India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜார்கண்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே தேர்வு எழுதியவர்கள் 4 பேர் உட்பட 13 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த விவகாரத்தில் தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. முக்கிய குற்றவாளியான சிக்கந்தர், முறைகேட்டில் ஈடுபட்டு பல சொத்துகள் வாங்கி குவித்துள்ளார். ஒரு வினாத்தாளுக்கு அவர் ₹40 லட்சம் வரை பெற்றிருக்கிறார்
தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பை முழுமையாக மாற்ற மத்திய அரசு குழு அமைத்துள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் பணிகளை ஆய்வு செய்து, மேம்படுத்துவதற்காக, 2 மாதங்களில் அறிக்கை அளிக்கவும் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீட் முறைகேடுகளைத் தொடர்ந்து இக்குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உ.பி. காவலர் தேர்வில் வினாத்தாளை கசியவிட்ட ரவி அட்ரி கும்பலுக்கு நீட் வினாத்தாள் கசிவிலும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் வினாத்தாள் உ.பி.யில் இருந்து பீகாருக்கு அனுப்பப்பட்டதாகவும், அதற்கு சஞ்சீவ் முக்யா மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து முக்யாவின் வீட்டில், பிஹார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கிரிக்கெட் வரலாற்றில் சில வீரர்கள் தனிப்பட்ட சாதனைகளைப் படைத்துள்ளனர். அதுபோன்ற ஒரு சாதனையை இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் தன்னகத்தே வைத்துள்ளார். 2001இல் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில், அந்த அணியை சீட்டுக்கட்டைப் போல சிதறடித்தார். 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, ஜிம்பாப்வேயின் 9 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த சாதனை 23 ஆண்டுகளைக் கடந்தும் முறியடிக்கப்படவில்லை.
கிராமங்களில் மக்கள் உணவுப் பொருட்களை எளிதாக பெறும் வகையில், ₹60 கோடி மதிப்பீட்டில் முழு நேரம் இயங்கும் 500 நியாய விலைக்கடைகள் கட்டப்படும். 5,000 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் இணையம் மூலம் தானியங்கி ஆன்/ஆப் இயக்க அமைப்புகள் நிறுவப்படும். மேலும், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் புனரமைப்புப் பணிகள் ₹100 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில், இந்திய பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரின் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ச்சிக்கு வங்கதேசம் மிகவும் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இன்றைய டி20 உலகக்கோப்பையில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதவுள்ளதை குறிப்பிட்ட அவர், இரு அணிகளுக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் துறைகளில் 3,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். பேரவையில் பேசிய அவர், காலியாக உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் முறையான வழிமுறைகளை பின்பற்றி, பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார். மேலும், வீதிகளில் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டால் முதல்முறை ₹5000, மறுமுறை பிடிபட்டால் ₹10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கம்போடியாவின் அங்கோர்வார் வாட்டில் உள்ள விஷ்ணு கோயில், 16.26 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. உலகிலேயே இக்கோயில்தான் மிகப்பெரிய இந்து கோயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கடுத்து 2வது பெரிய கோயிலாக அமெரிக்காவில் உள்ள சுவாமிநாராயண் அக்சார்தாம் கோயிலும் ( 6.55 லட்சம் சதுர மீட்டர்), 3ஆவது மிகப்பெரிய கோயிலாக ஸ்ரீரெங்கம் கோயிலும் (6.31 லட்சம் சதுர மீட்டர்) கருதப்படுகிறது.
நகர்ப்புறங்களில் சுற்றித் திரியும் மாடுகளை, அதன் உரிமையாளர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் ஏலத்தில் விடப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு முதல்முறை ₹5000, 2ஆம் முறை ₹10000 அபராதம் விதிக்கப்படும் என்றார். இதே நிலை தொடர்ந்தால் மாடுகள் ஏலம் விடப்படும் எனவும் எச்சரித்தார்.
இந்திய அணி கேப்டன் ரோஹித், கோலி ஆகியோர் பிசிசிஐயின் “ஏ பிளஸ்” பிரிவு பட்டியலில் உள்ளனர். அதன்படி அவர்களுக்கு ஆண்டுக்கு ₹7 கோடி சம்பளம் வழங்கப்படும். ஐபிஎல்லில் மும்பை அணியால் ரோஹித் ₹16 கோடிக்கும், ஆர்சிபி அணியால் கோலி ₹15 கோடிக்கும் வாங்கப்பட்டுள்ளனர். இதுதவிர பல விளம்பரங்களிலும் நடிக்கின்றனர். கோலிக்கு ₹770 கோடிக்கும், ரோஹித்துக்கு ₹183 கோடிக்கும் சொத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.