக கூறப்படுகிறது. மருத்துவராகி பல உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கனவுகளோடு வரும் மாணவர்களுக்கு, இத்தகைய பயிற்சி மையங்கள் தூக்கு கயிறாக மாறி வருவது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News June 16, 2024

விஜயகாந்தை நினைத்து மகன் உருக்கம்

image

தந்தையர் தினத்தை முன்னிட்டு விஜயகாந்துடன் இருக்கும் தனது சிறுவயது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் அவரது மகன் விஜய பிரபாகரன். ஒவ்வொரு வருடமும் தந்தையர் தினத்தன்று அவரிடம் ஆசீர்வாதம் வாங்கும் நான், முதன்முறையாக அப்பா இன்றி கண்ணீருடன் இந்த படத்தைப் பதிவிடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது கனவை நோக்கி செல்லும் நான் எதிர்வரும் அனைத்து தடைகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

News June 16, 2024

NCERT பாடப் புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் நீக்கம்

image

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) பாடப்புத்தகத்தில் இருந்து பாபர் மசூதி குறித்த தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. 2024-25 கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ பாடநூல்கள் மாற்றப்பட்டுள்ளன. அதில், பாபர் மசூதியின் பெயர் ’முக்குவிமான கட்டடம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததற்கான ஆதாரம் உள்ளதாகவும் பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News June 16, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, வேலூர், காஞ்சி, திருவள்ளூர், தி,மலை, சேலம், கடலூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்பதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 16, 2024

T20 WC: அயர்லாந்து அணி பேட்டிங்

image

டி20 உலகக் கோப்பையில் ஃபுளோரிடா மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் அயர்லாந்து பேட்டிங் செய்ய உள்ளது. இரு அணிகளுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளதால் இந்த போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும்.

News June 16, 2024

நில மோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

image

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் கோரிய நில மோசடி வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி செய்ததாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலமோசடி வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்ற நிலையில், விஜயபாஸ்கர் முன் ஜாமின் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணையை 19ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

News June 16, 2024

விஜய், சீமான் கூட்டணி அமைக்கத் திட்டம்?

image

சீமானின் நாதக ஆரம்பிக்கப்பட்டது முதல் தனித்துப் போட்டியிட்டு வருகிறது. நடிகர் விஜய்யும் தவெகவை ஆரம்பித்தது முதல் யாருடன் கூட்டணி வைக்கலாம் என யோசித்து வருகிறார். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யும், சீமானும் கூட்டணி அமைக்கவும், தேர்தலில் வென்றால் விஜய்க்கு முதல்வர் பதவி, சீமானுக்கு துணை முதல்வர் பதவி என பகிர்ந்து கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News June 16, 2024

சுதந்திரப் போராட்ட உண்மையான வரலாறு மறைப்பு

image

சுதந்திரப் போராட்டத்தின் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ரவி குற்றம்சாட்டியுள்ளார். கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற, அறியப்படாத தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து ஆய்வு நடத்தியவர்களை பெருமைப்படுத்தும் நிகழ்வில் பேசிய அவர், சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் சாதியத் தலைவர்களாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மொழி, மாநிலம் எனப் பிரிந்துள்ள நாம் ஒன்றிணைய வேண்டும் எனவும் கூறினார்.

News June 16, 2024

‘V’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவரா நீங்கள்?

image

‘V’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்கள், தனித்துவமான ஆளுமை திறனை கொண்டிருப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். கவர்ச்சியான, ஆக்கப்பூர்வமான மற்றும் நம்பிக்கையான நபர்களாக இருப்பார்கள் என்றும், ஆபத்துகளை அசாத்தியமாக கடந்து செல்லும் திறன் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கின்றனர். ‘V’என்ற எழுத்தில் பெயர் கொண்ட உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இதை பகிருங்கள்.

error: Content is protected !!