News June 22, 2024

பங்குச் சந்தை உயிரினங்கள் எதை குறிக்கின்றன? (3/5)

image

பன்றி ~ குளத்தில் நீர் நிறைந்துகொண்டிருக்கிறது என்பதையும் முதலை உள்ளிட்டவை அதில் பசியோடு இரைத்தேடி காத்திருக்கலாம் என்பதையும் அறியாமல் பன்றி நீந்திக்கொண்டிருக்கும். சில சமயங்களில் கழிவு நீர் அல்லது சகதியில் மாட்டிக்கொள்ளும். அது போல, பங்குச் சந்தையில் உள்ள அபாயங்களை அறியாமல், லாபத்தில் மட்டும் கண்ணை வைத்து பணத்தைக் கொட்டும் முதலீட்டாளர்களை பன்றியோடு ஒப்பீடு செய்யலாம்.

News June 22, 2024

பங்குச் சந்தை உயிரினங்கள் எதை குறிக்கின்றன? (5/5)

image

குரங்கு ~ எப்போதுமே எதோ ஒன்றை நினைத்து, வேறொன்றை கையில் வைத்து குரங்கு நோண்டிக்கொண்டே இருக்கும். அது போல, அடிப்படைகள் இல்லாமலேயே யூகங்களை வைத்து எப்போதும் பங்குச் சந்தை சார்ந்த விஷயங்களையே பேசிக்கொண்டிருப்பது, போக்கை கணிக்காமல் முரண்டு பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் உள்நாட்டு முதலீட்டாளர்களை குரங்குடன் சந்தை நிபுணர்கள் ஒப்பிடுகின்றனர்.

News June 22, 2024

பங்குச் சந்தை உயிரினங்கள் எதை குறிக்கின்றன? (4/5)

image

கழுகு ~ கழுகு அந்நிய முதலீட்டாளர்களை குறிக்கும். இரைத்தேடி வாய்ப்புள்ள இடங்களுக்கு எல்லாம் பசியில் சில கழுகு செல்லும். அது போல, சீனா போன்ற வேறு சந்தைகளுக்கு இடம்மாறிய அந்நிய முதலீட்டாளர்கள், அங்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், மீண்டும் இந்திய சந்தைக்கே வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கழுகு போல அந்நிய முதலீட்டாளர்களுக்கு இதுவரை அதிருப்தியே மிஞ்சியுள்ளது.

News June 22, 2024

இன்டர்போல் உதவியுடன் நடக்கும் வழக்கு விசாரணை

image

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ‘இன்டர்போல்’ போலீசார் உதவியுடன் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடநாடு வழக்கு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் ஷாஜகான், “கோடநாடு கொலை நடந்த ஓரிரு நாட்களில், கனகராஜிக்கு ஏழு எண்ணில் தொடங்கும் வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. யார்? எதற்காக? அழைத்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

News June 22, 2024

ஜூன் 22 வரலாற்றில் இன்று!

image

*1898 – ஸ்பெயின் அமெரிக்கா இடையே கியூபாவில் போர் மூண்டது. *1930 – ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது. *1941 – சோவியத்திற்கு எதிரான லித்துவேனியா விடுதலைப் போர் தொடங்கியது. *1978 – புளூட்டோவின் சரோன் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. *1992 – வாச்சாத்தியில் தமிழக காவல்துறை & வனத்துறையினரால் வன்கொடுமை அரங்கேற்றப்பட்டது. *2021 – இசைக் கலைஞர் பாறசாலை பொன்னம்மாள் மறைந்த நாள்.

News June 22, 2024

தேர்தல் புறக்கணிப்பு என்பது ராஜதந்திர யுத்தியா?

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததை ராஜதந்திர யுத்தியாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். பாஜகவுக்கான மறைமுக ஆதரவு கொடுக்கவே இந்த புறக்கணிப்பு என கிசுகிசுக்கப்பட்டாலும், உண்மையில் இது பாமகவுக்கான தூதுதான் என அவர்கள் கூறுகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்கு வைத்து, எப்படியாவது பாமகவை கூட்டணிக்கு இழுக்க இபிஎஸ் காய் நகர்த்துவதாக அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.

News June 22, 2024

GST வரி விகித சீரமைப்புக் குழு மாற்றியமைப்பு

image

GST வரி விகித சீரமைப்புக்கான அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. அதன்படி, குழுவின் ஒருங்கிணைப்பாளராக பிஹார் துணை முதல்வர் சாம்ராட் செளதரி நியமிக்கப்பட்டுள்ளார். உ.பி., நிதியமைச்சர் சுரேஷ்குமார், கர்நாடக வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே, கேரள நிதியமைச்சர் பாலகோபால் உள்பட 7 பேர் புதிய உறுப்பினர்களாக குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழு தற்போது 2ஆவது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

News June 22, 2024

இதுதான் பாஜகவின் ஒரே நோக்கம்!

image

மனுவாத சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பது பாஜகவின் ஒரே நோக்கம் என்று சிபிஎம் மூத்த தலைவர் பேரா. அருணன் கூறியுள்ளார். NCERT பாடப்புத்தகங்களில் பாபர் மசூதி இடிப்பு குறித்து பாடப் பகுதிகளில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பேசிய அவர், மெய்யான வரலாற்றை பாஜக ஒருபோதும் விரும்புவதில்லை என்றார். மேலும், வரலாற்றைத் திரிக்கும் எண்ணத்தில் பாடத் திட்டத்தை மாற்றுகிறார்கள் எனத் தெரிவித்தார்.

News June 22, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: துறவறவியல்
▶அதிகாரம்: அவாவறுத்தல் ▶ குறள் எண்: 361
▶குறள்:
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
▶பொருள்: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் தவறாமல் வருகின்ற பிறவித்துன்பமானது, ‘பேராசை’ என்ற விதையில் இருந்தே முளை விடுகிறது என சான்றோர்கள் கூறுவர்.

News June 22, 2024

நேட்டோவின் அடுத்த தலைவர் யார்?

image

மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பான நேட்டோவின் பொதுச் செயலாளராக நெதர்லாந்தின் பிரதமா் மார்க் ருட்டே தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் மிகத் தீவிர ஆதரவாளரான ருட்டே, ரஷ்ய அதிபர் புதினை மிகக் கடுமையாக எதிர்த்து வருபவராவார். இருந்தாலும், மற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களோடு ஒப்பிடுகையில் ருட்டே போருக்கு முக்கியத்துவம் தராத சமாதான விரும்பி என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!