News June 20, 2024

திராவிட மாடல் போதை மாடலாக உள்ளது: வானதி

image

திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தை போதையில் தள்ளாடுகிற மாடலாக இருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். அரசின் கவனக்குறைவு, அரசே பொதுமக்களை கொலைச் செய்வதற்கு ஒப்பாக இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், கஞ்சா போதையால் தமிழகம் தள்ளாடி வரும் நிலையில், தற்போது விஷச்சாராயமும் இணைந்துள்ளது என்றார். டாஸ்மாக் மூலம் விதவைகளை உருவாக்கும் மாடலாக, திராவிட மாடல் அரசு உள்ளதாகவும் சாடினார்.

News June 20, 2024

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுங்க: இபிஎஸ்

image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ₹10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த இபிஎஸ், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் இழப்பீடு போதாது, ₹25 லட்சம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன், உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

News June 20, 2024

I.T. அதிகாரிக்கு கைது அதிகாரம் உண்டா?

image

நாட்டு மக்கள், தனியார் நிறுவனங்கள் செலுத்தும் வருமான வரியை ஆய்வு செய்து, அதை உறுதிப்படுத்துவது வருமான வரித்துறையினரின் கடமையாகும். இதில் ஏதேனும் விதிமீறல் நடந்திருப்பது தெரிய வந்தால், அதிகாரிகளுக்கு கைது செய்யும் அதிகாரத்தை 1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் அளித்துள்ளது. அதேநேரத்தில், கைது நடவடிக்கைக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் எனவும் அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News June 20, 2024

சாராய வியாபாரி-திமுகவினர் இடையே தொடர்பு: அன்புமணி

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் வியாபாரிகள்-திமுகவினர் இடையே தொடர்பு இருப்பதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சி பல பகுதிகளுக்கு அனுப்பப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வியாபாரிகளை காவல்துறை கைது செய்தாலும், அமைச்சர் எ.வ.வேலு, MLA வசந்தம் கார்த்திகேயனின் ஆதரவாளர்கள் அவர்களை விடுதலை செய்ய வைப்பதாக விமர்சித்துள்ளார்.

News June 20, 2024

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இரவு வேளையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

News June 20, 2024

TNPSC குரூப் 2, 2A தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? (3/3)

image

விவரங்களை வரிசையாக அளித்து, சரிபார்த்து உறுதி செய்தபிறகு ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும். பிறகு, நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து உங்களுக்கான ஹால் டிக்கெட்டை TNPSC அனுப்பி வைக்கும். அதில் கூறப்பட்டுள்ள தேதியில் தேர்வு மையம் சென்று குரூப்2, குரூப் 2ஏ தேர்வை எழுதலாம். தேர்வில் வெற்றி பெற Way2news-இன் வாழ்த்துகள்.

News June 20, 2024

TNPSC குரூப் 2, 2A தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? (2/3)

image

விவரங்களை நிரப்பி, புகைப்படம், கையொப்பம், புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். புகைப்படம் சமீபத்தில் எடுத்ததாக இருப்பது நல்லது. அடுத்து விண்ணப்பிப்பவரின் விவரங்கள் (Applicant details) பகுதியில் One time Registration-ல் நீங்கள் கொடுத்த விவரம் இருக்கும். அதை சரிபார்க்கவும். அடுத்து தொடர்பு விவரங்கள் (Communication Details) கேட்கப்படும். அது One time Registration-ல் இருந்து தானாக நிரப்பப்பட்டிருக்கும்.

News June 20, 2024

TNPSC குரூப் 2, 2A தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? (1/3)

image

<>https://www.tnpsc.gov.in/<<>> என்ற இணையதளத்தில் கல்வித்தகுதி, முகவரி, மொபைல் எண் உள்ளிட்டவற்றை பதிந்து ரூ.150 கட்டணம் செலுத்தி Onetime Registration செய்து, பயன்பாட்டு முகவரி (user id ), கடவுச்சொல் பெற வேண்டும். இதை பயன்படுத்தி, உள்ளே சென்றதும் Apply online என்ற இடத்தை அழுத்தி திறந்ததும், அங்கு குரூப் 2, 2ஏ என உள்ள இடத்தை ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து உள்ளே சென்று, கேட்கப்படும் விவரங்களை நிரப்ப வேண்டும்.

News June 20, 2024

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான 65% இடஒதுக்கீடு ரத்து: ஐகோர்ட்

image

பிஹாரில் எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் ஆகிய பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 65% இடஒதுக்கீடு அளித்து சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், இது அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15 மற்றும் 16 ஆகிய பிரிவுகளின் சமத்துவ விதியை மீறுவதாகக் இருக்கிறது என்று கூறி, ரத்து செய்து உத்தரவிட்டது.

News June 20, 2024

கட்சியை விட சுயமரியாதை முக்கியம்: திருச்சி சூர்யா

image

தமிழ்நாடு பாஜகவில் தொடர்ந்து பயணிக்கும் எண்ணம் இல்லை, எனக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சிவா தெரிவித்துள்ளார். அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்ததாகத் தெரிவித்த அவர், தன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் எந்த வருத்தமும் இல்லை எனக் கூறினார். எப்போதும் அண்ணாமலையின் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன் என்றும், கட்சியை விட தனக்கு சுய மரியாதை முக்கியம் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!