News June 21, 2024

ஷமி, சானியா திருமணம் என்ற தகவல் வதந்தி

image

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதேபோல், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்துப் பெற்றார். இந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள சானியாவின் தந்தை இம்ரான், இது பொய்த் தகவல் என்றும், ஷமியை அவர் நேரில் கூட பார்த்தது கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

பாஜகவின் ராஜ்ய சபா தலைவராகும் ஜே.பி.நட்டா?

image

பாஜக தேசிய தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இருப்பினும் நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடையும் வரை அவரே தலைவராக நீடிப்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜகவின் மாநிலங்களவை தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நட்டா, கடந்த வாரம் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார்.

News June 21, 2024

அல்லு அர்ஜுனுக்கு நேரில் அழைப்பு விடுத்த வரலட்சுமி

image

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவுக்கும் ஜூலை 2ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தனது திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளை நேரில் சந்தித்து சரத்குமார் குடும்பத்தினர் அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில், ஹைதராபாத் சென்ற வரலட்சுமி நடிகர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.

News June 21, 2024

வினாத்தாள் கசிவிற்கு எதிராக புதிய சட்டம்

image

நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, அதிக மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றது என பல்வேறு முறைகேடுகள் நடந்ததால் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இத்தகைய முறைகேடுகளை தடுக்க உத்தரபிரதேச அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

News June 21, 2024

ஸ்டாலின் அரசுக்கு மிகப்பெரிய கரும்புள்ளி?

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகிறது. 50 பேர் உயிரிழந்த சோகம் ஒருபுறம், கொடிகட்டி பறக்கும் கள்ளச்சாராயம் மறுபுறம் என்று வெளிவரும் தகவல்கள் மிரள வைக்கின்றன. ஆளுங்கட்சியினரின் தொடர்பு, காவல்துறைக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை என வெளியாகும் செய்திகள், ஸ்டாலின் அரசுக்கு மிகப்பெரிய கரும்புள்ளி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். என்ன செய்யப்போகிறார் முதல்வர்?

News June 21, 2024

இடைத்தேர்தலில் ஸ்ரீமதியின் தாயார் மனுத்தாக்கல்

image

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஸ்ரீமதியின் தாயார் செல்வி மனுத்தாக்கல் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி 2022ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அது தொடர்பாக விசாரிக்க வலியுறுத்தி சட்டப் போராட்டம் நடத்திவரும் செல்வி, இடைத் தேர்தலில் போட்டியிட்டு கவனம் ஈர்க்க திட்டமிட்டுள்ளார்.

News June 21, 2024

ஊட்டச்சத்து குறைபாட்டில் இந்திய குழந்தைகள்

image

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, 4இல் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாக UNICEF தெரிவித்துள்ளது. மொத்தம் 18.1 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 25 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆசிய அளவில் ஆப்கானிஸ்தான், பூடான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக இந்தியா 3ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 21, 2024

நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மே இரண்டாம் வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிஎஸ்சி நர்சிங். பி.பார்ம் உள்ளிட்ட 19 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூன் 21) கடைசி நாளாகும். இதற்கு <>www.tnmedicalselection.org<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 2,200, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 15,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

News June 21, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 21, 2024

எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை சுற்றி வளைத்த ராட்சத டிராகன்

image

நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சியில் ராட்சத டிராகன் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ சீரிஸின் 8ஆவது எபிசோட் HBO Max தளத்தில் வெளியாகியுள்ளது. இதை விளம்பரப்படுத்தும் நோக்கில், எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் இந்த ராட்சத டிராகன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தி இந்த டிராகன் உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியும்.

error: Content is protected !!