India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்றைய டிஜிட்டல் உலகில் UPI பரிவர்த்தனை சர்வ சாதாரணமாகிவிட்டது. இந்த நிலையில், இந்திய தேசியக் கொடுப்பனவு கழகத்தின் (NPCI) விதிப்படி, குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு வரம்புகள் உள்ளன. உதாரணத்திற்கு, HDFC வங்கியானது தனிநபர் பரிவர்த்தனைகளுக்கு, ஒரு நாளைக்கு ₹1 லட்சம் அல்லது 20 பரிவர்த்தனைகள் என்ற வரம்பை நிர்ணயித்துள்ளது. மூன்றாம் தரப்பு UPI செயலிகள் மூலம் ஒரு நாளைக்கு 10 முறை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
தவெக கட்சியை ஆரம்பித்தது முதல் நடிகர் விஜய், எக்ஸ் பக்க பதிவுகள் மூலமே தனது ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார். இதனால் அவர் எப்போது தனது கட்சிப் பணியை வெளிப்படையாகத் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்று அவரது 50ஆவது பிறந்தநாள் என்பதால், தவெக மாநாடு தேதியை வெளியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகின. இதனால் அவரது ஆதரவாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இபிஎஸ் அரசியல் செய்து வருவதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுக அடைந்த தோல்வியை திசை திருப்பும் வகையில் இபிஎஸ் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், சட்டப்பேரவையில் வாய்ப்பு தரவில்லை என்று அதிமுக கூறுவது அப்பட்டமான பொய் எனச் சாடினார். முன்னதாக அவையில் பேசுவதற்கு தங்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என இபிஎஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியாகின. இதில் ஹரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றதும், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதும் சர்ச்சையாகி மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி, கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு நாளை 7 மையங்களில் மீண்டும் தேர்வு நடைபெற உள்ளது.
நடிகர் விஜய், தவெக தலைவரான பின் இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சீமான், டிடிவி தினகரன், கமல், பிரபுதேவா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர். முன்னதாக, கள்ளக்குறிச்சி துக்க சம்பவத்தை அனுசரிக்கும் வகையில், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என, ரசிகர்கள் மற்றும் கட்சியினரிடம் விஜய் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கள்ளச்சாராயம் விற்பவர்களுடன் தங்களுக்கு உள்ள தொடர்பை நிரூபித்தால், பொது வாழ்வில் இருந்து விலகுகிறோம் என திமுக எம்எல்ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் கூறியுள்ளனர். கள்ளக்குறிச்சி சாராய வியாபாரிகளுடன் இவர்களுக்கு தொடர்பு என இபிஎஸ், ராமதாஸ், அன்புமணி குற்றம்சாட்டினர். இதனை கண்டித்துள்ள இருவரும், தங்கள் மீது அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக மான நஷ்ட வழக்குத் தொடர்வோம் என எச்சரித்துள்ளனர்.
மெரினாவில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக வந்த தகவலை அடுத்து, கடற்கரை சாலையில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களை கண்டித்தும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியும் குறிப்பிட்ட சில அமைப்புகள் போராட்டம் நடத்தலாம் என்று உளவுத்துறை அளித்த தகவலின் பேரில், மெரினாவில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தவெக தலைவர் விஜய்யின் 50ஆவது பிறந்தநாளையொட்டி, அவருக்கு சீமான் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், நடிப்புத் திறன் உள்ளிட்டவற்றால் தமிழக மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராய் நினைக்கும் அளவுக்கு உச்சம் தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, என்னுயிர் தம்பி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்து என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிரான இன்றைய சூப்பர் 8 போட்டிகளில் பூரன் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில், பூரன் 3 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், டி20 உலகக் கோப்பையில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் (16) சாதனையை முறியடித்துள்ளார். இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை பூரன் (17) சிக்ஸர்களை விளாசியுள்ளார். மூன்றாவது இடத்தில் 15 சிக்ஸர்களுடன் வாட்சன் மற்றும் சாமுவேல் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்வியாலும், உள்கட்சியில் குழப்பம் நிலவுவதாக வெளியானத் தகவல்களாலும் இபிஎஸ் மற்றும் அதிமுக மூத்த தலைவர்கள் சோர்ந்து போய் இருந்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி சம்பவத்தால் மீண்டும் அக்கட்சியினர் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். மாநிலத்தை ஆளும் திமுக அரசுக்கு எதிராக இந்த விவகாரத்தை முன்வைத்து அதிமுகவினர் மீண்டும் களத்தில் குதித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.