News June 21, 2024

செய்தியாளர் குற்றச்சாட்டு: இந்திய அரசு மறுப்பு

image

இந்திய அதிகாரிகள் WORK PERMIT-ஐ புதுப்பிக்க மறுத்ததால், நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக, ஃபிரான்ஸ் செய்தியாளர் செபாஸ்டியன் ஃபார்சிஸ் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அவரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், WORK PERMIT புதுபித்தலுக்காக பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

டாஸ்மாக் மூலம் ₹45,855.67 கோடி வருமானம்: அரசு

image

தமிழ்நாட்டில் 2023 – 24 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ₹45,855.67 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக, தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருவாய் கடந்த ஆண்டை விட, ₹1,734.54 கோடி கூடுதலாகும். 2022 – 23 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ₹44,121.13 கோடி வருவாய் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு டாஸ்மாக் வருவாய் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News June 21, 2024

ஆசைக்கு இணங்க மறுத்த மகள் கொலை

image

ஹைதராபாத்தில் பலாத்காரம் செய்ய முயன்ற போது தடுத்த மகளை, தந்தை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முற்பட்டபோது, அதை தடுத்து தாயிடம் கூறிவிடுவேன் என கூறியதால், 12 வயது மகளை கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு மகளை காணவில்லை என புகார் அளித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குடி மற்றும் ஆபாச படங்களுக்கு அடிமையான தந்தையை போலீசார் கைது செய்தனர்.

News June 21, 2024

ஜெயலலிதாவை ஏன் பதவி விலக சொல்லவில்லை: மா.சு

image

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 53 பேர் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்ததாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், 2001இல் 53 பேர் உயிரிழந்த போது யாரும் ஜெயலலிதாவை பதவி விலகச் சொல்லவில்லை என்றார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையை கருதியே நிதியுதவி அளிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

News June 21, 2024

வேலூரில் சாராயம் விற்ற 50 பேர் கைது

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களையடுத்து தமிழகம் முழுவதும் சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வேலூரில் கள்ளச்சாராயம் விற்ற 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 667 லிட்டர் கள்ளச்சாராயம், 431 மது பாட்டில்கள், 2400 லிட்டர் கொள்ளளவு கொண்ட சாராய ஊரல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்ற சோதனை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

News June 21, 2024

முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

image

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. முன்னதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை நடைபெற்ற நிலையில் தற்போது முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

News June 21, 2024

Omerprazole மருந்து எதற்காக பயன்படுகிறது?

image

வயிற்றில் அதிகமாக இருக்கும் அமிலத்தை நீக்க ஒமேப்ரஸோல் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது இரைப்பை, சிறுகுடல் புண்கள், உணவுக்குழாய் அழற்சி போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. மேலும், தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு இரைப்பை மற்றும் குடலில் இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க ஒமேப்ரஸோல் உதவுகிறது. மருத்துவரின் பரிந்துரையின்படி, மாத்திரை அல்லது பவுடர் வடிவில் இந்த மருந்து வழங்கப்படுகிறது.

News June 21, 2024

டிராப் செய்யாததால் காதல் மீது வழக்கு

image

காதலிக்கும் போது, காதலருக்கு வழங்கிய வாக்குறுதியை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஒரு வேளை அதனை செய்ய தவறினால், அதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும். அந்த வகையில், நியூசிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது காதலன் தன்னை விமான நிலையத்தில் டிராப் செய்யவில்லை என்ற காரணத்திற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தனக்கு அளித்த உத்தரவாதத்தை அவர் மீறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

News June 21, 2024

இத்தனை பேர் உயிரிழந்ததற்கு என்ன காரணம்?

image

கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வர தயக்கம் காட்டியதாலேயே இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களிடம் நலம் விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிசிச்சை பெற தயங்கிய 55 பேரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து தற்போது சிகிச்சை அளித்து வருவதாக கூறியுள்ளார்.

News June 21, 2024

தலைமை செயலாளர் தீவிர ஆலோசனை

image

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் SPக்களுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். காணொளி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையில், மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு எதிரான நடவடிக்கையில் தற்போது அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

error: Content is protected !!