News June 22, 2024

தமிழகம் முழுவதும் HD தரத்துடன் செட்டாப் பாக்ஸ்: PTR

image

குறைந்த விலையில், சிறந்த சேவைத்தரத்துடன் கூடிய HD செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும், கட்டண உயர்வால் ஏழைகள் டிவி பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் இபிஎஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள PTR, இன்னும் 2 மாதங்களில் அரசு கேபிள் டிவி புது உச்சம் தொடும்
என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News June 22, 2024

உணவருந்த சரியான நேரம் எது?

image

காலையில் தூங்கி எழுவதற்கும், உணவருந்துவதற்கும் சரியான நேரத்தை உடல்நல ஆலோசகர்கள் முன்வைக்கின்றனர். இதைக் கடைபிடித்தால், நோயின்றி நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழலாம் எனப் பரிந்துரைக்கின்றனர். * தூங்கி எழும் நேரம்: 6 மணி *காலை உணவு: 7 – 8 மணி *காலைநேர நொறுக்குத்தீனி: 10-10.30 மணி *மதிய உணவு: 1-2 மணி *மாலை நேர நொறுக்குத்தீனி: 3-4 மணி *இரவு உணவு: 7-8 மணி ஆகும்.

News June 22, 2024

மோசமான நாள்: அமெரிக்க அணி கேப்டன் உருக்கம்

image

T20 WC தொடரில், WI அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது வருத்தமளிப்பதாக அமெரிக்க அணியின் கேப்டன் ஜோன்ஸ் கூறியுள்ளார். இந்த நாள், தங்கள் அணி வீரர்களுக்கு மோசமானது எனக் குறிப்பிட்ட அவர், மிடில் ஓவர்களில் கூடுதல் விக்கெட்டுகளை இழந்ததால் அதிக ரன்களை எடுக்க முடியவில்லை. மேலும், டி20 கிரிக்கெட்டில் இது மிகவும் முக்கியமானது. அதிலிருந்து அமெரிக்க அணியினால் மீள முடியவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

News June 22, 2024

சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடலாமா?

image

நவகிரகங்களில் ஆயுள் காரகனாக விளங்கக்கூடிய சனிபகவானின் ஆதிக்கத்தை வைத்து மனிதர்களின் ஆயுட்காலமானது அமைகிறது. அந்த சனிபகவானை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் விஷ்ணு எனப்படும் பெருமாள். ஆதலால் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் பெருமாளை வணங்கக் கூடியவர்கள், விரதம் இருப்பவர்கள் அதை தவிர்ப்பது சிறந்தது என ஆன்மீக சாஸ்திரம் கூறுகிறது.

News June 22, 2024

இந்திய தொழிலதிபர் குடும்பத்திற்கு சிறை

image

வீட்டுப் பணியாளர்களை துன்புறுத்திய வழக்கில், இந்துஜா குழுமத்தின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேருக்கு, ஜெனிவா நீதிமன்றம் 4.5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்துள்ளது. ஜெனிவா வீட்டில், பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம், 18 மணி நேர வேலை என கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரகாஷ் இந்துஜா உள்பட நால்வருக்கு சிறை தண்டனை விதித்தது.

News June 22, 2024

சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் போட்டி: சரத்பவார்

image

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி அதிக இடங்களில் போட்டியிடும் என அக்கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். அக்கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் INDIA கூட்டணி தொடருவோம் என்றும், சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடலாம் எனவும் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 48 இடங்களில் அக்கட்சி 10இல் மட்டுமே போட்டியிட்டது.

News June 22, 2024

விஜய்க்கு அரசியல் தெளிவு அதிகம்: ஜேம்ஸ் வசந்தன்

image

விஜய்க்கு அரசியல் ரீதியாக அறிவுரை சொல்லும் இடத்தில் தான் இல்லை என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், மற்ற யாரையும் விட விஜய்க்கு அரசியல் தெளிவு அதிகம் இருப்பதாகக் கூறினார். மக்களால் சகித்துக்கொள்ள முடியாத விஷயங்களை மாற்ற விஜய் முயற்சிப்பதாகத் தெரிவித்த அவர், அரசியலில் அவரின் வெற்றியை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

News June 22, 2024

ஜூலை 8 முதல் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு

image

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற இருந்த ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தள்ளிப்போனது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில், பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8 முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

News June 22, 2024

ஆண்டுதோறும் அதிகரிக்கும் UPI பணப் பரிவர்த்தனை

image

இந்தியாவில் UPI பணப் பரிவர்த்தனை ஆண்டுதோறும் 50% உயர்ந்து வருவதாக நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. 2023இல் 11,768 கோடி முறை இருந்த UPI பரிவர்த்தனை, கடந்த ஏப்ரலில் ஒரே மாதத்தில் மட்டும் 1,330 கோடி முறையாக உயர்ந்துள்ளது. UPI பரிவர்த்தனையில் GPay, Phonepe, paytm செயலிகள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அந்த செயலிகள் மூலம் 96% பரிவர்த்தனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

News June 22, 2024

அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிக்காக ₹1000 கோடி

image

தமிழக அரசுப் பள்ளிகளில் கழிப்பறை, ஆய்வகம், வகுப்பறைகள் கட்டுவதற்கு, நடப்பாண்டில் ₹1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும், பள்ளிகளின் சுற்றுச்சுவர் மற்றும் வகுப்பறை கட்டடங்களின் சுவர்கள் மேம்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

error: Content is protected !!