India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் 4 மொழிகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் ‘கொல்லாதே’ பாடலின் ப்ரமோ வைரலான நிலையில், இன்று (ஜூன் 19) ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் செப்., 27ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.
இன்று (ஜூன் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் கூடுதல் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை NHRCI முடித்து வைத்திருந்தது. அதனை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை விசாரித்து நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேகதாது அணை தொடர்பாக மத்திய இணையமைச்சர் சோமண்ணா பேசியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு எல்.முருகன் மழுப்பலாக பதிலளித்துள்ளார். தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் வழியே தீர்வு கண்டு மேகதாது அணை கட்டப்படும் என சோமண்ணா கூறியிருந்தார். இதனை ஒரு தமிழனாக எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முருகன், “சோமண்ணா என்ன கூறினார் என்றே எனக்கு தெரியாது” எனக் கூறினார்.
இன்று (ஜூன் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பாவோ நுர்மி தடகள போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். பின்லாந்தில் சர்வதேச தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், ஜெர்மனி உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் 85.97 மீ., தூரம் ஈட்டியை எறிந்த நீரஜ் (26) முதலிடம் பிடித்து, தங்கத்தைக் கைப்பற்றினார். டோனி, ஆலிவர் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.
இன்று (ஜூன் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
*தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு, புதிய வரலாற்றைப் படைத்துள்ளது – பிரதமர் மோடி
*தமிழ்நாடு அரசு கேபிள் டிவி.,யை திமுக அரசு முடக்க நினைக்கிறது – இபிஎஸ்
*மே மாதம் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ₹11,342 கோடியாக உயர்ந்தது.
*பாவோ நுர்மி ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
*தன்பாலின ஈர்ப்பு திருமணத்தை தாய்லாந்து சட்டபூர்வமாக அங்கீகரித்தது.
வெங்காயத்தில் ஃபிளேவனாய்ட்ஸ் நிறமி உள்ளது. அதன் கஷாயம், சளி & இருமலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கி, எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் தேன் சேர்த்து நன்கு கலக்கினால் கஷாயம் ரெடி. சூடு ஆறிய பிறகு இந்த கஷாயத்தை காலை, மாலை என இருமுறை குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் டேனியல் கால்டகிரோனின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.