News June 18, 2024

புதுப்படத்தால் விஜய் சேதுபதி முதலில் கவலை, பிறகு மகிழ்ச்சி

image

கதாநாயகனாக நடித்து வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்திக்க, மகாராஜா படத்தையே விஜய் சேதுபதி அதிகம் நம்பி இருந்தார். படம் வெளியான நாளன்று முதல் காட்சியின்போது தியேட்டர்களில் கூட்டமில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் கவலையில் இருந்த நிலையில், மாலையில் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. இதை கேள்விப்பட்ட அவர், வசூல் பட்டையை கிளப்பும் என மகிழ்ச்சி அடைந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

News June 18, 2024

சென்னையில் 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்

image

சென்னை நொச்சிக்குப்பத்தில் தெருநாய் கடித்ததில் 6 வயது சிறுவன் காயமடைந்தார். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுவன், தெருநாய்களை கண்டதும் அவற்றிற்கு பிஸ்கட் போட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுவனை அந்நாய்கள் கடிக்கத் தொடங்கின. சிறுவன் அலறியபோதும் விடாமல் அவை கடித்துக் குதறின. இதையடுத்து காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News June 18, 2024

+2 மறுகூட்டல் மதிப்பெண் இன்று வெளியீடு

image

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியாகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

News June 18, 2024

மே.இ.தீவுகள் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி

image

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் டி20 உலகக் கோப்பை லீக் போட்டிகள் அனைத்திலும் மே.இ.தீவுகள் அணி வெற்றி பெற்றிருக்கிறது. இத்தொடரின் கடைசி லீக் போட்டியான இதில், மே.இ.தீவுகள் அணி 218 ரன்கள் எடுத்தது. ஆனால், ஆஃப்கானிஸ்தான் அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

News June 18, 2024

கோமாவில் இருந்து மீண்ட இளைஞர் விபத்தில் பலி

image

ஓராண்டுக்கு முன் பைக் விபத்தில் சிக்கிய திருவொற்றியூர் இளைஞர் (18) ஆறு மாதங்களுக்கு முன்புதான் குணமடைந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் பெற்றோரிடம் அடம் பிடித்து புதிய பைக் ஒன்றை வாங்கியிருக்கிறார். அந்த பைக் தற்போது விபத்தில் சிக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். விளம்பரப் பதாகை மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News June 18, 2024

தேர்தல் மூலம் தேர்வாகும் முதல் சபாநாயகர்?

image

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி தொடங்க உள்ளது. தொடர்ந்து, 26ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடக்க உள்ளது. அப்படி, சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்தால் சுதந்திரம் அடைந்ததற்கு பின், தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் சபாநாயகர் என்ற பெருமையை, வெற்றி பெறுபவர் பெறுவார். சுதந்திரத்திற்கு பின், இதுவரை ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே சபாநாயகர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

News June 18, 2024

அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பொறுப்பு

image

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தானை நியமித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முன்னதாக, மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் பணிக்குழுவிலும் இடம்பெறவில்லை. இதனால், கட்சியில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தநிலையில், மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

News June 18, 2024

இதனால்தான் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததா?

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட இபிஎஸ் முடிவு செய்திருந்ததாகவும், செலவை முன்னாள் அமைச்சர் ஒருவரை கவனித்து கொள்ள கேட்டதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் பெரும்தொகையை தன்னால் செலவிட முடியாது, அப்படி செலவிட்டாலும் வெற்றி கிடைக்குமா என உறுதியாக தெரியாது என்பதால் மறுத்து விட்டதாலும், சீனியர்களின் அழுத்தத்தினாலுமே புறக்கணித்ததாகத் தெரிகிறது.

News June 18, 2024

அதிக போட்டிகளில் அம்பயரிங் செய்த இந்தியர்

image

அதிக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அம்பயரிங் செய்த இந்தியர் என்ற பெருமையை நிதின் மேனன் பெற்றிருக்கிறார். இவர் 23 டெஸ்ட், 58 ஒருநாள், 45 டி20 என மொத்தம் 126 போட்டிகளில் அம்பயரிங் செய்திருக்கிறார். முன்னதாக 125 போட்டிகளில் வெங்கட்ராகவன் அம்பயரிங் செய்ததே சாதனையாக இருந்தது. சர்வதேச அளவில் 448 போட்டிகளில் அம்பயரிங் செய்து பாகிஸ்தானின் அலீம் தார் முதலிடத்தில் இருக்கிறார்.

News June 18, 2024

பாரத் என்ற பெயரில் என்ன பிரச்னை?: NCERT

image

பாட புத்தகத்தில் இந்தியாவுக்கு பதில் பாரத் என்ற பெயரை பயன்படுத்த NCERT குழு பரிந்துரைத்திருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், “பாரத், இந்தியா என இரண்டு பெயர்களுமே அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கின்றன. ஆகையால் இதில் சர்ச்சைக்கு இடமே இல்லை. புத்தகங்களில் எங்கெல்லாம் பாரத் என்ற பெயரை பயன்படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் பயன்படுத்துவோம்” என்று NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!