India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இடைக்கால சபாநாயகராக தேர்வாகி உள்ள பர்த்ருஹரி மஹ்தாப் பிஜு ஜனதாதளம் கட்சியில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1998 முதல் கட்டாக் தொகுதி எம்பியாக தொடர்ந்து வருகிறார். 1998, 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் பிஜு ஜனதாதளம் சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலின் போது அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அவர், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
மனித வாழ்வில் இன்றியமையாத காலை உணவை, எளிதில் ஜீரணமாகும் வகையில் சாப்பிடுவது செரிமான மண்டலம் தனது செயல்பாட்டை மென்மையாகத் தொடங்க வழிவகுக்கும். அந்த வகையில் பப்பாளி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழைப்பழம், பீட்ரூட், ஆப்பிள், ப்ராக்கோலி ஆகியவற்றை காலை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், சகல பிரச்னைகளில் இருந்தும் விடுபடலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
தமிழகத்தில் வரும் 23, 24, 25 ஆகிய 3 நாள்கள் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் இதே நாள்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, அடுத்த 3 நாள்களுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சூர்ய குமார் யாதவ் சமன் செய்துள்ளார். விராட் கோலி 120 போட்டிகளில் பங்கேற்று 15 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். ஆனால், சூர்ய குமார் யாதவ் வெறும் 64 போட்டிகளில் மட்டுமே விளையாடி 15 முறை ஆட்ட நாயகன் விருதைப் வென்றுள்ளார். விரைவில் கோலியின் சாதனையை அவர் முறியடிக்க வாய்ப்புள்ளது.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில், RJ பாலாஜி ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பா X பதிவில், கேக்கில் ரத்தக் கறையுடன் கத்தி, மேசையில் மது பாட்டில், துப்பாக்கி, கத்தி, சுத்தியல், பிளேடு ஆகியவை சிதறிக் கிடக்கின்றன. இது தொடர்பான புகைப்படம் வைரலாகியுள்ள நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் போஸ்டர் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 156 பேர் என்றும் அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக கூறினார். பலருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், ஐசியூவில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு முதல்வரை சந்தித்து கள நிலவரங்களை விளக்க உள்ளனர். கருணாபுரம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயத்தை அருந்தி இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக, அங்கு ஆய்வு செய்த அமைச்சர்கள் உதயநிதி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முதல்வரிடம் ஆய்வு தொடர்பாக விளக்கவுள்ளனர்.
மெத்தனால் ரத்தத்தில் கலந்தால், வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை உண்டாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஒருவர் அருந்தும் சாராயத்தில் 10 மி.லி. மெத்தனால் இருந்தால் பார்வை பறிபோகும், 40 மி.லி. இருந்தால் உயிரிழப்பு ஏற்படும் எனக் கூறியுள்ள மருத்துவர்கள், ரத்தத்தில் ஒருமுறை மெத்தனால் கலந்துவிட்டால் நரம்பு மண்டல பாதிப்புகள், நடுக்குவாதம் போன்றவை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என எச்சரித்துள்ளனர்.
வார இறுதி மற்றும் பவுர்ணமியையொட்டி சென்னையில் இருந்து இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு 600 சிறப்பு பேருந்துகளும், நாளை 410 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதுதவிர வழக்கமான பேருந்துகளும் செயல்பாட்டில் இருக்கும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் வங்கதேச அணி 140/8 ரன்களை எடுத்துள்ளது. முதலில் களமிறங்கிய வங்கதேசம், ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 41, டவ்ஹித் ஹ்ரிடோய் 40 ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். ஆஸி., அணியின் பாட் கம்மின்ஸ் மிகச் சிறப்பாக பந்து வீசி வங்கதேசத்தின் 3 முக்கிய வீரர்களை வெளியேற்றினார்.
Sorry, no posts matched your criteria.