India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
UGC-NET தேர்வைப்போல, 2024 NEET நுழைவுத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உதவி பேராசிரியர் பணிகளுக்காக ஜூன் 18இல் நடத்தப்பட்ட UGC-NET தேர்வில் முறைகேடு நடந்ததால், அந்த தேர்வை நேற்று மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. இதேபோல, நடப்பாண்டு NEET தேர்விலும் குளறுபடி நிகழ்ந்துள்ளதால், அதனையும் ரத்து செய்துவிட்டு புதிய தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக திமுக அரசை கண்டித்து நாளை மறுநாள், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 60 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் திமுக ஆட்சி, தமிழகத்தை 40 ஆண்டுகள் பின்நோக்கி இழுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முறையீடு செய்துள்ளது. விஷச்சாராயம் குடித்ததில் இதுவரை 37 பேர் பலியான நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு உடனடி நிவாரணம் அளிக்க அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2 A காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என TNPSC அறிவித்துள்ளது. அதன்படி, நடப்பாண்டு காலியாக உள்ள பணியிடங்களுக்கு இன்று முதல் ஜூலை 19ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கட்டணம் செலுத்த ஜூலை 19 கடைசி. எழுத்துத் தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தை (https://www.tnpsc.gov.in) காணலாம்.
பாஜக ஆட்சியில் முறைகேடுகள் தொடர்கதையாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மோடி ஆட்சியில் வினாத்தாள் கசிவு இயல்பாகி, அனைத்து தேர்வுகளிலும் பாஜக அரசின் முறைகேடுகள் அம்பலப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், UGC-NET தேர்வு ரத்து செய்யப்பட்டது போல நீட் தேர்வு எப்போது ரத்து செய்யப்படும் என கேள்வி எழுப்பியுள்ளனர். நீட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
திருமணம் செய்துகொண்டு, தனது சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை என நடிகை சதா கூறியுள்ளார். ஜெயம், அந்நியன் போன்ற பல படங்களில் நடித்துள்ள சதா, 40 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதுகுறித்து மனம் திறந்துள்ள அவர், தற்போது சுதந்திரமாக வாழ்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும், மனதுக்கு பிடித்த நபர் இதுவரை கிடைக்கவில்லை, அவ்வாறு கிடைத்தால் அவரை திருமணம் செய்துகொள்வேன் எனவும் சதா தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ₹10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ₹50,000 நிவாரணம் வழங்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 3 மாதங்களுக்குள் இந்த ஆணையம் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆணையம் ஆலோசனை வழங்க அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து சுரேஷ் என்பவர் முதலில் உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கிற்கு சென்றவர்களுக்கும் சாராயம் வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவருக்கு ஏற்பட்ட பாதிப்பை அறிந்தும், மற்றவர்களும் அந்த விஷச்சாராயத்தை குடித்துள்ளனர். இதையடுத்து, ஒருவர் பின் ஒருவராக வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாகவே அங்கு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.
பொதுவாக கிராமங்களில் விழிப்புணர்வு இல்லாமல் விஷச்சாராய விற்பனை நடக்கிறது. இந்த பகுதிகளை கண்டுபிடித்து, குழுக்களை அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விஷச்சாராய தொழிலில் ஈடுபடுவோர் குறித்து தகவல் அளிக்க தொடர்பு எண்களை அறிவித்து, கிராமங்களில் அனைவர் கண்களிலும் படும்படி விளம்பரப்படுத்த வேண்டும். பின்னர் அதன்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
Sorry, no posts matched your criteria.