India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா ₹10 லட்சம் நிவாரணத்துக்கான காசோலையையும் வழங்கினார். முதல் கட்டமாக 26 குடும்பத்தினருக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என சாடிய அவர், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க, மாவட்ட ஒன்றியங்கள் தோறும் மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
விஷச்சாராய பலிக்கு காரணமானவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். மேலும் கள்ளச்சாராய மரணங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து, மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் என்ற அவர், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டுமென, மநீம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளதாக கூறிய அவர், இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ₹10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நிவாரணம் கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். அதே நேரம், குடும்ப தலைமையை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு இந்த நிவாரணமும் போதாது என இபிஎஸ் உள்ளிட்டோர் வலியுறுத்துகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் உயிரிழந்த ஒரு குடும்பத்திற்கு மாதம் ₹5000 அதிமுக சார்பில் வழங்கப்படும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்த அவர், தாய், தந்தையை இழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுகவே ஏற்கும் என்று கூறினார். மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு அதிமுக மாதம் ₹5000 வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தமிழக அரசு ₹10 லட்சம் நிவாரணம் அளித்துள்ளது. இந்நிலையில், சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ₹10 லட்சம் நிதி கொடுப்பது தவறானது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார். இது கள்ளச்சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பதுபோல் உள்ளதாக கூறிய அவர், கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டுமே தவிர அதை அருந்தியவர்களுக்கு நிதி தரக்கூடாது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டுமென, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானமும் விஷச்சாராயத்திற்கு இணையானது தான் என்றார். மேலும், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக மக்களின் உயிரிழப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் உதவி இல்லாமல் இந்த துயர சம்பவம் நிச்சயம் நடைபெற்றிருக்காது என்ற அவர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக முதல்வரை பதவி விலக வலியுறுத்துவார்கள் எனவும் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் அதிகரித்துக்கொண்டே செல்வது அதிர்ச்சியளிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், குற்றவாளிகள் ஒருவர் கூட விடுபடாத அளவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், போதைப் பொருட்களை முற்றிலும் ஒழித்து, மதுபானக் கடைகளை படிப்படியாகக் குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.