India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*1529 – இத்தாலியில் இருந்து பிரெஞ்சுப் படை வெளியேற்றப்பட்டது.*1621 – முப்பதாண்டுப் போர்: பிராஹா நகரில் 27 செக் உயர்குடியினர் தூக்கிலிடப்பட்டனர். 1919 – முதலாம் உலகப் போரின் கடைசி தாக்குதல் ஓர்க்னி நடைபெற்றது. *1925 – அறிஞர் வே.ஆனைமுத்து பிறந்த நாள். *1929 – மெக்சிக்கோவில் கிறிஸ்தேரோ போர் முடிவுக்கு வந்தது. *2001 – இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் மறைந்த நாள். *2009 – கிறீன்லாந்து தன்னாட்சி பெற்றது.
ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காஷ்மீர் இளைஞர்கள் அதிகளவில் வாக்களித்து, ஜனநாயகத்தின் வெற்றியை உறுதி செய்ததாகக் கூறிய அவர், வாக்குகள் வாயிலாக அவர்கள் விரும்பும் புதிய மாநில அரசை தேர்ந்தெடுப்பார்கள் என்றார். காஷ்மீரில் நிரந்தரமாக அமைதி நிலைநாட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான ‘டாப் 100’ கொள்கலன் துறைமுக செயல்திறன் குறியீடு தரவரிசையில், விசாகப்பட்டினம் துறைமுகம் உள்ளிட்ட 9 இந்திய துறைமுகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய துறைமுகங்களை பொறுத்தவரை, இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். கப்பல் & சரக்குகளின் திறன்மிக்க இயக்கம், மீள்தன்மை & ஒட்டுமொத்த செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்தியா அடைந்துள்ளதுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளன.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை சுயநலவாதி என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் காட்டமாக விமர்சித்துள்ளார். தனிப்பட்ட சாதனைகளுக்காக அணியின் நலன்களில் விராட் கோலி சமரசம் செய்வதாகக் கூறிய அவர், 2023 ODI உலகக் கோப்பை தொடரில் SA அணிக்கு எதிரான போட்டியில், சதம் விளாசும் வரை பெரிய ஷாட்களை அடிக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
▶குறள் பால்: காமத்துப்பால் ▶இயல்: கற்பியல்
▶அதிகாரம்: பிரிவாற்றாமை ▶ குறள் எண்: 1152
▶குறள்:
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.
▶பொருள்: முன்பெல்லாம் தலைவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது. ஆனால், இப்போது அவரை கட்டித்தழுவிக் களிக்கும்போதுகூட என் மனதானது அவர் எப்போது வேண்டுமென்றாலும் பிரிந்து செல்லலாம் என்ற அச்சத்தால் துன்பம் கொள்கிறது.
மக்களவைத் தேர்தலில் படுதோல்வி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு என அரசியல்ரீதியாக இபிஎஸ் சறுக்கலைச் சந்தித்து வருகிறார். இப்போது அதிமுகவுக்குள் அவருக்கெதிரான மனத்தாங்கல் பரவலாக எழத் தொடங்கியிருக்கிறது. இந்த சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, கட்சியைக் கைப்பற்றும் கனவோடு ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மூவரும் சுத்துப்போடுவது, அதிமுக வட்டாரத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.
‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண் கதாபாத்திரம் கிடைத்திருந்தால், தீபிகா படுகோன் லுக்கில் கூட நடித்திருப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இயக்குநர் நாக் அஸ்வின் தன்னுடைய கதாபாத்திரத்தையும், அதற்கான லுக்கையும் மிக நேர்த்தியாகச் செய்திருப்பதாகக் கூறிய அவர், ரசிகர்களின் கவனம் ஈர்க்க அந்த லுக்கைத் தேர்வு செய்ய தானும் அஸ்வினும் நிறைய ஒத்திகைகள் பார்த்தோம் என்றார்.
முக்கியமான தருணங்களில் AUS வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள் என்று அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அணியின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், “SCO அணிக்கு எதிரான போட்டியில் AUS வீரர்கள் ஃபீல்டிங்கில் நிறைய தவறுகள் செய்தது உண்மைதான். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த தவறுகளை நாங்கள் சரிசெய்வோம். இந்த முறை கோப்பையை AUS அணி வெல்லும்” என்றார்.
இன்று (ஜூன் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
BSNL வணிக இயக்குனராக சுதாகர ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். BSNL முதன்மை அதிகாரிகளை தேர்வு செய்யும் PESB தேர்வுக் குழு கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை டெலிகாம் தலைமை பொது மேலாளர் சுதாகர ராவ் வணிக இயக்குநராக தேர்வு செய்யப்பட்டார். வணிகப் பிரிவு, சிறு & நடுத்தர நிறுவனங்களை கையாள்வது, விற்பனை போன்ற பொறுப்புகளும், வணிக இயக்குநரின் கீழ் வருகின்றன.
Sorry, no posts matched your criteria.