News June 21, 2024

ஜாமின் நிறுத்தி வைப்பு: கெஜ்ரிவால் மனைவி கண்டனம்

image

மதுபான கொள்கை ஊழல் முறைகேட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமின் வழங்கப்பட்டது. இன்று சிறையில் இருந்து வெளிவருவார் என கருதப்பட்ட நிலையில் ஜாமின் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், சர்வாதிகாரம் அதன் அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டதாக அவரது மனைவி சுனிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை தீவிரவாதி போல் நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

News June 21, 2024

இந்திய மாணவர்களுக்கு க்ரீன் கார்டு: டிரம்ப்

image

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் பட்டம் பெறும் இந்திய, சீன மாணவர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான க்ரீன் கார்டு வழங்கப்படும் என குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கையின் மூலம், திறமையான மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறுவதை தடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

News June 21, 2024

உயிரிழப்புக்கு பொறுப்பேற்று பதவி விலகுக: கௌதமன்

image

கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு துணை நிற்கின்ற ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பதவி விலக வேண்டும் என இயக்குநர் கௌதமன் வலியுறுத்தியுள்ளார். கள்ளச்சாராயத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த அவர், தமிழக அரசு உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார். இனியும் இது போன்றதொரு துயரம் நடக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

News June 21, 2024

2 திமுக எம்எல்ஏக்களை கைது செய்ய வேண்டும்: அன்புமணி

image

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களை காப்பாற்றும் உதயசூரியன் உள்ளிட்ட 2 திமுக எம்எல்ஏக்களை கைது செய்ய வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை வெறும் கண்துடைப்பு என்ற அவர், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

News June 21, 2024

BPL ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும்

image

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் BPL ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்கும் மத்திய அரசின் சலுகைகள்.
*ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டத்தில் ₹5 லட்சம் வரை இலவச சிகிச்சை
*அனைவருக்கும் வீடு திட்டத்தில், வீடு கட்ட ₹1.20 லட்சம் மானியம்.
*உஜ்வாலா திட்டத்தில் இலவச சிலிண்டர், அடுப்பு வழங்கப்படும்.
*கைவினைக் கலைஞர்களுக்கு ₹3 லட்சம் வரை கடனுதவி. *அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தில் இலவச ரேஷன்.

News June 21, 2024

கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணை: ராமதாஸ்

image

கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விசாரணையை சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவம் காவல்துறையின் அலட்சியத்தால் நடந்த ஒன்றாக மட்டுமே கருதமுடியாது என்ற அவர், ஆட்சியாளர்களின் ஆதரவுடன் இந்த படுகொலை நடந்துள்ளதாக விமர்சித்தார். இந்த சம்பவத்தில் தவறு செய்த அனைவரையும் தண்டிக்கவும் வலியுறுத்தினார்.

News June 21, 2024

எமிஸ் பணியில் 8,000க்கும் மேற்பட்ட தனியார் ஊழியர்கள்

image

அரசுப் பள்ளிகளில், ‘எமிஸ்’ தளத்தில், மாணவர், ஆசிரியர் விபரம் பதிவேற்றுதல் உள்ளிட்ட பணிகளை, தனியார் நிறுவன ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர். மாணவர்களின் விபரங்களை அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஆன்லைனில் சேகரித்து வருகின்றனர். இப்பணிகளால், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து, 8,000க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களை, தமிழக அரசு தற்காலிக அடிப்படையில் நியமித்துள்ளது.

News June 21, 2024

ஓடி, ஒளிபவன் நானில்லை: ஸ்டாலின்

image

பிரச்னையை கண்டு ஓடி ஒளிய மாட்டேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துவிட்டு வந்த பிறகே பேசுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் உள்துறை மற்றும் காவல்துறை தலைவர் (DGP) ஆகியோரிடம் இருந்து அறிக்கை வந்த பிறகு கடுமையான நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

News June 21, 2024

தயார் நிலையில் உயிர் காக்கும் மருந்துகள்: ஸ்டாலின்

image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதில் பலர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார். மேலும், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்

News June 21, 2024

விஜய்யின் கடைசி பட அப்டேட்

image

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். அவரது 69ஆவது படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. அத்துடன் அவர் நடிப்பதை நிறுத்திவிட்டு, அரசியலில் ஈடுபட உள்ளார். இந்த நிலையில், விஜய்யின் பிறந்த நாளான நாளை (ஜூன் 22) அவரது கடைசி படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதேபோல், கோட் படத்தின் அப்டேட்டும் ஒவ்வொன்றாக வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!