News June 20, 2024

ரொனால்டோ சாதனையை முறியடித்த அர்டா குலெர்

image

17ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் துருக்கி அணியின் இளம் அறிமுக வீரர் அர்டா குலெர் அரிய சாதனை ஒன்றை ஒன்றைப் படைத்துள்ளார். குரூப் F பிரிவில் இடம்பெற்றுள்ள ஜார்ஜியா அணிக்கு எதிரான போட்டியில், குலெர் முதல் ஆட்டத்திலேயே கோல் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன் மூலம் 2004இல் ரொனால்டோ (19 வயது 128 நாள்கள்) செய்த சாதனையை குலெர் (19 வயது 114 நாள்கள்) முறியடித்துள்ளார்.

News June 20, 2024

‘கஜினி’ படத்தில் நடித்தது மிக மோசமான முடிவு: நயன்தாரா

image

‘கஜினி’ திரைப்படத்தில் நடித்ததை தனது வாழ்க்கையில் தான் எடுத்த மிக மோசமான முடிவு என்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தெரிவித்துள்ளார். கஜினி படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் திட்டமிட்டபடி, படமாக்கப்படவில்லை எனக் கூறிய அவர், அதற்காக தான் யாரையும் குறை சொல்லவில்லை என்றார். மேலும், இது போன்ற அனுபவங்களை பாடமாக எடுத்துக்கொண்டுதான் திரையுலகில் பயணிக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

News June 20, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜூன் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News June 20, 2024

கள்ளச்சாராய வியாபாரிகளுடன் காவல்துறை கூட்டா?

image

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க திமுக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியறுத்தியுள்ளார். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் & வியாபாரிகளுடன் காவல்துறை கூட்டு வைக்காமல் சாராய விற்பனை நடந்திருக்க முடியாது எனக் குற்றம்சாட்டிய அவர், கள்ளச்சாராயத்தை ஒழிக்க மதுவிலக்கு தனிப்பிரிவை தீவிரப்படுத்திட வேண்டும் எனவும் கூறினார்.

News June 20, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜூன் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News June 20, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*ஆட்சி செய்ய தகுதியற்று நிற்கும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் -ஜெயக்குமார்
*டெல்லியில் தண்ணீர் பிரச்னை தீர்க்காவிட்டால் உண்ணாவிரதம் மேற்கொள்வேன் -அதிஷி
*தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை திமுக அரசு முழுமையாக தடுக்க வேண்டும் -சீமான்
*மகாராஷ்டிராவில் பசுமை துறைமுகம் அமைக்க ₹76,220 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.
*T20 WC: சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில், USA அணியை SA அணி வீழ்த்தியது.

News June 20, 2024

சளி தொல்லையை போக்கும் சித்தரத்தை டீ

image

மழைக் காலத்தில் ஏற்படுகிற நோய்களில் சளி, இருமல், மூக்கடைப்புக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இதில் இருந்து தப்பிக்க சித்தரத்தை டீ பருகலாம். சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, சித்தரத்தை, ஆடுதொடா இலை ஆகியவற்றை இடித்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் கலந்தால் தேநீர் தயார். இதனை காலை, மாலை என இருவேளை குடித்தால் சளி இயற்கை வழியில் நீங்கும்.

News June 19, 2024

BREAKING: அமெரிக்காவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

image

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் முதலாவது போட்டியில், அமெரிக்க அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில், 194 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய அமெரிக்க அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி வீழ்ந்தது.

News June 19, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

*மேஷம் – பக்தி உண்டாகும், *ரிஷபம் – பாசம் உண்டாகும், *மிதுனம் – நன்மை ஏற்படும், *கடகம் – நேர்மையாக செயல்படுங்கள், *சிம்மம்- மேன்மை ஏற்படும், *கன்னி – எதிர்ப்பு வரும், *துலாம் – வீண் அலைச்சல் ஏற்படும், *விருச்சிகம்- மகிழ்ச்சி உண்டாகும், *தனுசு – யோகம் வரும், *மகரம் – வாழ்வு உண்டாகும், *கும்பம் – முயற்சி வெற்றியாகும் *மீனம் – குடும்ப உறுப்பினர்களுடன் பாசம் ஏற்படும்.

News June 19, 2024

கர்ப்பமானதே தெரியாமல் பெண்களுக்கு பிரசவம்

image

கர்ப்பமாக இருப்பதை அறியாத பெண்களை குறிப்பிட ‘கிரிப்டிக் கர்ப்பம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதாவது, வாந்தியெடுத்தல், வயிறு பெருத்தல் போன்ற பொதுவான அறிகுறிகள் எதுவுமே இந்த பெண்களுக்கு தெரிவதில்லை. இதில் சில பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பு வரை தாங்கள் கர்ப்பமாக இருப்பதே தெரியாது. இது அரிதாக நிகழ்ந்தாலும், கருப்பின பெண்களிடையே பொதுவாக காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!