India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தாலும் நான் அடிக்கடி அங்கு செல்வேன் என்று ராகுல் உருக்கமாக தெரிவித்துள்ளார். நானாக இருந்தாலும், எனது சகோதரியாக இருந்தாலும் சரி வயநாட்டிற்காக குரல் கொடுப்போம் எனக் கூறிய அவர், கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு மக்கள் கொடுத்த -ஆதரவு, அன்பை எப்போதும் மறக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில், இரவு 10 மணி வரை இடியுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, மற்றும் குமரியில் இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. மழையால் சாலைகளில் நீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அரசியலமைப்பு சட்டப்படி தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்களுக்குள் வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்நிலையில், வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை ஏராளமான மாணவர்கள் எழுதினர். இருப்பினும், கூகுள் மேப்பால் சுமார் 60 விண்ணப்பதாரர்கள் தேர்வைத் தவறவிட்டனர். அதாவது, மகாராஷ்டிராவில் உள்ள சமர்த் நகருக்கு பதிலாக, 14 கி.மீ. தள்ளியுள்ள வாட்கான் கோல்ஹாட் இடத்தை காட்டியதால், அவர்களால் சரியான நேரத்திற்கு தேர்வு மையம் செல்ல முடியவில்லை. தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்த பல மாணவர்கள் கதறி அழுதனர்.
நடப்பு T20 WC தொடரில் லீக் போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், அணி தோற்றால் கேப்டனை மட்டும் குறை சொல்வது சரியல்ல என பாக்., கேப்டன் பாபர் அசாம் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், வெற்றிபெறும் போதும், தோல்வியடையும் போதும் அணியாகத்தான் விளையாடுகிறோம், ஒவ்வொரு வீரருக்கும் பதிலாக கேப்டன் விளையாட முடியாது என்றார்.
கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவர் பானுபிரகாஷ், மாரடைப்பால் காலமானார். பெட்ரோல், டீசல் விலையை சமீபத்தில் கர்நாடக அரசு உயர்த்தியது. இதை கண்டித்து ஷிவமொக்கா மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பாஜகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்தை சேர்ந்த அமைப்பு ஒன்று, உலகளவில் மிகச்சிறந்த கல்வி கற்றுக்கொடுக்கும் பள்ளிகளை தேர்வு செய்து பரிசளித்து வருகிறது. அந்த வகையில், சமூக ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல், புதுமை, துன்பங்களை சமாளித்தல், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆதரவு உள்ளிட்ட 5 பிரிவுகளில் இந்தியாவிலிருந்து 5 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலிருந்து கல்வி இன்டர்நேசனல் பப்ளிக் ஸ்கூல் (மதுரை ) தேர்வாகியுள்ளது.
வாழ அதிக செலவாகும் நகரங்களின் பட்டியலை நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை, நாட்டிலேயே வாழ அதிக செலவாகும் நகரமாக முதலிடம் பிடித்துள்ளது. உலகளவில் 136ஆவது இடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து, டெல்லி 164 இடத்தையும், சென்னை 189ஆவது இடத்தையும், பெங்களூரு 195ஆவது இடத்தையும், ஹைதராபாத் 202ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. ஹாங்காங் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த கொல்கத்தா காவல் துறையினரை வெளியேறுமாறு ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளார். அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் சிலர் நேற்று ஆளுநரை சந்திக்க வந்த போது, அவர்களை போலீசார் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, காவல்துறையினர் மாநில அரசுக்கு சார்பாக செயல்படுவதாக கூறி, அவர்களை வெளியேற ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
மாதச் சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. NDA தலைமையிலான கூட்டணி ஆட்சியில், மோடி 3ஆவது முறையாக பிரதமராகியுள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில், ஆண்டு வருமானம்₹10 லட்சத்திற்கும் கீழ் மற்றும் ₹15 லட்சத்திற்கும் மேல் ஈட்டுவோருக்கு வரிச் சலுகை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.