News June 21, 2024

ஆர்யா, சந்தானம் கூட்டணியில் புதிய படம்?

image

ஆர்யா, சந்தானம் கூட்டணியில் வெளியான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட படங்கள் வெற்றி படங்களாக அமைந்துள்ளன. குறிப்பாக, சந்தானத்தின் நகைச்சுவை அப்படங்களுக்கு மிகப்பெரிய பக்க பலமாக அமைந்திருக்கும். இந்நிலையில், நடிகரும், தனது நண்பருமான சந்தானத்தை வைத்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்க ஆர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News June 21, 2024

நலிவுற்ற மக்கள் வீடு கட்ட மானியம்: அரசு

image

*நில உரிமையுள்ள நலிவுற்ற மக்கள் பயன்பெறும் வகையில், 1 லட்சம் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும். *₹70 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளின் புனரமைப்பு பணிகள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில் மேற்கொள்ளப்படும். *₹60 கோடி மதிப்பீட்டில் ஆறு பேருந்து நிலையங்கள் தலா ₹10 கோடியில் மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News June 21, 2024

அதிரடியாக அரை சதம் அடித்தார் டிகாக்

image

T20 WCல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் டிகாக் 22 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். இதன்மூலம் T20 WCல் குறைந்த பந்தில் அரை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் உடன் முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டார். அதிரடியாக விளையாடிய டிகாக் 3 ஃபோர், 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இவரது அதிரடியால் தெ.ஆ., 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்துள்ளது.

News June 21, 2024

மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்

image

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங் தமிழில் டிக்கிலோனா, பிரண்ட்ஷிப் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தமிழில் மேலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். T20 WC இந்தியா, ஆப்கானிஸ்தான் போட்டியில் வர்ணனையாளராக பங்கேற்ற அவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 21, 2024

பட்டாசு தொழிலாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி: அரசு

image

*தனியார் தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு தொழில் 4.0 தொழில்நுட்பமைய உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி குறுகிய கால பயிற்சி அளிக்கப்படும். *ரூ.24.90லட்சம் மதிப்பீட்டில் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும். *ஆட்டோ ஓட்டும் பெண்கள் மற்றும் திருநங்கைகள் 1000 பேருக்கு, ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

News June 21, 2024

50 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 50 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை – 27, புதுச்சேரி ஜிப்மர் – 3, சேலம் அரசு மருத்துவமனை – 16, விழுப்புரம் அரசு மருத்துவமனை – 4 என இறப்புகள் பதிவாகியிருக்கின்றன. மேலும் 135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News June 21, 2024

மனசாட்சி இருந்தால் ராஜினாமா செய்யுங்கள்

image

கள்ளச்சாராய மரணங்களுக்கு முதல்வர் ஸ்டாலின்தான் காரணம் என EPS குற்றம் சாட்டியுள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் 3 ஆண்டுகளாக ஏதும் செய்யாமல் இருந்துவிட்டு தற்போது அதிகாரிகளை மாற்றிவிட்டேன் என்பது பொறுப்பற்ற தன்மை என்ற அவர், நீங்கள் அதிகாரிகளை மாற்ற 50 உயிர்கள் பலியாக வேண்டுமா? என வினவியுள்ளார். மேலும், உங்களுக்கு மனசாட்சி கொஞ்சமாவது இருந்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

‘மகாராஜா’ படத்தில் நடிக்க இருந்த விஜய் ஆண்டனி

image

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளியான மகாராஜா திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் முதலில் விஜய் ஆண்டனி நடிக்க இருந்ததாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். இயக்குநர் நித்திலன் தன்னிடம் கதையை கூறியதாகவும், அதை விஜய் ஆண்டனியிடம் சொன்னபோது, கதை பிடித்து நடிக்க விருப்பம் காட்டியதாகவும், பின்னர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

கைப்பற்றிய நோட்டில் 199 பக்கங்களை காணவில்லை

image

2017ஆம் ஆண்டு பெங்களூரில் தனது வீட்டின் அருகே பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவரிடம் இருந்து தலா 192 பக்கங்கள் கொண்ட 2 நோட்டுப் புத்தகங்களை சிறப்பு புலானாய்வு அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் பலரது மொபைல் எண்கள் மற்றும் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அதில் 199 பக்கங்களை காணவில்லை என காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

News June 21, 2024

வாட்ஸ்அப் மூலம் ₹94 லட்சம் மோசடி!

image

புனேவை சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், சில மணி நேரங்களில் தனது வங்கி கணக்கில் இருந்த ₹94 லட்சத்தை இழந்துள்ளார். பங்குச்சந்தையில் டிரேடிங் மூலம் அதிக லாபம் பெற விரும்பி, ‘The Value Team A 13’ என்ற வாட்ஸ்அப் குழுவில் அந்த நபர் இணைந்துள்ளார். குழுவில் வந்த லிங்கை கிளிக் செய்ததும், அவரது வங்கி கணக்கில் இருந்த பணம், வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு தன்னிச்சையாக மாற்றப்பட்டதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!