India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் நிகழ்ந்த முக்கிய விஷச்சாராய உயிரிழப்புகளைத் தெரிந்து கொள்வோம். *சேலத்தில் 2006இல் 4 பேர் பலியாகினர் *2008இல் தமிழ்நாடு- கர்நாடகா எல்லையில் 180 பேர் உயிரிழந்தனர் *கோவையில் 2019இல் 116 பேர் பலியாகினர் *மரக்காணத்தில் 2023இல் 14 பேர் பலியாகினர் *மதுராந்தகத்தில் 2023இல் 5 பேர் உயிரிழப்பு.
கள்ளச்சாராய மரணம் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சட்டமன்றத்தின் இன்றைய அலுவல்கள் முடிந்தவுடன் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, டிஜிபி, உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். உயிரிழந்தோருக்கு நிவாரணம் வழங்குவது, பாதிக்கப்பட்டோருக்கு உயர் சிகிச்சை வழங்குவது உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
நேபாள அணி 2023இல் மங்கோலியாவுக்கு எதிராக டி20 போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு 314 ரன்களை குவித்தது. இதுவே டி20 கிரிக்கெட்டில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கடுத்து ஆப்கானிஸ்தான் 278 ரன்கள் எடுத்து 2ஆவது இடத்தில் உள்ளது. செக் குடியரசு அணி (278 ரன்கள்), மலேசியா (268 ), இங்கிலாந்து (267) ஆகியவை 3 முதல் 5 வரையிலான இடங்களில் உள்ளன. 260 ரன்களை குவித்து இந்தியா 8ஆவது இடத்தில் உள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து இபிஎஸ் ஆறுதல் கூற உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 32 பேர் பலியான நிலையில், 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தில் போலீசார் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.
ATM இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வங்கிகள் கவலை தெரிவித்துள்ளன. இதுகுறித்து மத்திய அரசு, RBI-க்கு விடுத்துள்ள கோரிக்கையில், Make in India திட்டத்தின் தாக்கம், GeM தளம் மூலம் ATM கொள்முதல் செய்யும் விதிகளில் தெளிவின்மை ஆகியவை காரணமாக கூறப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட நாட்டில் பல ATM இயந்திரங்களில் ₹100, ₹200 நோட்டுகள் கிடைப்பதில்லை என மக்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
காலையில் எழுந்தவுடன் 2 மணி நேரத்திற்குள் உணவு சாப்பிடுவது சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். காலை உணவு உண்பது, வளர்சிதை மாற்றத்திற்கு சிறந்தது எனக் கூறும் மருத்துவர்கள், காலை 6 மணி முதல் 8 மணி வரை, உணவு உட்கொள்வது சிறந்த நேரம் எனக் குறிப்பிட்டுள்ளனர். அதே வேளையில் காலை உணவுக்காக, காலை 9 – 10 மணி வரை காத்திருப்பது உடல்நலனில் பிரச்னையை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பராமரிப்புப் பணியில் ஈடுபடும் ரயில் இஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், மதுரை-ராமேஸ்வரம் இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இது திருப்புவனம்-திருப்பாச்சேத்தி இடையே சென்றபோது, திடீரென தடம் புரண்டு விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால், மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள், மண்டபம்-மதுரை செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கள்ளச்சாராயத்திற்கும், விஷச்சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடிப்பது அல்லது விற்பது கள்ளச்சாராயம். அதுவே, போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷச்சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது. மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும்.
ஆஃப்கானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 6 ரன்கள் எடுத்தால், சூர்ய குமார் யாதவ் புதிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா 221 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 216 ரன்களை அடித்துள்ள சூர்ய குமார் யாதவ், இன்றைய போட்டியில் மேலும் 6 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சாராய வியாபாரி கோவிந்தராஜனிடம் பாக்கெட் சாராயம் வாங்கிக் குடித்த 32 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில், 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக கோவிந்தராஜன், தாமோதரன் ஆகியோர் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், தற்போது கோவிந்தராஜனின் மனைவி விஜயா கைது செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.