News June 22, 2024

தவறான தகவலை அமைச்சர் மா.சு. பரப்புகிறார்: இபிஎஸ்

image

மக்கள் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான தகவலை மக்களிடம் பரப்புவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனப்போக்காக செயல்படுகிறது என்றார். மேலும், விஷச்சாராயம் அருந்தியவர்கள் தாமதமாக வந்ததால் தான் உயிரிழந்ததாக கூறுவது தவறு எனவும் அவர் கூறியுள்ளார்.

News June 22, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹680 குறைந்தது

image

தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரன் ₹640 வரை கடுமையாக உயர்ந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹680 குறைந்து ₹53,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ₹85 குறைந்து ₹6,695க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ₹2.00 குறைந்து கிராம் ₹96.50க்கும், கிலோ ₹96,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News June 22, 2024

அதிமுகவினர் வெளிநடப்பு

image

சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். 3ஆம் நாள் கூட்டம் இன்று கூடிய உடன், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை விவாதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், கேள்வி நேரத்தை ஒத்திவைக்க முடியாது என சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தார். இதனைக் கண்டித்து, இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏ.க்கள் அனைவரும் பேரவைக் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

News June 22, 2024

தமிழகத்தில் 2 நாள்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட அதி கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது. தொடர்ந்து, இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதன்படி, 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. ஜூன் 24, 25, 26ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

News June 22, 2024

இன்றும் கறுப்பு சட்டையில் அதிமுகவினர்

image

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 2வது நாளாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் பேரவையில் கேள்வியெழுப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரவும் முடிவு செய்துள்ளனர்.

News June 22, 2024

புதிய சட்ட வரம்புக்குள் வராத யுஜிசி-நெட் 2024 தேர்வு

image

முறைகேடு குற்றச்சாட்டு எழுந்ததால் யுஜிசி-நெட் 2024 தேர்வு கடந்த 19ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும் முறைகேடு குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், 2024 பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட வரம்பிற்குள் யுஜிசி-நெட் 2024 தேர்வு கொண்டு வரப்படவில்லை. இதனால் அதில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளானோர் இந்த சட்டத்தின்கீழ் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள்.

News June 22, 2024

T20 WC தொடரிலிருந்து வெளியேறியது அமெரிக்கா

image

நடப்பு T20 உலகக் கோப்பை தொடரிலிருந்து அமெரிக்க அணி வெளியேறியுள்ளது. லீக் சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய அந்த அணி, சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. இதனால், அரையிறுதிச் சுற்றுக்கு செல்லும் ரேஸிலிருந்து முதல் அணியாக USA வெளியேறியுள்ளது. இதனிடையே அமெரிக்க அணி பங்கேற்ற இந்த T20 தொடர் தான், அந்த அணியின் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி.

News June 22, 2024

தாம்பத்ய உறவில்லையா? விவாகரத்து அளிக்கலாம்

image

தாம்பத்ய உறவுக்கு மனைவி அனுமதிக்காததும் இந்து திருமணச் சட்டப்படி கொடுமையே என கூறி கணவருக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மனைவி தாம்பத்ய உறவுக்கு அனுமதிக்கவில்லை என கணவர் தொடுத்த வழக்கில் குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து அளித்தது. இதை எதிர்த்து மனைவி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், விவாகரத்தை உறுதி செய்தது.

News June 22, 2024

மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி

image

T20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் அமெரிக்காவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய USA, 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 129 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய WI, 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய WI வீரர், ஷாய் ஹோப் 39 பந்துகளில் 82 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

News June 22, 2024

பாடம் நடத்த மட்டுமே ஸ்மார்ட் வகுப்பறை

image

அரசுப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். இந்த வகுப்பறைகளை பயன்படுத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், சரியான கால அட்டவணை தயாரித்து, வகுப்பறைகளை பயன்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது. அத்துடன், இதற்காக ஒரு ஆசிரியரை நியமிக்குமாறும், கற்றல், கற்பித்தலுக்கு மட்டுமே இதனை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!