India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திராவின் துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணின் ரசிகர்களுக்கு அவரது முன்னாள் மனைவி ரேணு தேசாய் காட்டமாக பதிலளித்துள்ளார். மண முறிவு பெற்றிருக்கக் கூடாது என்ற தொனியில் ரேணு தேசாய்க்கு பலர் அறிவுரை கூறி வருகின்றனர். இதனால் பொறுமை இழந்த அவர் தனது சமூக வலைத்தளத்தில், “பவன் கல்யாணை விட்டு நான் விலகவில்லை. அவர்தான் என்னை விட்டு விட்டு இன்னொரு திருமணம் செய்து கொண்டார்” எனக் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்கவுள்ளது. இன்றைய போட்டியில், USA & SA அணிகள் மோதுகின்றன. விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், வெல்ல WI அணிக்கு 85% வாய்ப்பும், USA அணிக்கு 15% வாய்ப்பும் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு தொடரில் ஒரு போட்டியிலும் தோற்காத WI அணி (+3.257) புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைக்க, இந்த ஆட்டத்தை வெல்ல உறுதியாகப் போராடும்.
நீட் தேர்வில் மிகச்சிறிய தவறு நடந்திருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு குறித்த மனுவை விடுமுறை காலச் சிறப்பு அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தேர்வு முகமையும் மத்திய அரசும் உரிய நேரத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியதோடு, தங்கள் பதில்களை புதிதாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
மழைக் காலத்தில் ஏற்படுகிற நோய்களில் சளி, இருமல், மூக்கடைப்புக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இதில் இருந்து தப்பிக்க கருமிளகு டீ பருகலாம். கருமிளகு, மஞ்சள், பூண்டு, ஆளி விதை ஆகியவற்றை இடித்து, நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். சிறிது நேரம் கழித்து அதனை வடிகட்டி, தேன் கலந்தால் தேநீர் தயார். இதனை காலை, மாலை என இருவேளை குடித்தால் சளி இயற்கை வழியில் நீங்கும்.
வங்கிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஏமாற்றி வெளிநாட்டில் தலைமறைவானவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. அவரது இல்லத்தில் மங்கள இசைக் கேட்கவுள்ளது. அதாவது, விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்துக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. சித்தார்த் தனது நீண்ட நாள் காதலியான அமெரிக்காவை சேர்ந்த ஜாஸ்மினை விரைவில் திருமணம் செய்து கொள்வதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில், கோல்ஃப் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பை சர்வதேச கோல்ஃப் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆண்கள் பிரிவில் ககன்ஜீத் புல்லார், சுபாங்கர் ஷர்மா ஆகியோரும், பெண்கள் பிரிவில் அதிதி அசோக், தீக்ஷா தாகர் ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர். பாரிஸில் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.
*1595 – சீக்கிய குரு அர்கோவிந்த் பிறந்த நாள். *1943 – டெக்சாஸில் இனமோதல் இடம்பெற்றது. *1961 – குவைத் இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்றது. *1988 – வியட்நாமின் 117 மாவீரர்களுக்குப் புனிதர் பட்டமளிக்கப்பட்டது. *1991 – அங்கேரியில் சோவியத் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது. *2012 – விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே எக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்தார். *2016 – கவிஞர் குமரகுருபரன் மறைந்த நாள்.
ஜெமினி ஏஐ சாட்பாட் செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்த கூகுள் அஸிஸ்டன்டுக்கு பதிலாக ஜெமினி செயலியை Default-ஆக மாற்ற வேண்டும். ப்ராப்ளம் சால்விங் திறனில் அட்வான்ஸ்டு நிலையில் உள்ள இச்செயலியை அப்போதுதான் பயன்படுத்த முடியும். கட்டண சேவையாக வழங்கி வந்த ஜெமினி, அட்வான்ஸ்டு பயனாளர்களுக்கு கூடுதலாகச் சில அம்சங்களை வழங்கியுள்ளது.
காசா முனையின் ரஃபாவில் 50% ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ரஃபா நகரில் ஹமாஸ் 4 பிரிவுகளாக செயல்பட்டு வருவதாகவும், இதில் 2 பிரிவுகள் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களில், எஞ்சிய 2 ஹமாஸ் பிரிவுகளையும் ராணுவ ரீதியாக வீழ்த்தி, பணய கைதிகளை மீட்க அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல்
▶அதிகாரம்: தூது ▶ குறள் எண்: 682
▶குறள்:
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
▶பொருள்: அன்பு, அறிஞரைப் போன்ற அறிவு, அரசினர் பாராட்டக்கூடிய அளவுக்கு ஆராய்ந்து பேசும் சொல்வன்மை ஆகிய மூன்றும் தூது செல்பவருக்குத் தேவைப்படும் முக்கியமான பண்புகளாகும்.
Sorry, no posts matched your criteria.