India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்பையை சேர்ந்த அழகு சாதன நிறுவனத்தில், காலை 9.30 மணிக்குள் பணிக்கு வராமல், தாமதமாக வரும் ஊழியர்கள் ₹200 அபராதம் செலுத்த வேண்டும் என அந்நிறுவனத்தின் உரிமையாளர் கவுஷல் ஷா உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை பணியாளர்களுக்கு உணவு வழங்க பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 15 நாள்களில் தாமதமாக வந்ததற்காக தான் ₹1,000 அபராதம் கட்டியுள்ளதாக கவுஷல் ஷா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவரின் மனைவி விஜய்யை கட்டி கதறிய காட்சி காண்போரை கலங்க செய்தது. அவருக்கு ஆறுதல் கூறிய விஜய், தேவையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
விமான போக்குவரத்து துறையில் பெண் ஊழியர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமென, DGCA அறிவுறுத்தியுள்ளது. விமானத் துறையில் 2025ஆம் ஆண்டுக்குள் 25% பெண்களை பணியில் அமர்த்த சிவில் விமான அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில், பாலின சமத்துவத்தை கடைப்பிடிக்கும்படி விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
உள்நாட்டு விமான போக்குவரத்தில், உலகின் 3ஆவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் 5ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது இந்தோனேசியா மற்றும் பிரேசில் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி, 1.56 கோடி விமான இருக்கை வசதியுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உள்நாட்டு விமானங்களின் இருக்கை வசதி ஆண்டுக்கு 6.9% வளர்ச்சி கண்டுள்ளது. அமெரிக்கா, சீனா முதல் 2 இடங்களில் உள்ளன.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று தனது 66ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அந்த வகையில், டெல்லியில் உள்ள மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் கஃபேவில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன. பலரும் குடியரசுத் தலைவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் நலம் விசாரித்து வருகிறார். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர்கள் விஜய்யின் கையைப்பிடித்து கதறி அழுதனர். அப்போது, சொல்லமுடியாத துயரத்தில் வாடிய முகத்துடன் இருந்த விஜய், அவர்களுக்கு ஆறுதல் கூறி, சிகிச்சை தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் எம்3 மாடல் இவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்வது சாத்தியமில்லை என குஜராத் ஐஐடி இயக்குநர் ரஜத் விளக்கமளித்துள்ளார். இவிஎம்களை இணையம், புளூடூத் போன்ற மற்ற சாதனங்களுடன் இணைக்க முடியாது என்பதால், மென்பொருள் மற்றும் நிரல்களை ஏற்ற முடியாது எனக் கூறியுள்ளார். மேலும், யாராவது அதை சேதப்படுத்தினால், தானியங்கி செயல்பாடுகள் அதை உடனடியாக சரிசெய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்றதாக கைதான கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா, அவரது தம்பி தாமோதரனிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணை நிறைவடைந்துள்ளது. கல்வராயன் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரிடம் இருந்து விஷச்சாராயம் வாங்கியதாக மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் சின்னத்துரையையும், பின்னணியில் உள்ளவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
போபாலில் இருந்து ஆக்ரா சென்ற வந்தே பாரத் ரயிலில் வயதான தம்பதி பயணித்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து X பக்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட பயணிகளிடம் ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், உணவு வழங்கியவர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் IRCTC உத்தரவாதம் அளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.