India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் உலக தரம் வாய்ந்த துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்களம் ஒன்றுகூட இல்லை என்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள பிரித்வி ராஜ் வேதனையுடன் கூடியுள்ளார். தமிழக அரசு துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள சிறந்த கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர், அப்படி நடந்தால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள வீரர்களாலும் சாதிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
வயல்வெளிகளில் வளரக்கூடிய சிறு செடி, ஓரிதழ் தாமரை. ‘ரத்தின புருஷ்’ என ஆயுர்வேதம் கொண்டாடும் இந்த முழுத் தாவரமும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது. காயகற்ப மூலிகையான இதன் இலைகளைப் பறித்து (காலை வேளையில்), நன்றாகத் தண்ணீரில் கழுவி மைபோல அரைத்து, 200 மி.லி., பசும்பாலில் நெல்லிக்காய் அளவுக்குக் கலந்து, 48 நாள்கள் குடித்துவந்தால், உயிரணுக்கள் பலப்படுவதுடன், நரம்புத்தளர்ச்சி நீங்கி உடல் வலிமையும் பெறும்.
அதிவேக ரயில்களை விடுவது முக்கியமில்லை; அதில் பயணிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுதான் முக்கிய என்று சசிகாந்த் செந்தில் எம்.பி., கூறியுள்ளார். மேற்கு வங்க ரயில் விபத்தில் இறந்த 10 உயிர்கள் பறிப்போனதற்கு பிரதமர் மோடிதான் முக்கிய காரணம் என்ற அவர், மோடியின் தலைமையிலான மத்திய பாஜக அரசின் அலட்சியம் & தொழிலாளர் விரோத செயல்பாடுகளே இப்போது மக்களுக்கு எமனாக மாறியுள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
மிக மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ஸைடஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பயோடக்ஸ் மருந்துக்கு நேபாள் மருந்து கட்டுப்பாட்டுத் துறை தடைவிதித்துள்ளது. நேபாள் ஆய்வுக் கூடத்தில் பயோடக்ஸ் 1ஜிஎம் மருந்து பரிசோதிக்கப்பட்டது. அதில், குறிப்பிட்ட தயாரிப்பு முறைகளை அந்நிறுவனம் பின்பற்றவில்லை என்றும் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டால் அவர்களது உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்றும் தெரியவந்துள்ளது.
*1248 – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அரச அங்கீகாரத்தைப் பெற்றது. *1837 – விக்டோரியா பிரிட்டனின் பேரரசியாக முடிசூடினார். *1921 – வடசென்னையில் பக்கிங்காம், பி&சி மில் தொழிலாளர்கள் பணி நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர். *1960 – பிரான்ஸிடம் இருந்து மாலி விடுதலை பெற்றது. *1990 – 5261 யுரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது. *2003 – விக்கிமீடியா நிறுவனம் தொடங்கப்பட்டது. *2006 – கவிஞர் சுரதா மறைந்த நாள்.
சமந்தா, ஃபகத் பாசில், தீபிகா படுகோனே உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களுக்கு உள்ள நோயை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில், தற்போது நடிகை அனுஷ்காவும் இணைந்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஸ்மைலிங் சின்ட்ரோம்’ என்ற அரிய வகையான சிரிக்கும் வியாதி தனக்கு இருப்பதாகக் கூறிய அவர், தான் சிரிக்க ஆரம்பித்தால் 20 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பேன் என்றார்.
தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. உதவிப் பேராசிரியர் & இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்காக தகுதியைத் தீர்மானிப்பதற்காக நடைபெற்ற நெட் தேர்வு இந்தாண்டு OMR சீட் முறையில் நடைபெற்றது. அதில், முறைகேடுகள் நடந்ததாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்ததையடுத்து, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் துணைத் தலைவராக சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ முனிரத்னம் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டப்பேரவை கொறடாவாக வேளச்சேரி எம்.எல்.ஏ. JMH அசன் மவுலானா நியமிக்கப்பட்டுள்ளார்” குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸின் சட்டமன்றக் குழு தலைவராக ராஜேஷ்குமார் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
▶குறள் பால்: காமத்துப்பால் ▶இயல்: கற்பியல்
▶அதிகாரம்: பிரிவாற்றாமை ▶ குறள் எண்: 1151
▶குறள்:
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
▶பொருள்: பிரிந்து செல்வதில்லை என்றால், அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல். நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொள்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பயோ பிக்கில் நடிகர் ரன்பீர் கபூர் நடித்தால் நன்றாக இருக்கும் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். கோலி விளையாடும் விதத்தை ரன்பீர் தெளிவாக வெளிப்படுத்துவார் எனக் கூறிய அவர், ரோஹித் ஷர்மா வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்றார். ஹர்திக் பாண்டியாவாக ரன்வீர் சிங் நடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.