India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சொத்து பரிமாற்றத்தில் ஆள் மாறாட்டத்தை தடுக்க விற்பவரின் கைரேகையை முந்தைய பதிவுடன் ஒப்பிட்டு பார்க்கும் புதிய நடைமுறையை பதிவுத்துறை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு சொத்து பத்திரம் பதிவுக்கு வரும் போது, விற்பவரின் கைரேகை, அதன் முந்தைய பதிவின்போது பெறப்பட்டதுடன் ஒத்துப்போனால் மட்டுமே புதிய பதிவு மேற்கொள்ளப்படும். இதில், வேறுபாடு இருந்தால், தற்போது தாக்கல் செய்யப்படும் பத்திரம் நிராகரிக்கப்படும்.
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 14ஆம் தேதி நிலவரப்படி, 2.9 பில்லியன் டாலர் சரிவை சந்தித்தது. இது இந்திய மதிப்பில் ₹24,400 கோடி ஆகும். இதன்படி தற்போது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு ₹54.48 லட்சம் கோடியாக உள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த கையிருப்பு ₹35,000 கோடி அதிகரித்து ₹54.73 லட்சம் கோடியாக புதிய உச்சம் தொட்டது. இந்நிலையில் தற்போது வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
சவுதி அரேபியாவுக்கு ஹஜ் புனித யாத்திரை செல்வதை, இஸ்லாமியர்கள் தங்களது வாழ்வின் முக்கிய கடமையாக கருதுகின்றனர். அந்த வகையில், நடப்பாண்டு ஹஜ் யாத்திரை சென்று பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. சவுதியில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வாட்டுவதால் வீசும் வெப்ப அலையினாலும், வயது மூப்பினாலும் இவர்கள் பலியானதாக, வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
T20 WC சூப்பர் 8 ஆட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 129 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அமெரிக்கா. டாஸ் வென்ற WI பந்துவீச்சை தேர்வு செய்ததால் USA முதலில் பேட்டிங் செய்தது. அனைத்து வீரர்களும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 19.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஆண்ட்ரீஸ் 29, நிதிஷ் குமார் 20 ரன்கள் எடுத்தனர். WI தரப்பில் ரஸ்ஸல், சேஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
திரைத்துறையில் பன்முகக் கலைஞராக விளங்கும் விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிறியவர்கள் முதல் பெரியவர் வரை, அவரது நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. குறிப்பாக, இளம்பெண்களின் கனவு நாயகனாக இருப்பவர்களில் விஜய் தான் இன்றும் டாப். பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து, ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்துள்ள விஜய்-க்கு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதனால், கல்லூரி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்லுங்கள்.
தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளை தடுப்பதற்கான புதிய சட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் NEET, UGC போன்ற முன்னணித் தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க, பொதுத்தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம், 2024 அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மோசடியாளர்களுக்கு 5-10 ஆண்டுகள் சிறை, ₹1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்தியாவின் தங்கக் கையிருப்பு கடந்த 14ஆம் தேதி ₹8,480 கோடி (1.015 பில்லியன் டாலர்) குறைந்து ₹4.67 லட்சம் கோடியாக இருந்தது. அதேபோல், வெளிநாட்டு கரன்சிகள் இருப்பும் கடந்த 14ஆம் தேதி நிலவரப்படி ₹17,548 கோடி வீழ்ச்சி கண்டு ₹47.96 லட்சம் கோடியாக இருந்தது. அமெரிக்க டாலர், யூரோ, பவுண்ட், யென் ஆகிய வெளிநாட்டு கரன்சிகளை வாங்கி இந்தியா இருப்பு வைப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் சென்னையில் வரும் 24ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், தற்போது ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வு குளறுபடிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டம் தீவிரமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.