India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
T20 உலகக் கோப்பையில் இன்று சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப்போட்டியில் முகமது சிராஜுக்குப் பதிலாக, குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. போட்டி நடைபெறும் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் இந்த மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிகிறது. டி20 WC தொடரில் குல்தீப் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. ஒரு டாலருக்கு 83.67 ரூபாய் என்று இன்று வர்த்தகம் நடைபெற்றதே இதுவரையிலான குறைந்த மதிப்பு ஆகும். உலக அளவில் டாலர் வலிமை பெற்று வருவதே இதற்கு காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ரூபாயை சரிவில் இருந்து மீட்க ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கைகள் ஏன் நடுங்குகின்றன என்பதற்கு மருத்துவத்தில் காரணம் கூறப்பட்டுள்ளது. உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் மூளையின் மத்தியில் இருக்கும் தாலமஸின் நரம்பணுக்களில் ஏற்படும் பிரச்னையால் இந்நடுக்கம் ஏற்படுவதாகவும், இதுபோல் நடுக்கம் ஏற்பட்டால், உடலியக்க சர்க்யூட்டை சரியான முறையில் செயல்பட வைக்கவேண்டும். இதற்கு, நரம்பணுக்கள் செயல்படும் முறையைச் சீராக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
விஷச்சாராயம் அருந்தி அனுமதிக்கப்பட்ட 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மிஞ்சியுள்ள 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கவலைக்கிடமாக உள்ளோரில் 10 பேருக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது. மேலும், சேலம் மருத்துவமனையில் 24 பேர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மனித உயிர்களை காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இந்த சம்பவத்தை பாடமாக எடுத்து தமிழ்நாடு முழுவதும் அரசு ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அண்ணாமலை ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன்பின் அவர் பேசுகையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் கல்வி செலவுக்கு ஏற்ப நிதியுதவி மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
கள்ளச்சாராயம் குடித்து 38 பேர் உயிரிழந்த நிலையில், கவலைக்கிடமான பலர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களை நேரில் சென்று சந்தித்தபின் பேசிய சசிகலா, கள்ளச்சாராயம் விற்பனைக்கு காவல்துறையும் உடந்தை என்று வெளியான செய்தி வேதனையளிப்பதாகக் கூறினார். மேலும், தமிழகத்தில் தொடர்ந்து சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் நடைபெறும் நீட் வழக்கு விசாரணைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் தேர்வில் மோசடி, கருணை மதிப்பெண் அளித்தது உள்ளிட்ட பல மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதேநேரம், இதுபோன்ற பல மனுக்கள் நாட்டின் பல உயர்நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருவதால் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அனைத்தையும் விசாரித்து தீர்ப்பளிக்கவுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்தியதாக கூறும் மோடி, நீட் தேர்வு வினாத்தாள் கசிவை ஏன் தடுக்கவில்லை? என காங்., எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வுகள் குறித்துப் பேசிய அவர், வினாத்தாள் கசிவால் மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடமாக உள்ளதால்தான் நங்கள் சாலையில் இறங்கி போராடுகிறோம் என்றார். மேலும், இந்த வினாத்தாள் கசிவுக்கு யார் பொறுப்பேற்பது என்றும் வினவியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.