India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இன்று அதிகாலை வரை 29 பேர் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பெண்கள் உட்பட மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருமணமான பெண் எனில், பெற்றோர் வீட்டு ரேஷன் அட்டையில் பெயர் நீக்கப்பட்ட சான்று, திருமண சான்று நகல், புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். சிறார் எனில், பிறப்பு சான்று, பெற்றோரின் ரேஷன் அட்டை, பெற்றோரின் ஆதார் நகலை பதிவேற்றி ஒப்புதல் அளிக்க வேண்டும். இதன்மீது விசாரணை நடத்தப்பட்டு, ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்கப்படும். இதுதொடர்பான அனைத்து விவரமும் குறுந்தகவல் மூலம் அப்டேட் செய்யப்படும்.
<
இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 180/4 ரன்களை குவித்துள்ளது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் ஜான்சன் சார்லஸ் 38, நிக்கோலஸ் பூரன் 36, ரோவ்மேன் பவல் 36, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 28 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர், மொயின் அலி, அடில் ரஷித், லியாம் லிவிங்ஸ்டோன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
காஷ்மீரின் ஹடிபோரா பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தங்களது துப்பாக்கிகளால் கொடுத்த பதிலடியில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிய தடைவிதிக்கப்பட்டது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல, ஆடை கட்டுப்பாட்டின் ஒரு அங்கமே என செம்பூர் கல்லூரி மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கல்லூரியின் உத்தரவை எதிர்த்து 9 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். தங்களின் மத உரிமை மறுக்கப்படுவதாக அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை வரும் 26ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
தமிழகத்தில் காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் எடுத்துச் செல்லுங்கள். மழை காரணமாக கோவை வால்பறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து இபிஎஸ் ஆறுதல் கூற உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் பலியான நிலையில், 70க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தில் போலீசார் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சினிமா இதழான Sight and Sound இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2018ஆம் ஆண்டில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்தியப் படங்களில் காலா படம் மட்டுமே அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. வேறு எந்த இந்திய மொழி படங்களும் அதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
BP, சர்க்கரை நோய் உள்ளிட்ட 54 வகையான மருந்துகளின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சர்க்கரை நோயாளிகள் அதிகம் பயன்படுத்தும் மெட்ஃபோர்மின், லினாக்ளிப்டின் மாத்திரைகள் விலை ₹15ல் இருந்து ₹20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. BP மாத்திரைகளான டெல்மிசார்டன், சில்னி டிபைன் போன்றவற்றின் விலை ₹7.14 ஆக உயர்ந்துள்ளது. பாக்டீரியா எதிர்ப்பு ஊசி, கால்சியம் மற்றும் வைட்டமின் டி 3 மாத்திரைகள் விலை குறைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.